Actor Sri : நடிகர் ஸ்ரீயின் உடல் நிலை எப்படி இருக்கிறது? பிரபல தயாரிப்பாளர் சொன்ன விஷயம்!

Actor Shri Health Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வந்தவர் ஸ்ரீ. இவர் வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தில் நடித்து சினிமாவில் நுழைந்தார். அதற்கு முன் தனியார் தொலைக்காட்சியில் வெளியான தொடரில் முக்கிய நடிகராக நடித்து வந்தார். மேலும் சமீபத்தில் வித்தியாசமான தோற்றத்தில் அவர் இருந்த புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வந்த நிலையில், அவரின் உடல் நிலை குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு கூறியுள்ளார்.

Actor Sri : நடிகர் ஸ்ரீயின் உடல் நிலை எப்படி இருக்கிறது? பிரபல தயாரிப்பாளர் சொன்ன விஷயம்!

நடிகர் ஸ்ரீ

Published: 

14 Apr 2025 20:38 PM

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2007ம் ஆண்டு வெளியாகி வைரலாகிய தொடரில் ஒன்று கனா காணும் காலங்கள் (Kana Kaanum Kaalangal ).  இந்த தொடரில் மிக முக்கியமான தோற்றத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீ (Sri). இவர் இந்த தொடரின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். பின் கடந்த 2012ம் ஆண்டு வெளியான வழக்கு எண் 18/9 (Vazhakku Enn 18/9) என்ற படத்தில் நடித்து சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகினார். இந்த படத்தைப் பிரபல நடிகரும், இயக்குநருமான பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்தார். இதைத் தொடர்ந்து இவர் பல படங்களில் கதாநாயகனாகவும், முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளார். மேலும் சமீபகாலமாக இவரின் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வந்தது. அந்த வீடியோவில் நடிகர் ஸ்ரீ மனநலம் பாதிக்கப்பட்டவர் போலப் பாடல்கள் பாடி மற்றும் வித்தியாசமாகப் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். அது கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் அதிர்ச்சியைத் தந்தது.

அவர் எவ்வாறு இப்படி ஆனார் என்றும் பலரும் கேள்விகள் எழுப்பி வந்தனர். மேலும் இந்த விஷயம் குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு விளக்கம் கொடுத்துள்ளார். நடிகர் ஸ்ரீயின் உடல் நிலை குறித்தும், அவர் மீதான அக்கறை குறித்தும் அவர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த பதிவு இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வெளியிட்ட பதிவு :

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவை வெளியிடத் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, அதில் “நடிகர் ஸ்ரீயின் உடல்நலம் மற்றும் அவரின் வாழ்க்கை குறித்து நாங்கள் உண்மையிலேயே அக்கறை கொண்டுள்ளோம். நாங்களும், அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் அவரை சாதாரணமாக மாற்றுவதற்கு நீண்ட காலமாக முயற்சி செய்கிறோம்.

மேலும் அவரை பற்றிய பல்வேறு கருத்துக்கள் இணையத்தளங்களில் உருவாகி வருகிறது. ஆனால், நாங்கள் ஸ்ரீயை கண்டடைந்து, மீண்டும் அவரை நல்ல உடல் நிலைக்குக் கொண்டு வருவதை, முதல் கடமையாக வைத்திருக்கிறோம். அதை அடைய யாராவது எங்களுக்கு உதவினால் மிகவும் பாராட்டிற்குரியதாக இருக்கும் என்று தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு கூறியுள்ளார்.

நடிகர் ஸ்ரீயின் வீடியோ :

நடிகர் ஸ்ரீ இதுவரை ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சோன்பப்டி, வில் அம்பு, மாநகரம் மற்றும் இறுக்கப்பற்று போன்ற திரைப்படங்களை கதநாயகனாக நடித்துள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான இறுக்கப்பற்று திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார் இவர். கடந்த 2023ம் ஆண்டு வெளியான இப்படமும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை தொடர்ந்துதான் நடிகர் ஸ்ரீயின் நிலைமை இப்படி ஆனது என திரையுலக வட்டாரங்கள் கூறி வருகின்றது. மேலும் தற்போது நடிகர் ஸ்ரீயின் உடல் நிலை முன்னேறி வருவதாகத் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவும் தெரிவித்துள்ளார்.