தமன்னாவின் அசத்தலான நடனத்தில் வெளியானது ரெய்டு 2 படத்தின் பாடல் வீடியோ

RAID 2: NASHA (Song) | அஜய் தேவ்கன் ஒரு நேர்மையான வருமான வரித்துறை அதிகாரியாக நடிக்கும் ரெய்டு 2 திரைப்படத்தின் முதல் பாடலை வெள்ளிக்கிழமை 11-ம் தேதி ஏப்ரல் மாதம் 2025-ம் ஆண்டு டி-சீரிஸ் வெளியிட்டது. நாஷா என்று தலைப்பிடப்பட்ட இந்தப் பாடல் வைரலாகி வருகின்றது.

Published: 

11 Apr 2025 14:39 PM

கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் அஜய் தேவ்கான் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தப் படம் ரெய்ட். இந்த நிலையில் இயக்குநர் ராஜ் குமார் குப்தா இயக்கத்தில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. இந்தப் படத்தில் அஜய் தேவ்கான் உடன் இணைந்து நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படம் வருகின்ற மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தில் இருந்து நாஷா என்ற பாடல் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு நடிகை தமன்னா பாட்டியா நடனமாடியுள்ளார். முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திலும் நடிகை தமன்னா ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி சென்றது குறிப்பிடதக்கது.

 

Video Credits: T-Series