Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆர்ஜே டூ ஆக்டர்… குட் பேட் அக்லியில் மிரட்டும் வில்லன்… யார் இந்த அர்ஜுன் தாஸ்

RJ turned Actor who is Arjun Das: இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தில் அஜித் குமாருக்கு வில்லனாக நடிக்கும் அர்ஜுன் தாஸ் யார் என்பது குறித்தும் அவரது சினிமா பயணம் குறித்தும் தற்போது பார்க்கலாம். நாயகனாக நடித்து ரசிகைகளை கொண்டிருந்த ட்ரெண்டை மாற்றி வில்லனாக நடித்து தமிழ் ரசிகைகளைப் பெற்றவர் அர்ஜுன் தாஸ்.

ஆர்ஜே டூ ஆக்டர்… குட் பேட் அக்லியில் மிரட்டும் வில்லன்… யார் இந்த அர்ஜுன் தாஸ்
அர்ஜுன் தாஸ்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Apr 2025 11:24 AM

அர்ஜுன் தாஸ் தனது கரகரப்பான குரலிலும், அசத்தலான நடிப்பாலும் ரசிகர்கள் பலரின் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளார். நடிகர் அர்ஜுன் தாஸ் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் ஒரே நேரத்தில் பணியாற்றி வருகிறார். அவரது தனித்துவமான நடிப்பிற்காக மிகப்பெரிய வரவேற்புகளையும் பாராட்டுகளையும் பெற்றார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் அட்லி போன்ற திரைப்பட இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றிய பிறகு, அவர் தற்போது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் குட் பேட் அக்லி படத்தில் பணியாற்றி உள்ளார். தனது ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நடிகர் அர்ஜுன் தாஸ் குறித்து ரசிகர்களுக்கு தெரிந்த விசயங்களும் தெரியாத பல விசயங்களையும் தற்போது பார்க்கலாம். ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு இவரது நடிப்பில் குட் பேட் அக்லி படம் வெளியாக உள்ளது குறிப்பிடதக்கது.

யார் இந்த அர்ஜுன் தாஸ்?

அக்டோபர் மாத 5-ம் தேதி 1990-ம் ஆண்டு பிறந்தார் அர்ஜுன் தாஸ். சென்னையில் பிறந்து வளர்ந்த அர்ஜுன் தாஸ் ஆரம்பத்தில் துபாயில் வங்கியில் பணியாற்றினார். அங்கு வேலை செய்துக்கொண்டிருக்கும் போதே சினிமா மீது இருந்த அவரது ஆர்வம் மீண்டும் அவரைத் தமிழ் நாட்டிற்கே திரும்பச் செய்தது.

இந்து வந்த அவர் தனக்கான நடிப்பு வாய்ப்புகளைத் தேடத் தொடங்கினார். திரைப்பட வாய்ப்புகளைப் பெறுவதற்கு முன்பு அர்ஜுன் தாஸ் தனது வாழ்க்கையிலும் உடலிலும் பல பெரிய மாற்றங்களைச் செய்துள்ளார். அதில் அர்ஜுன் தாஸ் 40 கிலோ எடையைக் குறைத்ததும் அடங்கும்.

ரேடியா ஜாக்கியாக பணியை தொடங்கிய அர்ஜுன் தாஸ்:

தனது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் மிகவும் சுவாரஸ்யமாக நடிகர் அர்ஜுன் தாஸ் ஒரு ரேடியோ ஜாக்கியாக வேலை செய்தார். நடிகர் அர்ஜுன் தாஸ் 2012-ம் ஆண்டு பெருமான் என்ற சுயாதீன திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பை தொடங்கினார். அதைத் தொடர்ந்து இயக்குநர் அட்லி தயாரித்த அந்தகாரம் என்ற மற்றொரு திரைப்படத்திலும் நடித்தார்.

