குபேரா படத்திலிருந்து வெளியானது ’போய்வா நண்பா’ லிரிக்கள் வீடியோ
Poyivaa Nanba Tamil Lyrical | இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்தப் பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார். இந்த லிரிக்கள் வீடியோவில் நடிகர் தனுஷ் நடனமாடும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள குபேரா படத்திலிருந்து ’போய்வா நண்பா’ பாடலின் லிரிக்கள் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் தனுஷின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ராயன். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்குநர் சேகர் கம்முலா உடன் கூட்டணி வைத்தார். இந்தப் படத்திற்கு குபேரா என்று பெயர் வைத்தனர். ஆனால் தனுஷின் தோற்றமோ முற்றிலும் மாறுபட்டு இருந்தது. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் நாகர்ஜூனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் படம் வருகின்ற 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தில் இருந்து போய்வா நண்பா பாடலின் லிரிக்கள் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.