Retro : கனிமா பாடல் சிம்புவின் அந்த பாடலின் இன்ஸ்பிரேஷனா? சந்தோஷ் நாராயணன் என்ன சொன்னார் தெரியுமா?
Music Director Santhosh Narayanan : நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ரெட்ரோ. இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே முன்னணி கதாநாயகியாக நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசையமைப்பில் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதில் கனிமா பாடல், நடிகர் சிலம்பரசனின் மன்மதன் பட பாடலின் இன்ஸ்பிரேஷனாக உருவாகியுள்ளது என சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார்.

ரெட்ரோ மற்றும் மன்மதன்
கங்குவா (Kanguva) திரைப்படத்தின் தோல்விக்குப் பின், நடிகர் சூர்யாவின் (Suriya) பிரம்மாண்ட நடிப்பில் உருவாகியுள்ள படம் ரெட்ரோ (Retro). இந்த படத்தை முன்னணி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் (Karthik Subbaraj) இயக்கியுள்ளார். இந்த படத்தை இயக்குவதற்கு முன் இவர் கடைசியாக, நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் (Jigarthanda Double X) என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படமானது எதிர்பார்த்த வரவேற்பைப் பெற்றது. நடிகர் சூர்யாவுக்கு கம்பேக் படமாக இந்த ரெட்ரோ அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இந்த காதல் மற்றும் ஆக்சன் கதைக்களத்துடன் இந்த படமானது பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ளது. இந்த படத்தை சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் ரிலீஸை முன்னிட்டு, இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் (Santhosh Narayanan) , கனிமா பாடல் குறித்துப் பேசியுள்ளார். நடிகர் சிலம்பரசனின் நடிப்பில் வெளியான மன்மதன் படத்திலிருந்து வெளியான, “என் ஆசை மைத்திலியே” என்ற பாடலின் மூலம் ஈர்க்கப்பட்டு ரிதம் வைத்துதான் இணையத்தில் சூப்பர் ஹிட்டாகி வரும் கனிமா பாடலை உருவாக்கியதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார்.
ரெட்ரோ திரைப்பட குழு வெளியிட்ட பதிவு :
Just 10 Days to go to witness the rage of #Retro 💥
Meet #TheOne from May One 🔥
ICYMI #RetroTrailer
▶️ https://t.co/CEPu4lSle7#LoveLaughterWar #RetroFromMay1@Suriya_Offl #Jyotika @karthiksubbaraj @hegdepooja @Music_Santhosh @prakashraaj @C_I_N_E_M_A_A @rajsekarpandian… pic.twitter.com/17K8OPNnAj— 2D Entertainment (@2D_ENTPVTLTD) April 21, 2025
சந்தோஷ் நாராயணனின் ரெட்ரோ :
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் இறுதியாக வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்த படத்திற்கு முன்னும் கார்த்திக் சுப்பராஜின் பல படங்களுக்கு இசையமைத்த ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார். மேலும் நடிகர் சூர்யாவின் முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ படத்திற்கும் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
ரெட்ரோ திரைப்படத்திலிருந்து இவரின் இசையமைப்பில் வெளியான கனிமா, கண்ணாடி பூவே மற்றும் தி ஒன் போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இவர் இந்த படத்திற்குப் பின்னணி இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். நடிகர் சூர்யாவின் முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படமானது வரும் 2025, மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில நாட்கள் மட்டும் உள்ள நிலையில், ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.