அனுமதி இல்லாமல் பாடல்களை பயன்படுத்தியுள்ளனர்… நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படக்குழுவிடம் நஷ்ட ஈடு கோரி இளையராஜா நோட்டீஸ்
Ilaiyaraaja issue notice to Good Bad Ugly team: சுமார் 49 வருடங்களாக தனது இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார் இளையராஜா. தனது பாடல்களால் இளையராஜா பிரபலம் ஆனது போக சமீப காலமாக காப்பி ரைட்ஸ் வழக்கு போட்டு செய்திகளில் தொடர்ந்து இடம் பிடித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அனுமதி இல்லாமல் தனது பாடல்களை . நடிகர் அஜித் குமாரின் (Ajith Kumar) குட் பேட் அக்லி (Good Bad Ugly) படத்தில் பயன்படுத்தியுள்ளனர் என்று இசையமைப்பாளர் இளையராஜா (Ilaiyaraja) நஷ்ட ஈடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு நடிகர் அஜித் குமார் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். படம் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ள நிலையில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தில் பல பாடல்களை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் பல பழையப் பாடல்களை மீண்டும் பயன்படுத்தியுள்ளார். இது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றாலும் புதிதாக ஒரு பிரச்சனை தற்போது கிளம்பியுள்ளது.
அஜித் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான குட் பேட் அக்லி படம் தற்போது காப்பி ரைட்ஸ் பிரச்சனையை சந்தித்துள்ளது. ரெட் டிராகனாக வாழும் நடிகர் அஜித் தனது மகனுக்காக அனைத்தையும் விட்டுவிட்டு ஜெயிலுக்கு செல்கிறார். 18 வருடங்களுக்குப் பிறகு தனது மகனைப் பார்க்க ஜெயிலில் இருந்து வெளியே வருகிறார் அஜித்.
அப்போது சித்தரிக்கப்பட்ட போதைப் பொருள் வழக்கில் ஸ்பெயினில் அஜித்தின் மகன் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படார். தனது மகனை சுற்றி நடந்த சூழ்ச்சியை கண்டுபிடித்து அவரை எப்படி அஜித் காப்பாற்றினார் என்பதே படத்தின் கதை. படத்தில் ரெஃபரன்ஸ் பயன்படுத்துவது போக ரெஃபரன்ஸ் மட்டுமே படமாக ஆதிக் ரவிசந்திரன் எடுத்துள்ளார் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
படங்களில் பழையப் படங்களின் பாடல்களை பயன்படுத்தும் ட்ரெண்டை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து பலரும் இந்த ட்ரெண்டை ஃபாலோ செய்து வருகின்றனர். அந்த வகையில் குட் பேட் அக்லி படத்திலும் ஒத்த ரூபாயும் தாரே, என் ஜோடி மஞ்சள் குருவி, இளமை இதோ இதோ, தொட்டு தொட்டு பேசும் சுல்தானா ஆகிய பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது.
இதில் ஒத்த ரூபாயும் தாரே, என் ஜோடி மஞ்சள் குருவி, இளமை இதோ இதோ ஆகிய மூன்று பாடல்களும் இசையமைப்பாளர் இளையராஜா இசையில் வெளியான பாடல்கள். தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடல் இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையில் உருவானது. இந்த நிலையில் இளையராஜா தனது அனுமதி இல்லாமல் தன்னுடைய பாடல்களை குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்தியுள்ளனர் என்று நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த நோட்டீசில் ரூபாய் 5 கோடி நஷ்ட ஈடு கேட்டதுடன், படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பாடல்களை உடனடியாக நீக்க வேண்டும். ஏழு நாட்களுக்குள் பாடல்களை நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.