சல்மான் கானின் சிக்கந்தர் படம் இதுவரை வசூலித்தது எவ்வளவு தெரியுமா?
Sikandar Movie Box Office Collection: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் சல்மான் கான் நடிப்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் சிக்கந்தர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ஆக்ஷன் ட்ராமா படம் வசூலில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் (AR Murugadoss) இயக்கத்தில் மிகவும் பிரபலமான ஆக்ஷன் பொழுதுபோக்கு படமான சிக்கந்தர் (Sikandar) படம் இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் தற்போது ரூபாய் 100 கோடி வசூல் மைல்கல்லைத் தொட்டுள்ளது. ஆனால் இது சல்மான் கானின் (Salman Khan) மற்ற படங்களின் குறிப்பிட்ட வசூலை விட குறைவாகவே உள்ளது. குறிப்பாக சல்மான் கான் ஈத் பண்டிகை வெளியீட்டின் வரலாறு மற்றும் அவரின் ரசிகர்களுக்கு பிடித்த ஆக்ஷன் காட்சிகள் இருந்தபோதிலும் சிக்கந்தர் வசூலில் தொய்வை சந்தித்தது. படம் வெளியாகி 11 ஆம் நாள் தான் ரூபாய் 107.1 கோடியை எட்டியுள்ளது என்பது அவரது ரசிகர்களுக்கும், படக்குழுவினருக்கும் வேதனையளிக்கும் செய்தியாகவே உள்ளது. சமீபத்தில் வெளியான செய்திகளின்படி, படம் புதன்கிழமை 9-ம் தேதி ஏப்ரல் மாதம் 2025-ம் ஆண்டு ரூபாய் 1.35 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை 8-ம் தேதி ஏப்ரல் மாதம் 2025-ம் ஆண்டு ரூபாய் 1.5 கோடியிலிருந்து சற்றுக் குறைந்து காணப்பட்டது. இந்த சரிவு போக்கு தொடர்ந்து படம் வெளியானதில் இருந்து நீடித்து வருவதால் சிக்கந்தர் அதன் பாக்ஸ் ஆபிஸில் பெரும் சரிவை சந்தித்துள்ளது. படம் வெளியான அதன் முதல் நாளில் மார்ச் மாதம் 30-ம் தேதி 2025-ம் ஆண்டு ரூபாய் 26 கோடியுடன் நல்ல தொடக்கத்தை வெளிப்படுத்தியது.
சிக்கந்தர் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
He’s got the charm, the wit, the heart ❤️
Catch #Sikandar at a theatre near you!Book your tickets NOW! https://t.co/MTFRl0BYb0 https://t.co/HkghlbgFCU @BeingSalmanKhan In #SajidNadiadwala’s #Sikandar
Directed by @ARMurugadoss @iamRashmika #Sathyaraj @TheSharmanJoshi… pic.twitter.com/Qx5JdjAXsm— Nadiadwala Grandson (@NGEMovies) April 9, 2025
அதனைத் தொடர்ந்து ஈத் திங்கட்கிழமை 31-ம் தேதி மார்ச் மாதம் 2025-ம் ஆண்டு ரூபாய் 29 கோடியை வசூலில் எட்டியது. இருப்பினும், அதைத் தொடர்ந்து ஒரு கூர்மையான சரிவு ஏற்பட்டது – செவ்வாய்க்கிழமை 1-ம் தேதி ஏப்ரல் மாதம் 2025-ம் ஆண்டு ரூபாய் 19.5 கோடி மற்றும் புதன்கிழமை 2-ம் தேதி ஏப்ரல் மாதம் 2025-ம் ஆண்டு ரூபாய் 9.75 கோடி வசூலித்தது.
முதல் வாரத்தில் ரூபாய் 100 கோடி வசூல் செய்யத் தவறிய இந்தப் படம், முதல் ஏழு நாட்களிலும் ரூபாய் 90 கோடி வசூலித்தது. குறிப்பாக ஈத் பண்டிகையின் போது, சல்மான் கானின் நடிப்பில் வெளியாகி படம் தோல்வியடைந்தது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்து.
இந்தப் படத்தில் நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர் இதில் சல்மான் கானின் மனைவியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகை காஜல் அகர்வால் மற்றும் சத்யராஜ் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.