நடிகை மிருணால் தாக்கூர் குறித்த ஆபாச கமெண்ட்… காட்டமாக பேசிய சின்மயி – வைரலாகும் பதிவு

Chinmayi Slams X User: மீ டூ பிரச்சனை திரைத்துறையில் வெளிப்படியாக பேசப்பட்டதில் இருந்து பாடகி சின்மயி திரைத் துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை மிருணால் தாக்கூர் குறித்து நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட கமெண்டிற்கு சின்மயி காட்டமாக பதிலளித்துள்ளார்.

நடிகை மிருணால் தாக்கூர் குறித்த ஆபாச கமெண்ட்... காட்டமாக பேசிய சின்மயி - வைரலாகும் பதிவு

சின்மயி

Published: 

10 Apr 2025 15:28 PM

சமூக வலைதளங்களில் பெண்களுக்கு ஆதரவாக தனது கருத்தைப் பேசுவதற்குப் பெயர் பெற்ற பாடகி சின்மயி ஸ்ரீபாதா (Chinmayi). 9-ம் தேதி ஏப்ரல் மாதம் நடிகை மிருணால் தாக்கூர் (Mrunal Thakur) பற்றிய ஆபாசமான பதிவைப் பகிர்ந்ததற்காக ஒரு எக்ஸ் பயனரை கடுமையாகக் கண்டித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஆபாச பதிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது. அத்தகைய பதிவின் பின்னணியில் உள்ள மனநிலையை சின்மயி விமர்சித்து பேசியுள்ளார். மேலும் அந்த மாதிரியான செயல்களில் ஈடுபடுவபர்கள் தங்களை மாற்றிக் கொள்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். அத்தகைய ஆபாச வீடியோவைக் கண்ட பிறகு சின்மயி அந்த எக்ஸ் பயனரை நேரடியாகா கேள்வி எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உங்களை மாதிரியான சிலரை உங்கள் தாயால் பெற்றெடுக்காமல் இருந்திருந்தால் உங்களைப் போன்றவர்கள் இல்லாமல் போய்விடுவார்கள் என்று நம்புகிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து பலர் சின்மயின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்து திரண்டனர். மேலும் இவ்வாறு செயல்படுபவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கும் என்று ஒருவர் கருத்து தெரிவித்தார். மற்றொருவர் கருத்தில், இவ்வாறான மனநிலை உடையவர்கள் வளர்ந்த விதம் சரியில்லை. அதனால் தான் இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்று கமெண்ட் செய்திருந்தார்.

சின்மயி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

அதனை தொடர்ந்து ஒருவர் சின்மயி இப்படியான பதிவிற்கு அவரைப் பாராட்டி கமெண்ட் செய்திருந்தார். உங்கள் துணிச்சல் பாராட்டிற்குறியது என்று தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து பேசிய சின்மயி இது வெறும் நகைச்சுவை இல்லை சரியா? அப்படியானால், உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களுடன் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

இந்த மாதிரியான நகைச்சுவை இயல்பானதாகவும், உங்கள் கலாச்சாரத்திலும் வீடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் இருந்தால், அது வேறொருவரின் வீட்டில் உள்ள பெண்களைப் பற்றியதாக இருக்கும்போது ஏன் கவலைப்பட வேண்டும்? உங்கள் சொந்த குடும்பங்களில் இருந்து தொடங்குங்கள்.

இது உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு சரியில்லை என்றால், வேறொருவரின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு சரியில்லை. உங்கள் அப்பாக்கள் மற்றும் சகோதரர்களுடன் ஒரு குடும்பமாக நீங்கள் அனைவரும் நன்றாக சிரிக்க வேண்டும் என்று நம்புகிறேன் என்று அந்த எக்ஸ் தள பதிவின் மூலம் கேட்டுக்கோண்டார்.

மேலும் படங்களில் பாடல் பாடுவதைத் தவிர பாடகி சின்மயி பெண்களின் உரிமைகள் மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்காகவும் தொடர்ந்து தனது குரலை உயர்த்தி வருகிறார். அவர் அநீதிக்கு எதிராகப் பேசுகிறார் மற்றும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலின சமத்துவம் போன்ற தலைப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகப் பணியாற்றுகிறார்.