இந்த வாரம் தியேட்டரில் என்ன புது வரவு… லிஸ்ட் இதோ!

Movies Releasing In Theaters This Week: தமிழ் சினிமாவில் கடந்த வாரம் நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம் வெளியான நிலையில் இந்த வாரம் பெரிய அளவில் கோலிவுட்டில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும் தமிழ் மட்டும் இன்று தெலுங்கு மற்றும் மலையாளத்தில் என்ன புதுப்படம் வெளியாகியுள்ளது என்பதைப் பார்க்கலாம்.

இந்த வாரம் தியேட்டரில் என்ன புது வரவு... லிஸ்ட் இதோ!

படங்கள்

Published: 

17 Apr 2025 13:05 PM

டென் ஹவர்ஸ்: நடிகர் சிபிராஜ் நடிப்பில் இறுதியாக வெளியான படம் வட்டம். நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் கடந்த 2022-ம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு தற்போது நடிகர் சிபிராஜ் நடிப்பில் டென் ஹவர்ஸ் என்ற படம் உருவாகியுள்ளது .  இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நடிகர் சிபிராஜ் உடன் இணைந்து இந்தப் படத்தில் கஜராஜ், ஜீவா ரவி, திலீபன், ராஜ் ஐயப்பா, சரவண சுப்பையா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் படக்குழு படத்தின் ட்ரெய்லரை ஜனவரி மாதம் 2025-ம் ஆண்டு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படம் ஏப்ரல் மாதம் 18-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஒடேலா 2: நடிகை தமன்னா பாட்டியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ஒடேலா 2. இந்தப்  படம் 2024-ம் ஆண்டு வாரணாசியில் படமாக்கப்பட்டது. இப்படத்தில் நடிகை தமன்னாவுடன் இணைந்து நடிகர்கள் நாக மகேஷ், யுவா, ககன் விஹாரி, வம்சி,  பூபால், சுரேந்தர் ரெட்டி மற்றும் பூஜா ரெட்டி ஆகியோரும் நடித்துள்ளனர். மது கிரியேஷன்ஸ் மற்றும் சம்பத் நந்தி டீம்வொர்க்ஸ் பேனர்களின் கீழ் தயாரிப்பாளர் மது இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

மேலும் இயக்குநர் அசோக் தேஜா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை தமன்னா நாக சாதுவாக நடித்துள்ளார் என்பது ட்ரெய்லரைப் பார்க்கும் போது தெரிகிறது. 2022 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு படமான ஒடேலா ரயில் நிலையத்தின் தொடர்ச்சியாக இந்த ஒடேலா 2 படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் இயற்கைக்கு அப்பாற்பட்ட த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது. படம் ஏப்ரல் மாதல் 17-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

அப்யந்தர குட்டவலி: நடிகர் ஆசிப் அலி நடிப்பில் உருவாகியுள்ள படம் அப்யந்தர குட்டவலி. இந்தப் படத்தை இயக்குநர் சேதுநாத் பத்மகுமார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஆசிப் அலி உடன் இணைந்து நடிகர்கள் ஜெகதீஷ், ஹரிஸ்ரீ அசோகன், சித்தார்த் பரதன், அஸீஸ் நெடுமங்காட், ஆனந்த் மன்மதன், துளசி, ஸ்ரேயா ருக்மணி, விஜயகுமார், ஜோஜி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மலையாளத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் ஏப்ரல் மாதல் 17-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

சச்சின்: நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தப் படம் சச்சின். இந்தப் படத்தை இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கியுள்ளார். இதில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடிகரகள் ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன் உட்பட பலர் நடித்துள்ளனர். படம் வெளியாகி 20 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் படத்தினை தற்போது ரீ ரிலீஸ் செய்துள்ளனர்.