எங்க அப்பா அவர் அண்ணனுக்கு சப்போர்ட் பண்றாறு… குட் பேட் அக்லி சர்ச்சைக்கு பிரேம்ஜி பதில்

Actor Premji Amaran: நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்கள் அனுமதி இன்றி பயன்படுத்தியதாக அவர் காப்பி ரைட்ஸ் வழக்கு தொடர்ந்தது தொடர்பாக நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம் ஜி அமரன் பேட்டி ஒன்றில் பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

எங்க அப்பா அவர் அண்ணனுக்கு சப்போர்ட் பண்றாறு... குட் பேட் அக்லி சர்ச்சைக்கு பிரேம்ஜி பதில்

பிரேம்ஜி

Published: 

23 Apr 2025 14:48 PM

இசையமைப்பாளர், இயக்குநர் நடிகர் கங்கை அமரனின் இரண்டாவது மகனும் இயக்குநர் வெங்கட் பிரபுவின் தம்பிதான் பிரேம் ஜி அமரன். பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர் என சினிமாவில் பன்முகத் தன்மை கொண்டவராக இருக்கிறார் பிரேம் ஜி அமரன். 2007-ம் ஆண்டு இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியான சென்னை 28 படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் பிரேம் ஜி அமரன். அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான தோழா, சந்தோஷ் சுப்ரமணியம், சரோஜா, சிலம்பாட்டம், கோவா, மங்காத்தா ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இவர் நடித்த காமெடி கதாப்பாத்திரங்கள் அனைத்தும் இன்றளவும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

குறிப்பாக இவர் பேசிய என்ன கொடும சார் இது?, எவ்வளவோ பன்னிட்டோம் இத பன்னமாட்டோமா? இந்த மாதிரியான வசங்கள் தொடர்ந்து மீம்ஸ்களிலும் ரீல்களிலும் மக்களிடையே இன்றும் உலா வருகின்றது. தொடர்ந்து தனது கமெடி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.

இறுதியாக கடந்த 2024-ம் ஆண்டு இவர் தனது அண்ணன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்திருந்தார். இதில் விஜயின் மச்சானாக நடிகர் பிரேம் ஜி நடித்திருந்தார். படத்தில் இரண்டாவது பகுதியில் பிரேம் ஜி வந்தாலும் அவரது கதாப்பாத்திரத்தை சிறப்பாகவே நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கோலிவுட் சினிமாவில் மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலராக வலம் வந்த நடிகர் பிரேம் ஜி கடந்த ஆண்டு இந்து என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துக்கொண்டார். இது அப்போது தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது அவர் தனது முந்தைய படங்களுக்கு முற்றிலும் வேறுபட்ட கதாப்பாத்திரத்தில் தற்போது நடித்துள்ளார்.

அதன்படி தற்போது வல்லமை என்ற படத்தில் நடித்துள்ளார். படம் தொடர்பான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் அவர் இந்தப் படத்திற்காக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் இளையராஜா அஜித் படத்திற்கு எதிராக போட்ட வழக்கிற்கு அவரது அப்பா கங்கை அமரன் ஆதரவு தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பினர்.

இணையத்தில் வைரலாகும் பிரேம் ஜி பேசிய வீடியோ:

அதுகுறித்து பேசிய அவர், என் அப்பா அவரோட அண்ணனுக்கு சப்போர்ட் பன்றாறு. நானும் என் அண்ணனுக்கு எதாச்சும்னா சப்போர்ட் பன்னுவேன்ல அந்த மாதிரி என்று சிரித்துக்கொண்டே தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இளையராஜா பாடலால் தான் அஜித் படம் ஹிட் ஆச்சுனு சொல்றது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர் நிச்சயமாக கிடையாது. குட் பேட் அக்லி படம் ஹிட் ஆனதற்கு தல தான் காரணம். அவங்க பாட்டாலதான்னு சொல்றது எல்லாம் சும்மா என்றும் அவர் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.