Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

எம்.எஸ்.விஸ்வநாதன் – இளையராஜா காம்போ கொடுத்த ஹிட்ஸ் – இவ்ளோ படங்களா?

Ilaiyaraaja: இளையராஜாவின் வருகைக்கு பிறகு எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பட வாய்ப்பகள் குறையத் தொடங்குகின்றன. அதுவரை அவருடன் பயணித்த பழம்பெரும் இயக்குநர்கள் மெல்ல இளையாராஜா பக்கம் செல்ல துவங்குகின்றனர்.

எம்.எஸ்.விஸ்வநாதன் – இளையராஜா காம்போ கொடுத்த ஹிட்ஸ் – இவ்ளோ படங்களா?
எம்.எஸ்.விஸ்வநாதன் - இளையராஜா
karthikeyan-s
Karthikeyan S | Published: 21 Mar 2025 17:10 PM

எல்லோரும் இரட்டை இசையமைப்பாளர்களான எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி எல்லோருக்குமே தெரியும். எம்.எஸ்.விஸ்வநாதன் – இளையராஜா காம்போ தெரியுமா? கடந்த 1952 ஆம் ஆண்டு வெளியான பணம் படத்தில் துவங்கி, கடந்த 1966ஆம் ஆண்டு வெளியான சர்வர் சுந்தரம் வரை இணைந்து பயணித்த விஸ்வநாதன் – ராமமூர்த்தி தங்களுக்குள் சிறு பிரச்னை ஏற்பட பிரிந்தனர். பின்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் (M.S.Viswanathan) தனித்தே பல படங்களுக்கு இசையமைத்தார். இந்த காம்போ கடைசியாக இணைந்த படம் சந்தான பாரதி இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு எங்கிருந்தோ வந்தான் என்ற படம் தான். இளையராஜாவின் (Ilaiyaraaja) வருகைக்கு பிறகு எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பட வாய்ப்பகள் குறையத் தொடங்குகின்றன. அதுவரை அவருடன் பயணித்த பழம்பெரும் இயக்குநர்கள் மெல்ல இளையாராஜா பக்கம் செல்ல துவங்குகின்றனர்.

எம்.எஸ்.விஸ்வநாதன் – இளையாராஜா காம்போ உருவான விதம்

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் கடன் பிரச்னையை சந்திக்கிறார். அவருடன் பல படங்களில் பணியாற்றிய ஏவிஎம் நிறுவனம் அவருக்கு உதவ நினைக்கிறார்கள். அப்போது ஏவிஎம் தயாரிக்கவிருந்த படத்தை ஆர்.சுந்தர்ராஜன் இயக்கவிருந்தார். மோகன், அமலா, ராதா அந்தப் படத்தில் நடிக்கவிருந்தனர். இந்தப் படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதனை ஒப்பந்தம் செய்யலாம் என இயக்குநர் சுந்தர்ராஜனிடம் ஏவிஎம் நிறுவனத்தினர் சொல்கின்றனர். காரணம் தொடர்ச்சியாக அவர் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறார் என்பதால் தற்போது எம்.எஸ்.விஸ்வநாதனுடன் பணியாற்றினால் இளையாராஜாவுடன் தொடர்ந்து பணியாற்ற முடியாமல் போகலாம் என சுந்தர்ராஜன் நினைக்கிறார்.

இதனையடுத்து ஏவிஎம் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் சரவணன் இளையராஜாவை சந்தித்து பேசுகிறார். இளையாராஜா உடனடியாக எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து பணியாற்ற சம்மதிக்கிறார். அப்படி உருவானது தான் மெல்ல திறந்தது கதவு படம். பாடல்களுக்காகவே இந்தப் படம் பெரும் வெற்றிபெற்றது. அவருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய இளையராஜா, அந்தப் படத்தில் இடம்பெற்ற வா வெண்ணிலா பாடலை, எம்.எஸ்.விஸ்வநாதனின் வான் மீதிலே பாடல் போல டியூன் கேட்டு வாங்கியதாக தெரிவித்திருக்கிறார்.

இருவரும் தொடர்ந்து ஜி.எம்.குமார் இயக்கத்தில் கார்த்திக் – பல்லவி இணைந்து நடித்த இரும்பு பூக்கள், பி.வாசு இயக்கத்தில் பிரபு, சுகன்யா இணைந்து நடித்த செந்தமிழ் பாட்டு ஆகிய படங்களில் எம்.எஸ்.விஸ்வநாதன் – இளையராஜா இணைந்து பணியாற்றியிருக்கின்றனர். இதில் செந்தமிழ் பாட்டு படத்தை எம்.எஸ்.விஸ்வநாதனின் மகன் எம்.எஸ்.வி.கோபி தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் இடம் பெற்ற சின்ன சின்ன தூரல் என்ன பாடல் பலரது விருப்பப் பாடலாக இருந்துவருகிறது.

காதல் மன்னனுக்கு இசையமைத்த விஸ்வநாதன்

கடைசியாக இருவரும் இணைந்து மம்மூட்டி, நந்திதாஸ் இணைந்து நடித்த விஸ்வ துளசி படத்தில் இணைந்து பணியாற்றியிருக்கின்றனர். டி.கே.ராமமூர்த்தி, இளையராஜா மட்டுமல்லாமல், பரத்வாஜ், யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்தும் விஸ்வநாதன் பணியாற்றியிருக்கிறார். அஜித் – இயக்குநர் சரண் முதன்முறையாக இணைந்த காதல் மன்னன் படத்தில் அனைத்து பாடல்களையும் பரத்வாஜ் இசையமைக்க, தயாரிப்பாளரின் வேண்டுகோளுக்காக மெட்டுத்தேடி என்ற பாடலகுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். அதில் அவர் மெஸ் விஸ்வநாதனாக நடித்திருப்பார். அதற்கேற்ப வைரமுத்து கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா மெஸ்சு விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா என எழுதியிருப்பார்.

இளையராஜாவின் மகன் யுவனுடன் கைகோர்த்த எம்.எஸ்.வி

கோல்மால் ரீமேக்கான ரஜினி நடித்த தில்லு முல்லு படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் தான் இசையமைப்பாளர். கே.பாலசந்தர் இயக்கிய இந்தப் படத்தில் ராகங்கள் பதினாறு, தில்லு தில்லு தீம் என அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட். இந்தப் படத்தை அதே தலைப்பில் 2013 ஆண்டு ரீமேக் செய்யப்பட்டது. ரஜினி வேடத்தில் சிவா நடித்திருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் பழைய தில்லு தில்லு பாடலும், ராகங்கள் பதினாறு பாடலும் மீண்டும் பயன்படுத்தப்பட்டது. அதில் தில்லு தில்லு பாடலை யுவன் ரீமிக்ஸ் செய்து எம்.எஸ்.விஸ்வநாதனுடன் பாடியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!
சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!...
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி...
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்...
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!...
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!...
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?...
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?...
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!...
பணக்காரர்களின் கடன் வாங்கும் யுக்தி - வரியைத் தவிர்க்க செம பிளான்
பணக்காரர்களின் கடன் வாங்கும் யுக்தி - வரியைத் தவிர்க்க செம பிளான்...
தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதம்! வேலை காட்டும் வெயில்..!
தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதம்! வேலை காட்டும் வெயில்..!...
பட்ஜெட் விலையில் பவர் ஹவுஸ்: ரெட்மி டர்போ 4 ப்ரோவின் சிறப்பம்சம்!
பட்ஜெட் விலையில் பவர் ஹவுஸ்: ரெட்மி டர்போ 4 ப்ரோவின் சிறப்பம்சம்!...