Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vijay Sethupathi : விஜய் சேதுபதியின் மகாராஜா பார்ட் 2 உருவாகிறதா? வெளியான புதிய தகவல்!

Maharaja Part 2 Update : தமிழ் சினிமாவை தொடர்ந்து, தெலுங்கிலும் கதாநாயகனாகப் படங்களில் நடித்து வருபவர் விஜய் சேதுபதி. இவர் மற்ற கதாநாயகர்களைப் போல மாஸ் கதைக்களத்தைத் தேர்ந்தெடுக்காமல் மிகவும் வித்தியாசமாக கதைக்களத்துடன் கூடிய படங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் வெளியாகி எதிர்பாராத வெற்றியைப் பெற்ற படம் மகாராஜா. இந்த படத்தின் பாகம் 2 உருவாகவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Vijay Sethupathi : விஜய் சேதுபதியின் மகாராஜா பார்ட் 2 உருவாகிறதா? வெளியான புதிய தகவல்!
விஜய் சேதுபதிImage Source: X
barath-murugan
Barath Murugan | Published: 30 Apr 2025 18:51 PM

நடிகர் விஜய் சேதுபதியின் (Vijay Sethupathi) முன்னணி நடிப்பில் தெலுங்கில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை டோலிவுட் இயக்குநர் பூரி ஜெகன்நாத் (Puri Jagannadh) இயக்கவுள்ளார். இந்த படத்தின் மூலம் விஜய் சேதுபதி தெலுங்கில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் இதற்கு முன் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் வில்லனாக நடித்துள்ளார் என்று அனைவருக்கும் தெரிந்ததே. இவரின் நடிப்பில் விடுதலை 2 (Viduthalai 2) படத்திற்கு முன் வெளியாகி, எதிர்பாராத ஹிட் கொடுத்த படம் மகாராஜா (Maharaja). இந்த படத்தை இயக்குநர் நித்திலன் சாமிநாதன்  (Nithilan Saminathan) இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2024ம் ஆண்டு வெளியான இந்த படமானது குறையாக பட்ஜெட்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

அப்பா, மகள் பாசத்தை சொல்லும் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் அபிராமி, திவ்யபாரதி, நட்டி சுப்ரமணி என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவாகி சுமார் ரூ. 190 கோடிகளைக் கடந்து வசூல் செய்திருந்தது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாகம் 2 எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேட்டுவந்த நிலையில், அது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் 2 ஆம் பாகத்துக்கான கதையை இயக்குநர் நித்திலன் சாமிநாதன், விஜய் சேதுபதியிடம் கூறியுள்ளாராம். விரைவில் இந்த கூட்டணி மீண்டும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலானது தினத்தந்தி செய்தி தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகாராஜா பாகம் 2 படத்தின் அப்டேட் :

இந்த படத்தின் 2 ஆம் பாகம் பற்றிய புதிய தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குநர் நித்திலன் சாமிநாதன், மகாராஜா  2 ஆம் பாகத்துக்கான கதையை விஜய் சேதுபதியிடம் கூறியுள்ளாராம். அதற்கு விஜய் சேதுபதி ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷ்ன் பணியில் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. தெலுங்கில் இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் படத்தைத் தொடர்ந்து, மகாராஜா  2 ஆம் பாகத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

பூரி ஜெகன்நாத் மற்றும் விஜய் சேதுபதியின் கூட்டணி :

நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கில் நடிக்கவுள்ள இந்த படத்தை நடிகையும், தயாரிப்பாளருமான சார்மி கவுர் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2025, ஜூன் மாதத்தில் சிறப்பாக தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் நடிகர் விஜய் சேதுபதியுடன் தபு, ராதிகா ஆப்தே மற்றும் கன்னட நடிகர் விஜய் குமார் இணைந்து நடிக்கவுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து இவரின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் படம் ஏஸ். இயக்குனர் ஆறுமுக குமாரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் 2025, மே 23ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து இவரின் நடிப்பில் ரிலீசிற்கு ட்ரெயின், காந்தி டாக்ஸ் மற்றும் பாண்டிராஜூடன் ஒரு படம் என அடுத்தடுத்த படங்கள் வரிசையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்...
2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் - எப்படி தேர்ந்தெடுப்பது ?
2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் - எப்படி தேர்ந்தெடுப்பது ?...
டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3 படங்களுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா
டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3 படங்களுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா...
ஜப்பானில் தென்பட்ட அரியவகை வெள்ளைநிற திமிங்கலம்!
ஜப்பானில் தென்பட்ட அரியவகை வெள்ளைநிற திமிங்கலம்!...
ஏசி குளிரும் வெயிலும்: ஆரோக்கியமாக இருக்க 8 அறிவுரைகள்!
ஏசி குளிரும் வெயிலும்: ஆரோக்கியமாக இருக்க 8 அறிவுரைகள்!...
குடும்பத்தினருடன் கீழடி சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்...
குடும்பத்தினருடன் கீழடி சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்......
சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா கூட்டணியின் வெற்றி - CM ஸ்டாலின்
சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா கூட்டணியின் வெற்றி - CM ஸ்டாலின்...
கோடைகாலத்தில் மூட்டு வலி பிரச்னை.. டாக்டர் சொல்லும் அட்வைஸ்!
கோடைகாலத்தில் மூட்டு வலி பிரச்னை.. டாக்டர் சொல்லும் அட்வைஸ்!...
பொக்கிஷமான தருணம்... வைரலாகும் ஷாலினி அஜித்தின் இன்ஸ்டா போஸ்ட்
பொக்கிஷமான தருணம்... வைரலாகும் ஷாலினி அஜித்தின் இன்ஸ்டா போஸ்ட்...
அதிகமாக சாப்பிடுவதால் வரும் சில பிரச்னைகள்.. தடுக்கும் முறை!
அதிகமாக சாப்பிடுவதால் வரும் சில பிரச்னைகள்.. தடுக்கும் முறை!...
இன்ஸ்டாகிராமில் ஏஐ! போட்டோவின் பின்புலத்தை ஈஸியா மாற்றலாம்!
இன்ஸ்டாகிராமில் ஏஐ! போட்டோவின் பின்புலத்தை ஈஸியா மாற்றலாம்!...