சமந்தா மிஸ் செய்த ஷங்கர், மணிரத்னம் படங்கள் – இவ்ளோ படங்களா?

இயக்குநர் ராஜமௌலியின் (Rajamouli) நான் ஈ தமிழ் மற்றும் தெலுங்கில் பெரும் வெற்றிபெற்று அவரை முன்னணி ஹீரோயினாக மாற்றியது. இந்த நிலையில் தமிழ், தெலுங்கில் சில முக்கியமான படங்களின் வாய்ப்பை அவர் நிராகரித்திருக்கிறார். அந்தப் படங்கள் குறித்து பார்க்கலாம்.

சமந்தா மிஸ் செய்த ஷங்கர், மணிரத்னம் படங்கள் - இவ்ளோ படங்களா?

சமந்தா

Published: 

02 Apr 2025 10:15 AM

இயக்குநர் கௌதம் மேனன் (Gautham Vasudev Menon) இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவான படம் விண்ணைத் தாண்டி வருவாயா. தெலுங்கில் ஏ மாயா சேசாவே என்ற பெயரில் உருவான இந்தப் படத்தில் நாக சைதன்யா (Naga Chaitanya) – சமந்தா ஜோடியாக நடித்தனர். அந்தப் படம் தான் சமந்தாவுக்கு முதல் படம். விண்ணைத் தாண்டி வருவாயா படத்திலும் சிம்பு இயக்கும் படத்தின் ஹீரோயினாக நடித்திருப்பார். இந்தப் படம் வெற்றிபெற்று சமந்தாவுக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. பின்னர் தெலுங்கில் வாரிசு பட இயக்குநர் வம்சியின் இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர் ஜோடியாக சமந்தா நடித்த பிருந்தாவனம் வெற்றிபெற்று அவரை கமர்ஷியல் ஹீரோயினாக மாற்றியது. அதன் பின்னர் இயக்குநர் ராஜமௌலியின் (Rajamouli) நான் ஈ தமிழ் மற்றும் தெலுங்கில் பெரும் வெற்றிபெற்று அவரை முன்னணி ஹீரோயினாக மாற்றியது. இந்த நிலையில் தமிழ், தெலுங்கில் சில முக்கியமான படங்களின் வாய்ப்பை அவர் நிராகரித்திருக்கிறார். அந்தப் படங்கள் குறித்து பார்க்கலாம்.

கடல் (Kadal)

மணிரத்னம் தனது கடல் படத்துக்கு முதலில் சமந்தாவைத் தான் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால் அவருக்கு தோல் சம்மந்தமான பிரச்னைகள் ஏற்பட்டதன் காரணமாக அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகு அவருக்கு பதிலாக நடிகை ராதாவின் இளைய மகள் துளசி ஹீரோயினாக நடித்தார். அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக்கும் ராதாவும் அறிமுகமானது போல அவரது வாரிசுகள் கௌதம் கார்த்திக், துளசி அறிமுகமான படமாக அது அமைந்தது.

ஐ (I)

 

கடல் படத்தின் போது தான் ஷங்கரின் ஐ படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார் சமந்தா. ஆனால் அந்தப் படத்திலும் அவரால் நடிக்க முடியாமல் போக, அவருக்கு பதிலாக எமி ஜாக்சன் அந்த வேடத்தில் நடித்தார். இந்தப் படத்தில் அவர் நடித்திருந்தால் அவரது நடிப்பில் வெளியான பிரம்மாண்ட படமாக ஐ அமைந்திருக்கும்.

எவடு (Yevvadu)

வாரிசு இயக்குநர் வம்சி இயக்கத்தில் ராம் சரண் – அல்லு அர்ஜுன் இணைந்து நடித்த படம். பேஸ் ஆஃப் படத்தின் பாதிப்பில் இந்தப் படத்தை வம்சி எடுத்திருப்பார். பிருந்தாவனம் படத்துக்கு பிறகு மீண்டும் சமந்தாவும் இயக்குநர் வம்சியும் இணையவிருந்த படம். ஆனால் இந்தப் படத்தில் அவரால் தொடர முடியவில்லை.

புரூஸ் லீ (Bruce Lee)

ராம் சரண் ஹீரோவாக நடித்திருந்த படத்தில் அருண் விஜய் வில்லனாக மிரட்டியிருப்பார். இந்தப் படத்திலும் முதலில் சமந்தா தான் ஒப்பந்தமானார். ஆனால் வேறு படங்களில் பிஸியாக இருந்ததால் அவரால் இந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை. அவருக்கு பதிலாக ரகுல் ப்ரீத் சிங் நடித்தார்.

தசரா (Dasara)

நானி ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படத்தை ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியிருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு பிதலாக முதலில் சமந்தா தான் நடிக்கவிருந்தார். அப்போது மயோசிடிஸ் என்ற நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு காரணமாக அவரால் இந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

மாயா (Maya)

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா, ஆரி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ஹாரர் திரில்லர் படமான மாயா நல்ல வெற்றியைப் பதிவு செய்தது. நயன்தாராவுக்கு முன்னதாக இந்தப் படத்தின் கதையை சமந்தாவுக்கு சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த நேரத்தில் சோலோ ஹீரோயினாக நடிக்க சமந்தா தயக்கம் காட்டியிருக்கிறார்.