பிரபுதேவா குறித்து அவரது முன்னாள் மனைவி என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா?

பிரபுதேவாவின் முன்னாள் மனைவியும், நடனக் கலைஞருமான ரம்லத் பிரபுதேவா உடனான தற்போதைய உறவு மற்றும் மகன்களான ரிஷி மற்றும் ஆதித் வாழ்க்கையில் அவர்கள் இருவரும் எப்படி இருக்கிறார்கள் என்பது குறித்து யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றது.

பிரபுதேவா குறித்து அவரது முன்னாள் மனைவி என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா?

ரம்லத், பிரபுதேவா

Updated On: 

13 Apr 2025 16:40 PM

டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்ட பிரபுதேவா (Prabhu Deva) குறித்து அவரது முன்னாள் மனைவி ராம்லத் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. பிரபுதேவாவின் சினிமா வாழ்க்கை தாண்டி தனிப்பட்ட வாழ்க்கை பெரும்பாலும் அவரது முறிந்த திருமணம், காதல் விவகாரம் என தொடர்ந்து இடம் பிடித்து வந்த நிலையில் இறுதியாக அவரது 47 வயதில் தனது குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனது கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்திகளில் இடம் பிடித்தது. தனது முதல் மனைவியுடனான விவாகரத்திற்குப் பிறகு பல ஆண்டுகளுகள் ஆகியுள்ள நிலையில் அவரது முன்னாள் மனைவியும் நடன இயக்குனருமான ரம்லத் (Ramlath) அவர் ஒரு தந்தையாக தனது பணியை எவ்வாறு செய்கிறார் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

தமிழ் சினிமா மட்டும் இன்று பான் இந்திய சினிமாவில் தனது நடனத்தால் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார் பிரபுதேவா. முழுக்க முழுக்க இந்தியில் வேலை செய்தாலும் தமிழ் சினிமாவிலும் அவ்வப்போது பிரபல நடிகர்களின் பாடல்களுக்கு நடனம் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

பிரபு தேவா உடன் அவரது மகன் நடனமாடும் வீடியோ:

பிரபுதேவாவும் ரம்லத் இருவரும் இந்து படத்தின் போது காதலிக்க தொடங்கியுள்ளனர். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக பிரபு தேவா அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்கள் பிறந்தனர். அதில் ஒரு மகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னறே உடல் நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பே பிரபுதேவா அவரது மனைவி ரம்லத் உடன் தனது திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டார். அப்போது இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. இந்த செய்தியை தொடர்ந்து பிரபுதேவாவின் காதல் வாழ்க்கை குறித்தும் தொடர்ந்து கிசுகிசுக்கள் வெளியாகிக் கொண்டே இருந்தது.

ஆனால் அதன் பிறகு பல ஆண்டுகளாக அவர் திருமணம் செய்துக்கொள்ளாமலே இருந்தார். சமீபத்தில் திருமண வாழ்க்கைக்குள் மீண்டும் அடியெடுத்து வைத்த பிரபுதேவாவிற்கு அந்த மனைவியுடன் ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு ராம்லத் பேட்டி ஒன்றை சமீபத்தில் அளித்தார்.

அதில் நடன நிகழ்ச்சியில் தனது தந்தை பிரபுதேவாவுடன் மகன் ரிஷியின் முதல் நிகழ்ச்சியைப் பற்றி வெளிப்படையாக ராம்லத் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் ரம்லத் பேசியதாவது ”நாங்கள் எங்களது மகன் குறித்து மிகவும் பெருமைப்படுகிறோம். மேலும் அவர் இத்தனை ஆண்டுகளாக நடனத்தில் ஆர்வம் காட்டவில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, இது மாறிவிட்டது, அதற்காக அவர் மிகவும் கடினமாக உழைத்து வருகிறார். அவரது தந்தையின் இரத்தம் அவருக்குள் ஓடுவதால் தான் இந்த மேஜிக் நடந்தது என்பதையும் ரம்லத் தெரிவித்தார். மேலும் விவாகர்த்திற்கு பிறகும் பிரபுதேவா தனக்கு மிகவும் ஆதரவாக இருந்ததாகவும் அவர் வெளிப்படையாக பேசினார்.