Lokesh Kanagaraj : சமூக ஊடகங்களுக்கு சிறிய பிரேக்… கூலி படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் எடுத்த முடிவு!
Lokesh Kanagaraj Announcement : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களை வைத்து அடுத்தடுத்த படங்களை இயக்கி வருகிறார். இவரின் இயக்கத்தில் கூலி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷனை தொடர்ந்து, அனைத்து சமூக ஊடகங்களிலிருந்து லோகேஷ் கனகராஜ் விலகவுள்ளதாகக் கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் மாநகரம் (Maanagaram) திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). கடந்த 2017ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நடிகர்கள் ஸ்ரீ (Shri) மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் முன்னணி கதாநாயகர்களாக நடித்திருந்தனர். அதிரடி கதைக்களத்துடன் வெளியான இந்த படமானது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த படங்களை இயக்கத் தொடங்கினார். நடிகர் கார்த்தி(Karthi) நடிப்பில் வெளியான கைதி (Kaithi) திரைப்படம்தான் இவருக்குப் பிரம்மாண்ட வரவேற்பைக் கொடுத்தது. இந்த படத்தைத் தொடர்ந்துதான், விஜய், கமல் மற்றும் ரஜினிகாந்த் எனப் பல முன்னணி பிரபலங்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் லியோ (Leo). விஜய்யின் (Vijay) நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த்தின் நடிப்பில் கூலி படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது எக்ஸ் பக்கத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் , அனைத்து சமூக ஊடகங்களிலிருந்தும் சிறிது காலம் இடைவேளை எடுக்கப்போவதாகவும், நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படத்தின் ப்ரோமோஷன் வரை அதைச் செய்யவிருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த செய்தியானது தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :
Hey guys!
I’m taking a small break from all the social media platforms until #Coolie‘s promotions
With Love,
Lokesh Kanagaraj 🤜🏼🤛🏼— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) April 22, 2025
இந்த பதிவில் கூலி படத்தைத் தொடர்ந்து அனைத்து சமூக ஊடகங்களிலிருந்தும் விலகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த செய்தியானது ஒட்டுமொத்த லோகேஷ் கனகராஜின் ரசிகர்கள் மத்தியிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. மேலும் ரசிகர்கள் பலரும் அவரின் பதிவின் கீழ் தங்களின் வருத்தத்தையும், அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
பொதுவாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களின் அப்டேட்களை அவரின் எக்ஸ் பக்கத்தில்தான் தெரிவிப்பார். மேலும், தற்போது அவர் அதில் இருந்து சிறிய இடைவேளை எடுக்கவுள்ளதாக கூறியுள்ளார். கூலி படம் வெளியாகும் வரை அவர் சமூக வலைதளங்களில் இருக்க மாட்டார் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூலி திரைப்படம் :
நடிகர் ரஜினிகாந்த்தின் முன்னணி நடிப்பிலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்த படத்தில் ரஜினிகாந்த்துடன் பான் இந்திய நடிகர்கள் நாகார்ஜுனா, உபேந்திரா மற்றும் அமீர்கான் எனப் பல பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட வேளையில் இருந்து வரும் இந்தப் படமானது, வரும் 2025 ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. மேலும் இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.