Oscar Awards 2026 : ஆஸ்கர் விருதின் புதிய ரூல்ஸ்.. இது பாரபட்சத்தை முடிவுக்குக் கொண்டு வருமா?

New Rules For Oscars 2026 : ஆஸ்கர் விருதுகளில் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இனி முழுப் படத்தையும் பார்க்காமல் திரைப்படங்களை நிராகரிக்க முடியாது எனவும், AI பயன்பாடு விருதுக்குத் தடையாக இருக்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் புதிய 'ஆக்சன் டிசைன்' பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் அதிக வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் என அகாடமி தெரிவித்துள்ளது.

Oscar Awards 2026 : ஆஸ்கர் விருதின் புதிய ரூல்ஸ்.. இது பாரபட்சத்தை முடிவுக்குக் கொண்டு வருமா?

ஆஸ்கார் விருது 2026

Published: 

22 Apr 2025 15:57 PM

சினிமா (Cinema) உலகில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது (Oscar Award 2026). பொதுவாக ஆஸ்கர்  விருதுகளை வென்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை திரைப்படத்துறை மிகவும் மதிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் ஆஸ்கர் விருதுகள் குறித்து பலவிதமான குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. நிறைய பாரபட்சம் பார்க்கப்படுகிறது என்றும், இது ஹாலிவுட்டால் (Hollywood), ஹாலிவுட்டிற்கு மட்டுமே வழங்கப்படும் விருது என பல விதமான விமர்சனங்கள் இருக்கின்றன. இந்த விமர்சனங்களுக்கு மத்தியில், ஆஸ்கர் விருதுகள் இப்போது தங்கள் விதிகளில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது வெளியான புதிய விதிமுறைகள் என்னவென்று தெளிவாக பார்க்கலாம்.

சமீபத்தில், ஆஸ்கர் விருதுப் பட்டியலில் ஆக்‌ஷன் டிசைன் என்ற புதிய கேட்டகிரி சேர்க்கப்பட்டது. இந்த புதிய முயற்சிக்கு பெரும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஆஸ்கர் விருதுகளுக்கு வாக்களிப்பதற்கான விதிகளில் இப்போது பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சில அடிப்படை விதிகளும் திருத்தப்பட்டுள்ளன. ஆஸ்கார் விருதுகளில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டதாக அகாடமி தெரிவித்துள்ளது.  இது குறித்த தகவல்கள் தற்போது பேசும்பொருளாக உள்ளது.

ஆஸ்கார் விருது 2026 நடக்கும் தேதி :

ஆஸ்கார் விருதின் புதிய விதி முறைகள் :

ஆஸ்கர் விருதுக்குத் தகுதிபெறும் படங்களைப் பார்த்து, அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் வாக்களிக்கச் செய்வதன் மூலம், ஆஸ்கார் விருதுகளுக்கான படங்களைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். ஆனால் விருதுகளுக்காக சமர்ப்பிக்கப்படும் பல படங்கள், நடுவர்களால் ஒருபோதும் பார்க்கப்படுவதில்லை. கதைக்களம் மற்றும் கதைக்களத்தின் அடிப்படையில் திரைப்படங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும் 15 அல்லது 20 நிமிடங்கள் பார்த்த பிறகு நிராகரிக்கப்பட்ட திரைப்படங்களும் இருக்கின்றன. ஆனால் இனிமேல் அவ்வாறு செய்யப்படாது என்று கூறப்படுகிறது.

அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்கள் இனி முழு படத்தையும் பார்க்காமல் படத்தை நிராகரிக்க முடியாது. திரைப்படம் பார்ப்பவர்கள், திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு வழங்கப்படும் விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். மேலும் வாக்களிப்பின் போது, ​​படம் பார்க்கப்பட்டதா இல்லையா என்பதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், படக்குழுவினருக்கும் மற்றும் அகாடமிக்கும் படம் தொடர்பான கேள்விகளைக் கேட்டு உறுதிப்படுத்த அதிகாரம் உள்ளது.

கடந்த ஆண்டு, சில திரைப்படங்களில் AI தொழில்நுட்ப பயன்பாடு சர்ச்சையை ஏற்படுத்தியது. வேட்புமனுக்களைப் பெறுவதற்கு AI ஐப் பயன்படுத்துவதை பலர் எதிர்த்தனர். ஆனால் இந்த முறை, AI ஐப் பயன்படுத்துவதால் மட்டுமே திரைப்படங்களைத் தடை செய்ய முடியாது என்று அகாடமி தெளிவுபடுத்தியுள்ளது.  AI-ஐப் பயன்படுத்துவது அல்லது பயன்படுத்தாமல் இருப்பது ஆஸ்கர் விருது பரிசீலனையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறப்பட்டுள்ளது.