Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Cinema Rewind : ’எம். மகன் படத்தில் பிடிக்காத விஷயம்’ – நடிகை சரண்யா பொன்வண்ணன் ஓபன் டாக்!

Actress Saranya Ponvannan : தமிழ் சினிமாவில் பிரபல கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். 80 மற்றும் 90ஸ் சினிமாவில் கதாநாயகியாக கலக்கிவந்த இவர் தற்போது முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இவர்எம்டன் மகன் படத்தில் தண்ணீர் குழாய் அடியில் உருளும்படி எடுக்கப்பட்ட காட்சி குறித்து பேசிய விஷயம் வைரலாகி வருகிறது.

Cinema Rewind : ’எம். மகன் படத்தில் பிடிக்காத விஷயம்’ – நடிகை சரண்யா பொன்வண்ணன் ஓபன் டாக்!
பரத் மற்றும் சரண்யா பொன்வண்ணன்Image Source: Social media
barath-murugan
Barath Murugan | Updated On: 14 Apr 2025 15:01 PM

நடிகை சரண்யா பொன்வண்ணன் (Saranya Ponvannan) கடந்த 1987ம் ஆண்டு நடிகர் கமல் ஹாசனின் (Kamal Haasan) நடிப்பில் வெளியான நாயகன் (Nayagan) படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam)  இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர் கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என பல்வேறு மொழிகளிலும் படங்களில் நடித்து வந்தார். 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் சிறந்த நடிகையாக கொடிகட்டி பறந்தார். மேலும் இவர் கடந்த 1994 ஆண்டிற்கு பின் நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை தவிர்த்தார். அதை தொடர்ந்து சுமார் 8 வருடங்களுக்கும் மேலாக படங்களில் நடிக்காமல் இருந்தார்

அதன் பிறகு 2003ம் ஆண்டு வெளியான சிம்புவின் “அலை” படத்தின் மூலம் மீண்டும் படங்களில் நடிப்பதை தொடர்ந்தார். படங்களில் அம்மா கதாபாத்திரம் அக்கா கதாபாத்திரம் போன்ற ரோலில் நடிக்க தொடங்கினார்.இவர் ராம், வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் அம்மா ரோலில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கத இடம் பிடித்தார். படங்களில் அம்மா கதாபாத்திரம் என்ற நம் நினைவிற்கு வருவதே நடிகை சரண்யா பொன்வண்ணன்தான். மேலும் இவரின் முன்னணி நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த படம் எம்டன் மகன்.

கடந்த 2006ம் ஆண்டு வெளியான இப்படத்தில் நடிகர் பரத்தின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். மேலும் இவர் அந்த படத்தில் தண்ணீர் குழாயின் அடியில் உருண்ட காட்சி குறித்து பேசிய விஷயம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை சரண்யா பொன்வண்ணன் சொன்ன விஷயம் ;

முன்னதாக பேசிய வீடியோவில் நடிகை சரண்யா பொன்வண்ணன் எம்டன் மகன் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அவர் அதில் “இயக்குநர் திரு முருகன் மிகவும் தங்கமானவர், எம்டன் மகன் படத்தில் நான் கஷ்டப்பட்ட ஒரே காட்சி என்னவென்றால், குன்றக்குடி கோவில் அடிவாரத்தில் தண்ணீர் குழாயின் அருகில் உருண்ட காட்சிதான். நான் அந்த காட்சியில் நடிக்கும்போது பிடிக்காமல்தான் செய்தேன், ஆனால் அதுதான் எனக்கு மாநில அளவிலான விருதை பெற்றேன்.

எனக்கு மண் அல்லது தண்ணீர் மேலேபட்டால் பிடிக்காது, நான் முதலில் நடிக்கமாட்டேன் என்றுதான் கூறினேன். ஆனால் வடிவேலு நான் நடிக்கிறேன் என்று கூறினார். அனால் இயக்குனர் திரு முருகன் மேம் நீங்க பண்ணத்தான் இந்த சீன நன்றாக இருக்கும் என என்னிடம் வேண்டி கேட்டார். பின் தலைவிதியை என்றுதான் அந்த காட்சியில் நடித்தேன்” என்று நடிகை சரண்யா பொன்வண்ணன் தெரிவித்திருந்தார்

இதுபோல் தான் நானும்! கழிப்பறை காகிதத்தில் ராஜினாமா லெட்டர்..!
இதுபோல் தான் நானும்! கழிப்பறை காகிதத்தில் ராஜினாமா லெட்டர்..!...
இனி வாட்ஸ்அப் வீடியோ காலில் ஜூம் பண்ணலாம் - செம அப்டேட்!
இனி வாட்ஸ்அப் வீடியோ காலில் ஜூம் பண்ணலாம் - செம அப்டேட்!...
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு : ராகுல் - சோனியா பெயர் சேர்ப்பு
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு : ராகுல் - சோனியா பெயர் சேர்ப்பு...
யோகாவுக்கு உலகளவில் கிடைத்த அங்கீகாரம்.. பதஞ்சலி செய்த சம்பவம்!
யோகாவுக்கு உலகளவில் கிடைத்த அங்கீகாரம்.. பதஞ்சலி செய்த சம்பவம்!...
ஒரே கட்டமாக 2.25 கோடி? மாதம் 84,000? எந்த ஓய்வூதியம் சிறந்தது?
ஒரே கட்டமாக 2.25 கோடி? மாதம் 84,000? எந்த ஓய்வூதியம் சிறந்தது?...
குட் பேட் அக்லி சம்பவம்.. 5 நாட்களில் ரூ.100 கோடி வசூல்!
குட் பேட் அக்லி சம்பவம்.. 5 நாட்களில் ரூ.100 கோடி வசூல்!...
காயத்தால் அவதிப்படும் தோனி.. மும்பைக்கு எதிராக களமிறங்கமாட்டாரா?
காயத்தால் அவதிப்படும் தோனி.. மும்பைக்கு எதிராக களமிறங்கமாட்டாரா?...
அதர்வாவின் முதல் படம் 'பானா காத்தாடி' இல்லை.. எந்த படம் தெரியுமா?
அதர்வாவின் முதல் படம் 'பானா காத்தாடி' இல்லை.. எந்த படம் தெரியுமா?...
ஏப்ரல் 17ம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்..!
ஏப்ரல் 17ம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்..!...
செல்வத்துக்கான அறிகுறி.. இப்படியெல்லாம் கனவு வருதா?
செல்வத்துக்கான அறிகுறி.. இப்படியெல்லாம் கனவு வருதா?...
கோடையில் தொல்லை தரும் தலை அரிப்பு.. ஈசியா சரிசெய்ய இலை டிப்ஸ்!
கோடையில் தொல்லை தரும் தலை அரிப்பு.. ஈசியா சரிசெய்ய இலை டிப்ஸ்!...