வடிவேலுவால் கடுப்பான சரோஜா தேவி… ஆதவன் பட ஷூட்டிங்கில் நடந்தது என்ன?
Saroja Devi was upset with Vadivelu: திருமணத்திற்கு பிறகு நாயகியாக நடிக்காமல் சிறிது காலம் இருந்த சரோஜா தேவி ஹீரோவின் அம்மா அல்லது பாட்டி கதாப்பத்திரங்களில் நடிக்க தொடங்கினார். அப்படி அவர் நடித்தப் படம் தான் சூர்யாவின் நடிப்பில் வெளியான ஆதவன். இந்தப் படத்தில் சூர்யாவின் பாட்டியாக நடித்திருப்பார் சரோஜா தேவி.

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான ஆதவன் (Aadhavan) படத்தின் போது பழம்பெரும் நடிகை சரோஜா தேவியை (Saroja Devi) நடிகை வடிவேலு (Vadivelu) கிண்டலடித்தபோது சரோஜா தேவி கோபமாகிவிட்டதாக நடிகரும் இயக்குநருமான ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் கன்னடத்து பைங்கிளி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்துள்ளார். சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த இவர் 200-ம் அதிகமான படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர். இயக்கி நடித்த நாடோடி மன்னன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார் நடிகை சரோஜா தேவி. அதனை தொடர்ந்து பல படங்களில் எம்.ஜி.ஆர் உடன் ஜோடியாக நடித்துள்ளார். எம்.ஜி.ஆர். மட்டும் இன்றி சிவாஜி கணேஷன், ஜெமினி கணேசன் ஆகியோரது படங்களிலும் நாயகியாக நடித்துள்ளார் சரோஜா தேவி.
தமிழில் சுமார் 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் மற்ற மொழிகளில் சேர்த்து சுமார் 200 படங்களில் நடித்துள்ளார். வாழ்நாள் சாதனையாளர், பத்மஸ்ரீ, பத்மபூஷன் என 3 தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார் சரோஜா தேவி. இவர் எம்.ஜி.ஆர் உடன் மட்டும் 26 படங்களும் சிவாஜி உடன் 22 படங்களிலும் இணைந்து நடித்துள்ளார்.
இந்த இரண்டு முன்னணி நடிகர்கள் மட்டும் இன்றி ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், முத்துராமன், ஏ. வி. எம். ராஜன், ரவிச்சந்திரன் ஆகியோருடனும் நாயகியாக நடித்துள்ளார் சரோஜா தேவி. 1967-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.
2009-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். படத்திற்கு ரமேஷ் கண்ணா திரைக்கதை எழுதியிருந்தார். சூர்யா நாயகனாக நடித்த இந்தப் படத்தில், நயன்தாரா, வடிவேலு, மலையாள நடிகர் முரளி, ஆனந்த் பாபு, ரமேஷ் கண்ணா, மனோ பாலா, ராகுல் தேவ், சயாஜி சிண்டே ஆகியோரும் நடித்திருந்தனர்.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்து வெளியிட்டிருந்தார். இந்தப் படத்தில் வரும் காமெடி காட்சி ஒன்றில் நடிகர் வடிவேலு சரோஜா தேவியின் மேக்கப்பை கிண்டலடிக்கும் விதமாக வசனம் ஒன்றை பேசியிருப்பார். அதற்கு சரோஜா தேவி கோபம் அடைந்ததாக நடிகர் ரமேஷ் கண்ணா முன்னதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அவர் அந்த பேட்டியில் கூறியதாவது, இந்த காட்சி முடித்தப் பிறகு சரோஜா தேவி தனக்கு போன் பன்னி என்ன ரமேஷ் கண்ணா நான் உன்கிட்ட நடிக்க வாய்ப்பு கேட்டனா? என்ன கிண்டல் அது. நான் என்ன மனோரமா மாதிரி காமெடி நடிகையா நான் ஹீரோயின் என்று கோபமாக பேசியதாக ராமேஷ் கண்ணா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.