Jailer 2 : ஜெயிலர் 2 படத்தில் பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளாரா? அப்போ நிச்சயம் சூப்பர் ஹிட்தான்!
Jailer 2 Movie Update : இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கூலி படத்தைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துவரும் படம் ஜெயிலர் 2.இந்த படத்தைப் பிரபல கோலிவுட் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் வேட்டையன் படத்தைத் தொடர்ந்து, பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்றுவரை முன்னணி கதாநாயகனாக இருந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் வேட்டையன் (Vattaiyan) . இந்த படத்தை ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் ஞானவேல் (Gnanavel) இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி (Coolie) திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில், படப்பிடிப்புகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது. மேலும் இந்த படமானது வரும் 2025 ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் ரிலீசாகவுள்ளது.
இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், ஜெயிலர் 2 (Jailer 2) படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாகி நடந்து வருகிறது. நடிகர் ரஜினிகாந்த்தின் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த நடிகர் வேறு யாருமில்லை, ஃபகத் பாசில்தான். இவர் இதற்கு முன் நடிகர் ரஜினியின் வேட்டையன் படத்திலும் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் 2 படக்குழு வெளியிட்ட அறிவிப்பு :
Muthuvel Pandian’s hunt begins!💥 #Jailer2 shoot starts today🌟@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/v72a7wXpDH
— Sun Pictures (@sunpictures) March 10, 2025
நடிகர் ரஜினிகாந்த்தின் நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் ஜெயிலர் 2. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமானது தயாரித்து வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்ற படம் ஜெயிலர். இந்த படத்தைப் பிரபல இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். மேலும் இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமானது தயாரித்திருந்தது. ரஜினியின் நடிப்பில் வெளியான இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். இந்தப் படமானது குடும்பம் சார்ந்த, முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் வெளியாகியிருந்தது.
இந்த படமானது சுமார் ரூ. 200 கோடி பட்ஜெட்டில் உருவாகி, உலகளாவிய வசூலில் சுமார் ரூ. 650 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் அடுத்த பாகம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் கேட்டுவந்த நிலையில், இது தொடர்பான அறிவிப்புகள் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடிகர் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.
அதைத் தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங் 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கியது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் இந்த ஜெயிலர் 2 படமானது வரும் 2026ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது.