ரெட்ரோ, டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3… எந்தப் படத்தை முதலில் பார்க்க போறீங்க?
Top 3 Movies: ஏப்ரல் மாதம் நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம் வெளியானதால் அந்த மாதத்தில் வேறு எந்த பெரிய நடிகரின் படங்களும் போட்டிக்கு வரவில்லை. இந்த நிலையில் மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு 3 பெரிய நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது.

ரெட்ரோ: நடிகர் சூர்யா (Actor Suriya) கடந்த சில வருடங்களாக ஒரு நல்ல் ஹிட் படத்தை கொடுக்க முடியாமல் திணறி வருகிறார். குறிப்பாக இவரது நடிப்பில் இறுதியாக வெளியான கங்குவா பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டது. இந்தப் படம் 2000 கோடி வரை வசூலிக்கும் என்று தயாரிப்பாளர் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் 100 கோடி வசூலிக்கவே படம் திக்குமுக்காடியது. இப்படி தொடர்ந்து ஹிட் கொடுக்க முடியாமல் நடிகர் சூர்யா தவித்து வருகிறார். அப்படி இருக்கையில் நடிகர் சூர்யா ரசிகர்களின் பெரும் நம்பிக்கையாக ரெட்ரோ (Retro) படம் அமைந்துள்ளது. அந்த வகையில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். காதல் மற்றும் ஆக்ஷன் கலந்து தயாராகி உள்ள இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஜோஜூ ஜார்ஜ், நாசர், கருணாகரன், ஜெயராம் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் படம் மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது.
டூரிஸ்ட் ஃபேமிலி: இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என சினிமாவில் ஆல் ரவுண்டராக வலம் வருபவர் சசிகுமார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான படம் நந்தன். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இவர் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் எழுதி இயக்கி உள்ளார்.
இந்தப் படத்தில் சசிகுமார் உடன் இணைந்து நடிகர்கள் சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், ரமேஷ் திலக், பக்ஸ், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டைட்டில் டீசர் வெளியானதில் இருந்தே படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து காத்திருந்தது. இந்தப் படம் வருகின்ற மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஹிட் 3: நேச்சுரல் ஸ்டார் நானியின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் ஹிட் 3. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார். இதில் நடிகர் நானியுடன் இணைந்து நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார். இவர் கே.ஜி.எஃப் படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆனார்.
இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அதிவி சேஷ், சூர்யா ஸ்ரீனிவாஸ், விஜய் சேதுபதி, விஷ்வக் சென், ராவ் ரமேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.