இந்த நிலையில்தான் நடிகர் அர்ஜுன் தாஸ் ரேடியோ ஒன்றில் சேர்ந்து டிரைவ் ஷோவை தொகுத்து வழங்கத் தொடங்கினார். நடிகர் அர்ஜுன் தாஸ் தனது இந்த வேலையை வாழ்வாதாரத்திற்காகவே என்று அடிக்கடி பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். நடிகர் அர்ஜுன் தாஸ் தனது கரடுமுரடான குரலால் தனக்கென ஒரு பெயரைப் பெற்றார்.

நடிகராக அர்ஜுன் தாஸ் எடுத்த அவதாரம்:

ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் அடுத்தடுத்து நடிப்பு வாய்ப்புகளைப் பெற்றார். அவர் கைதி படத்தி மிரட்டும் குரலில் பேசி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் எல்.சி.யூ-வில் இடம் பிடித்தார்.

அதனை தொடர்ந்து தமிழில் அநீதி, போர், ரசவாதி ஆகிய படங்களில் நாயகனாகவும் நடித்தார் நடிகர் அர்ஜுன் தாஸ். அதனை தொடர்ந்து தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மொழியிலும் சில படங்களில் நடித்துள்ளார் நடிகர் அர்ஜுன் தாஸ்.

அர்ஜுன் தாஸ் நடிப்பில் வரவிருக்கும் படங்கள்:

நடிகர் அர்ஜுன் தாஸ் தற்போது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் குட் பேட் அக்லியில் அஜித் குமாருக்கு வில்லனாக நடித்துள்ளார். படத்தின் டிரெய்லர் வெளியானபோது அர்ஜுன் தாஸ் வில்லன் வேடத்தில் நடித்துள்ளது வெளிப்படையாக தெரிந்துள்ளது. இது தவிர பவன் கல்யாணின் வரவிருக்கும் படமான தே கால் ஹிம் ஓஜியிலும் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளது குறிப்பிடதக்கது.

மகனுக்கு பதிலாக தவறுதலாக தந்தைக்கு நடந்த அறுவை சிகிச்சை!
மகனுக்கு பதிலாக தவறுதலாக தந்தைக்கு நடந்த அறுவை சிகிச்சை!...
10 வருடத்தைக் கடந்த துல்கர் சல்மானின் ஓ காதல் கண்மணி..!
10 வருடத்தைக் கடந்த துல்கர் சல்மானின் ஓ காதல் கண்மணி..!...
கோடைகாலத்தில் குழந்தைகளை பாதிக்கும் 3 நோய்கள் !
கோடைகாலத்தில் குழந்தைகளை பாதிக்கும் 3 நோய்கள் !...
ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?
ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?...
கோடைகாலத்தில் வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
கோடைகாலத்தில் வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!...
உதடுகள் வறண்டு வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..?
உதடுகள் வறண்டு வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..?...
மணி ஹெய்ஸ்ட் படத்தின் தமிழ் ரீமேக்கா கேங்கர்ஸ் படம்?- சுந்தர் சி!
மணி ஹெய்ஸ்ட் படத்தின் தமிழ் ரீமேக்கா கேங்கர்ஸ் படம்?- சுந்தர் சி!...
வெற்றிமாறன் வழிகாட்டுதலில் ஐபோனில் உருவாகும் சினிமா !
வெற்றிமாறன் வழிகாட்டுதலில் ஐபோனில் உருவாகும் சினிமா !...
96 ஆண்டுகளாகக் குழந்தைகள் பிறக்காமல் இருக்கும் நாடு எது தெரியுமா?
96 ஆண்டுகளாகக் குழந்தைகள் பிறக்காமல் இருக்கும் நாடு எது தெரியுமா?...
குடியரசுத் தலைவர் கையால் அஜித் குமாருக்குப் பத்ம பூஷன் விருது!
குடியரசுத் தலைவர் கையால் அஜித் குமாருக்குப் பத்ம பூஷன் விருது!...
மாமல்லபுரம்: ஏப்ரல் 18ல் இலவச சுற்றுலா அனுமதி
மாமல்லபுரம்: ஏப்ரல் 18ல் இலவச சுற்றுலா அனுமதி...