Abhinaya : நீண்ட நாள் காதலனை கரம்பிடித்த நாடோடிகள் புகழ் நடிகை.. குவியும் வாழ்த்துகள்!

Actress Abhinaya Wedding : தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி, தமிழில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர் அபிநயா. இவர் சமீபத்தில் தனது பள்ளி காதலன் கார்த்திக் என்பவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். இவரின் திருமணம் கடந்த 2025, ஏப்ரல் 16ம் தேதியில் உறவினர்கள் முன்னிலையில் சிறப்பாக நடந்துள்ளது. தற்போது இவரின் திருமண புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

Abhinaya : நீண்ட நாள் காதலனை கரம்பிடித்த நாடோடிகள் புகழ் நடிகை.. குவியும் வாழ்த்துகள்!

நடிகை அபிநயா

Updated On: 

17 Apr 2025 19:46 PM

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற திரைப்படங்களில் தனது திறமையால் முன்னேறிய பிரபல நடிகை அபிநயா (Abhinaya) . இவர் தமிழில் இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனியின் நாடோடிகள் (Nadodigal ) என்ற படத்தின் மூலம்  அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்தது இவருக்கு அடுத்தடுத்த படங்கள் அமைந்தது. மேலும் இவரின் நடிப்பில் இறுதியாகத் தமிழில் மார்க் ஆண்டனி (Mark Antony) என்ற படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்  (Adhik Ravichandran) இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை அபிநயாவிற்கு, பிறவியிலிருந்தே வாய் பேச முடியாது மற்றும் காதுகள் கேட்காது. ஆனாலும் தனது திறமையால் பல்வேறு மொழிகளில் உள்ள படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை அபிநயா  2025, ஏப்ரல் 16ம் தேதியில் தனது நீண்ட நாள் காதலனைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். இவரின் திருமணம் உற்றார் உறவினர்கள் மற்றும் பிரபலங்களுடன் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இவரின் காதலர் பிரபல தொழிலதிபர் ஆவர். தற்போது இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை அபிநயா திருமண புகைப்படங்களின் பதிவு :

நடிகை அபிநயாவிற்குக் கடந்த 2025, மார்ச் 9ம் தேதியில் சிறப்பாக நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது. இந்த அறிவிப்பை வெளியிட்ட அபிநயாவின் வருங்கால கணவர் யார் என்று பலரும் கேட்டுவந்தனர். அதை வெளிப்படுத்தும் விதத்தில் கடந்த 2025, மார்ச் 29ம் தேதியில் மற்றொரு பதிவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார். இவரின் காதலர் கார்த்திக் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய தொழிலதிபர் என்று தெரிகிறது. அவர் பல ஏற்றுமதி, இறக்குமதி தொழில்களை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் சுமார் 15 வருடத்திற்கு மேலாகக் காதலித்து வந்ததாக நடிகை அபிநயா ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

அபிநயாவின் திருமண வீடியோ :

இதற்கிடையே நடிகர் விஷால் மற்றும் அபிநயா இருவரும் காதலித்து வருவதாகவும், அவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள உள்ளனர் என்றும் பல தகவல்கள் வெளியாகியிருந்தது. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நடிகை அபிநயா தற்போது அவரின் நீண்ட நாள் காதலனைத் திருமணம் செய்துகொண்டார். இவரின் திருமணத்திற்குப் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர்களின் திருமணத்தில் பல பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து இவர்கள் இருவரின் திருமண வரவேற்பு வரும் 2025, ஏப்ரல் 20ம் தேதியில் சென்னையில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.