Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பேசில் ஜோசஃபின் மரணமாஸ் படத்தை தடை செய்த சவுதி அரேபியா, குவைத் – காரணம் இது தான்!

Saudi Arabia, Kuwait Banned Maranamass: குவைத்தின் தணிக்கை சட்டங்கள் காரணமாக, படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாதியில் சில காட்சிகளை வெட்ட வேண்டியிருந்தது. இந்த எடிட்டிங் படத்தின் ஓட்டத்தை கெடுக்காது என்று நம்புகிறோம். அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து இதை ஆதரிக்கவும் என்று மரணமாஸ் படத்தின் தயாரிப்பாளர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

பேசில் ஜோசஃபின் மரணமாஸ் படத்தை தடை செய்த சவுதி அரேபியா, குவைத் – காரணம் இது தான்!
மரணமாஸ்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Apr 2025 10:37 AM

நடிகர் பேசில் ஜோசஃபின் (Basil Joseph) மரணமாஸ் (Maranamass) திரைப்படம் சமூக வலைதளம் முழுவதும் தற்போது வைராலி வருகின்றது. படத்தில் உள்ள நடிகர்களில் ஒருவரின் திருநங்கை அடையாளத்தைக் கருத்தில் கொண்டு, சவுதி அரேபியா மற்றும் குவைத் நாடுகளில் (Saudi Arabia and Kuwait) இந்தப் படம் தடை செய்யப்பட்டுள்ளது. குவைத்தின் தணிக்கைச் சட்டங்கள் காரணமாக, படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாதியில் சில காட்சிகளை வெட்ட வேண்டியிருந்தது. இந்த எடிட்டிங் படத்தின் ஓட்டத்தை கெடுக்காது என்று நாங்கள் நம்புகிறோம். அதனால் அனைவரும் திரையரங்குகளுக்குச் சென்று இந்தப் படத்தை ஆதரிக்க வேண்டும் என்று படக்குழுவினர் கேட்டுக்கொண்டனர். ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு வியாழக்கிழமை படம் வெளியான நிலையில், தடை மற்றும் தணிக்கை தேவை குறித்து தயாரிப்பு நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், படத்தின் இயக்குனர் சிவபிரசாத் கூறியதாவது தற்போது, ​​மரணமாஸ் படத்தை சவுதி அரேபியா மற்றும் குவைத்தில் வெளியிட முடியாது. சவுதி சென்சார் போர்டிலிருந்து பெறப்பட்ட தகவல் என்னவென்றால், நடிகர்களில் ஒரு திருநங்கை இருப்பதால் அங்கு படத்தை வெளியிட முடியாது.

படத்தில் உள்ள திருநங்கை காட்சிகளை நீக்குமாறு குவைத்திலிருந்து எங்களுக்கு உத்தரவு வந்துள்ளது. அவர்களின் பாகங்கள் நீக்கப்பட்டால், அதை வெளியிடலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் படத்தை சவுதி அரேபியாவில் வெளியிட முடியாது என்று கூறினார் என்றும் தெரிவித்துள்ளார்.

சிவபிரசாத் இயக்குநராக அறிமுகமாகும் மரணமாஸ் திரைப்படத்தை நடிகர் டொவினோ தாமஸ், ரபேல் பொழொலிபரம்பில், டிங்ஸ்டன் தாமஸ் மற்றும் தன்சீர் சலாம் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்திய தணிக்கை வாரியத்திடமிருந்து யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தில் பேசில் ஜோசஃப் உடன் இணைந்து ராஜேஷ் மாதவன், சுரேஷ் கிருஷ்ணா, சிஜு சன்னி, அனிஷ்மா அனில்குமார் மற்றும் பலர். சிஜு சன்னி என பலர் நடித்துள்ளனர். முன்னதாக படத்தில் இருந்து பேசில் ஜோசஃபின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. காரணம் பேசில் ஜோசஃபின் வித்யாசமான தோற்றம்.

இந்தப் படம் ஒரு சைக்கோ கில்லர் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் காமெடியும் கலந்துள்ளது என்று படக்குழு முன்னதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தது. இந்த 2025-ம் ஆண்டின் தொடக்கத்தில், வினீத் ஸ்ரீனிவாசனின் ஒரு ஜாதி ஜாதகம் திரைப்படம் பெரும்பாலான வளைகுடா நாடுகளில் அதன் LGBTQIA+ குறிப்புகளுக்காக தடை செய்யப்பட்டது. ஆனால் இந்தத் தடை ஓரினச்சேர்க்கையைக் குறிப்பிடுவதற்காக வந்தது, அது எவ்வாறு சித்தரிக்கப்பட்டது என்பதற்காக அல்ல என்பது குறிப்பிடதக்கது.

எலுமிச்சையை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? ஆச்சரிய தகவல்!
எலுமிச்சையை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? ஆச்சரிய தகவல்!...
சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!
சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!...
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி...
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்...
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!...
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!...
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?...
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?...
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!...
பணக்காரர்களின் கடன் வாங்கும் யுக்தி - வரியைத் தவிர்க்க செம பிளான்
பணக்காரர்களின் கடன் வாங்கும் யுக்தி - வரியைத் தவிர்க்க செம பிளான்...
தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதம்! வேலை காட்டும் வெயில்..!
தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதம்! வேலை காட்டும் வெயில்..!...