Priyanka Deshpande : சைலண்டாக திருமணத்தை முடித்த பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே!
Anchor Priyanka Deshpande : தமிழ் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றிவருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்தான நிலையில், தற்போது எந்தவித அறிவிப்புகளும் இல்லாமல் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்,

தமிழ் தொலைக்காட்சியில் சீனியர் தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே ( Anchor Priyanka Deshpande) . இவர் தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியின் (Vijay TV) தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற பிரபல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வருகிறார். தொலைக்காட்சி தொகுப்பாளராகப் பல ஆண்டுகளாக பணிபுரிந்துவரும் பிரியங்கா தேஷ்பாண்டே இன்று, 2025, ஏப்ரல் 16ம் தேதி எந்தவித அறிவிப்புகளும் இல்லாமல் பிரபல தொழிலதிபர் ஒருவரைத் திருமணம் செய்துள்ளார். தொகுப்பாளினி பிரியங்காவின் திருமணம் ( wedding) எந்தவித அறிவிப்புகளும் இல்லாமல், குடும்பத்தினர் முன்னிலையில், சிம்பிளாக முடிந்துள்ளது. இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவிற்கு ஏற்கனவே திருமணமாகி, சில ஆண்டுகளில் விவாகரத்தும் ஆகியது.
அதைத் தொடர்ந்து சில வருடங்களுக்குப் பின் மீண்டும் 2வதாக திருமணம் செய்துள்ளார். தற்போது இவரின் திருமணத்திற்கு, ரசிகர்கள் மற்றும் சின்னதிரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்களை விரைவில் பிரியங்கா வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவின் திருமண வீடியோ :
Happy married Life nga ❤️ @Priyanka2804 #priyankadeshpande #priyanka #MarriedLife pic.twitter.com/atP5vMXwVV
— Mani (@manikpc2000) April 16, 2025
தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே கடந்த 2022ம் ஆண்டு நடந்த விவகாரத்திற்குப் பின் தற்போது, 2வது திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்திற்குப் பலரும் தங்களின் ஆதரவையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
முதல் திருமணம் :
பிரியங்கா தேஷ்பாண்டே கடந்த 2016ம் ஆண்டு தனது நீண்ட கால காதலரான பிரவீன் குமார் என்பவரைத் திருமணம் செய்தார். பிரவீன் குமார் பிரபல தயாரிப்பாளர் ஆவார். சுமார் 6 வருடங்கள் இணைந்து வாழ்ந்த இவர்கள், கடந்த 2022ம் ஆண்டு மன கசப்பின் காரணமாக விவாகரத்து பெற்றுக் கொண்டனர். தற்போது இரண்டு வருடத்திற்குப் பின் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துள்ளார். அவர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. தற்போது அவரின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தொகுப்பாளினியாகப் பிரியங்கா தேஷ்பாண்டே :
பிரியங்கா தேஷ்பாண்டே கடந்த 2005ம் ஆண்டு விஜய் டிவியில் வெளியான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் இருந்து, தனது சின்னதிரை வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பின் சூப்பர் சிங்கர் ஜூனியர் என்ற பாடல் நிகழ்ச்சியில், பிரபல தொகுப்பாளர் மா.கா.பாவுடன் இணைந்து, அந்த நிகழ்ச்சியைத் தொகுத்துவந்தார்.
அதைத் தொடர்ந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் அடுத்தடுத்த சீசன்களையும் தொகுத்து வந்தார். மேலும் தனி ஆளாக ஸ்டார்ட் மியூசிக் மற்றும் ஓ சொல்றியா ஓ ஓன் சொல்றியா போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளைத் தொகுத்துவந்தார். தொலைக்காட்சியில் சீனியர் தொகுப்பாளினிகளில் ஒருவராக இருந்து வருகிறார்.