Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Dhanush: அப்படிப்போடு.. மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை.. தனுஷ் பட அப்டேட்!

Dhanush D56 Movie Update : பான் இந்திய நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் தற்போது பான் இந்தியா அளவிற்குப் பல மொழிகளில் திரைப்படங்கள் உருவாகி வருகிறது. தற்போது இவர் தமிழில் மட்டும் இட்லி கடை படத்தைத் தவிர்த்து, மூன்று படங்களை தன் கைவசம் வைத்திருக்கிறார். மேலும் அதில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக்கவுள்ள டி56 படத்திலிருந்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

Dhanush: அப்படிப்போடு.. மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை.. தனுஷ் பட அப்டேட்!
தனுஷின் டி56 திரைப்படம் Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 21 Apr 2025 15:23 PM

நடிகர் தனுஷின் (Dhanush) இயக்கத்திலும் நடிப்பிலும் இறுதியாக ராயன் (Raayan)  படம் வெளியானது. இந்த படமானது பிரம்மாண்ட வெற்றி பெற்று, சாதனை படைத்து. இந்த படமானது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து இவரின் இயக்கத்தில், அறிமுக நடிகர்களின் நடிப்பிலும் வெளியான படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் (Nilavuku En Mel Ennadi Kobam) .  இந்த படமானது முழுக்க காதல் கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் தனது சகோதரியின் மகன் பவிஷ் நாராயண் என்பவரை  கதாநாயகனாக அறிமுகப்படுத்தியிருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து இவரின் இயக்கத்திலும், நடிப்பிலும் இட்லி கடை (Idly Kadai )  என்ற திரைப்படத்தை உருவாகி  வருகிறது. இப்படமானது தற்போது இறுதிக்கட்ட பணியிலிருந்து வருகிறது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காகப் படக்குழு பாங்காக் வரை சென்றுள்ளது. மேலும் இப்படத்தைத் தொடர்ந்து டி55 மற்றும் டி56 போன்ற திரைப்படங்களில் கமிட்டாகியுள்ளார். இதில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் டி56. இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் ஐசரி கே கணேஷ் தயாரிக்கவுள்ளார்.

தற்போது இந்த படத்தைப் பற்றிய அப்டேட்டை தயாரிப்பாளர் கொடுத்துள்ளார். இந்த படத்திற்குப் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளாராம். இவர் இறுதியாக நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியான ராயன் படத்திலும் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ், தனுஷின் மேலும் ஒரு புதிய படத்தைத் தயாரிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

தனுஷின் புதிய படம் குறித்து தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட் :

சமீபத்தில் நடைபெற்ற சுமோ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் “டி56 படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ், தனுஷ் மற்றும் ஏ. ஆர்.ரஹ்மான் மூவரின் கூட்டணியில் தயாராகவுள்ளது. இந்த படத்திற்கு முன்னே தனுஷ் சாரின் மற்றொரு படமும் உள்ளது. எங்களின் தயாரிப்பில் உருவாகும் அந்த படத்திற்கு பிறகுதான், மாரி செல்வராஜுடன் , தனுஷ் இணையும் புதிய படம் வெளியாகும்.

டி56 படத்தின் அறிவிப்பை நாங்கள் மிகவும் விரைவாக அறிவித்து விட்டோம். இந்த படத்திற்கு முன் நடிகர் தனுஷின் புதிய படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். இன்னும் சில நாட்களில் அந்த படத்தின் அறிவிப்பும் வெளியாகும் எனத் தயாரிப்பாளர் புதிய அப்டேட்டை கொடுத்துள்ளார்.

ஆக மொத்தம் தமிழில் மட்டுமே நடிகர் தனுஷின் கைவசத்தில் 3 படங்கள் வரிசைகட்டி நிற்கிறது. இதைத் தொடர்ந்து அவர் இந்தியில் தேரே இஷ்க் மெய்ன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை பாலிவுட் பிரபல இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கி வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் சேகர் கம்முலாவின் பக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். இந்த படமானது தற்போது இறுதிக்கட்ட பணியிலிருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அட்சய திரிதியையில் விளக்கேற்ற சிறந்த திசை எது?
அட்சய திரிதியையில் விளக்கேற்ற சிறந்த திசை எது?...
போப் பிரான்சிஸ் மறைவு - அடுத்த போப் யார்?
போப் பிரான்சிஸ் மறைவு - அடுத்த போப் யார்?...
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதத்தில் மாற்றமா?
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதத்தில் மாற்றமா?...
பிரம்ம முகூர்த்த வழிபாடு.. நடிகை ப்ரீத்தியின் ஆன்மிக அனுபவங்கள்!
பிரம்ம முகூர்த்த வழிபாடு.. நடிகை ப்ரீத்தியின் ஆன்மிக அனுபவங்கள்!...
8ல் 6 தோல்விகள்! சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு இருக்கா..?
8ல் 6 தோல்விகள்! சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு இருக்கா..?...
திருச்சி: கட்டிலில் படுத்திருந்த மகனை எரித்துக்கொன்ற தாய்..
திருச்சி: கட்டிலில் படுத்திருந்த மகனை எரித்துக்கொன்ற தாய்.....
சரியான தர்பூசணியை தேர்ந்தெடுப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!
சரியான தர்பூசணியை தேர்ந்தெடுப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!...
ஒரே நாளில் மோதும் சுந்தர் சி மற்றும் மிர்ச்சி சிவாவின் படங்கள்...
ஒரே நாளில் மோதும் சுந்தர் சி மற்றும் மிர்ச்சி சிவாவின் படங்கள்......
பல கோடிகளுக்கு ஜன நாயகன் பட தமிழக உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்?
பல கோடிகளுக்கு ஜன நாயகன் பட தமிழக உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்?...
அட்சய திரிதியை நாளில் கல் உப்பு வாங்க மறக்காதீங்க!
அட்சய திரிதியை நாளில் கல் உப்பு வாங்க மறக்காதீங்க!...
சம்மரில் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் - எப்படி தவிர்ப்பது?
சம்மரில் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் - எப்படி தவிர்ப்பது?...