விமல் பட ரீமேக்கில் கேஜிஎப் யஷ்? இதெல்லாம் தமிழ் படங்களின் கன்னட ரீமேக்கா?

ஒரு மொழியில் மக்களால் ஏற்றுக்கொள்ள படம் மற்ற மொழிகளிலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பு தான் காரணம். ரீமேக் தொடர்பாக ஒருமுறை ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு பேட்டியில், என்னை நேராக ஒரு கோடு போட சொன்னல் எளிதாக போடுவேன். ஆனால் அதற்கு பக்கத்தில் அதே போன்ற கோட்டை போட சொன்னால் அது மிக சிரமம். அதே போன்று தான் ரீமேக்கும் என்றார்.

விமல் பட ரீமேக்கில் கேஜிஎப் யஷ்? இதெல்லாம் தமிழ் படங்களின் கன்னட ரீமேக்கா?

யஷ் - உபேந்திரா - விஷ்ணுவர்தன்

Updated On: 

22 Mar 2025 09:02 AM

ஒரு மொழியில் வெற்றிபெற்ற படங்கள் மற்ற மொழியில் ரீமேக் செய்யப்படுவது இயல்பான ஒன்று தான். காரணம் புதிதாக ஒரு படத்தை உருவாக்கும்போது அது வெற்றிபெறுவதற்கான சாத்தியக் கூறுகள் மிக குறைவு. ஆனால் ஒரு படத்தில வெற்றி பெற்ற படம் மற்ற மொழிகளில் மீள் உருவாக்கம் செய்யும்போது எளிதாக வெற்றி பெறும் என்பது நம்பிக்கை. காரணம் ஏற்கனவே ஒரு மொழியில் மக்களால் ஏற்றுக்கொள்ள படம் மற்ற மொழிகளிலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பு தான் காரணம். ரீமேக் தொடர்பாக ஒருமுறை ஏ.ஆர்.முருகதாஸ் (AR Murugadoss) ஒரு பேட்டியில், என்னை நேராக ஒரு கோடு போட சொன்னல் எளிதாக போடுவேன். ஆனால் அதற்கு பக்கத்தில் அதே போன்ற கோட்டை போட சொன்னால் அது மிக சிரமம். அதே போன்று தான் ரீமேக்கும் என்றார். ரவி மோகனின் அண்ணன் மோகன் ராஜாவும்(Mohan Raja) ஒரு காலத்தில் தமிழில் ரீமேக் ராஜா என அழைக்கப்பட்டார். காரணம் அவர் தெலுங்கில் வெற்றி பெற்ற படங்களை ரீமேக் செய்து வந்ததால் அவருக்கு அந்த பெயர் கிடைத்தது. ஆனால் தனி ஒருவன், வேலைக்காரன் (Velaikkaran) என அடுத்ததடுத்த வெற்றிகளால் அவரது பெயர் மாறியது. ரீமேக் தொடர்பாக சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில்  ரீமேக் தான் இருப்பதிலேயே கடினமான விஷயம். ஒரு படத்தில் ஹிட்டான படத்தை அப்படியே ரீமேக் செய்து அந்தப் படம் தோல்வியடைந்தால் அந்தப் படத்தை தமிழுக்கேற்றபடி மாற்றவில்லை அதனால் அந்தப் படம் தோல்வி அடைந்தது என்பார்கள். அதே படத்தை தமிழுக்கேற்றபடி மாற்றினால் முக்கிய காட்சியை  மாற்றிவிட்டீர்கள் அதனால் தோல்வி அடைந்தது என்பார்கள் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழில் வெற்றி பெற்ற படங்களின் கன்னட ரீமேக்குகள் குறித்து பார்க்கலாம்.

சேது

தமிழில் பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்த சேது படம் தான் ஒரு நடிகராக விக்ரம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள உதவிய படம். இந்தப் படம் கன்னடத்தில் ஹுச்சா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. கிச்சா சுதீப் இந்த படத்தில் விக்ரம் வேடத்தில் நடித்தார். விக்ரம் போல கிச்சா சுதீப்பிற்கும் இந்தப் படம் நல்ல அடையாளத்தை பெற்றுத் தந்தது.

காக்க காக்க

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா நடித்த காக்க படம் கன்னடத்தில் தண்டம் தஷகுணம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. கன்னடத்தில் சூர்யா வேடத்தில் அர்ஜுனின் உறவினர், மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜா நடித்தார்.

ஆட்டோகிராப்

சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படம் கன்னடத்தில் மை ஆட்டோகிராப் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தப் படத்தில் சேரன் வேடத்தில் சுதீப் நடித்திருந்தார்.

வரலாறு

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் குமார் 3 வேடங்களில் மிரட்டிய வரலாறு படம் கன்னடத்தில் காட்பாதர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டன. அஜித் வேடத்தில் உபேந்திரா நடித்தார்.

கோவா

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஜெய், வைப், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான கோவா படம் அதே பெயரில் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. கோமல் குமார், தருண் சந்திரா, ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

7ஜி ரெயின்போ காலனி

செல்வராகவ் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடித்த 7ஜி ரெயின்போ காலனி படம் கன்னடத்தில் கில்லி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தப் படத்தில் குருராஜ், ரகுல் ப்ரீத் சிங் முக்கிய வேடங்களில் நடித்தனர். தமிழில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இதில் மீண்டும் பயன்படுத்தப்பட்டன.

குஷி

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் – ஜோதிகா இணைந்து நடித்த குஷி படம் கன்னடத்தில் ஏனோ ஒன்தாரா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தப் படத்தில் விஜய் வேடத்தில் கணேஷும், ஜோதிகா வேடத்தில் பிரியாமணியும் நடித்தனர்.

பாட்ஷா

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் மெகா ஹிட்டான பாட்ஷா படம் கன்னடத்தில் கோடிகொப்பா என்ற பெயரில் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. ரஜினிகாந்த் வேடத்தில் விஷ்ணுவர்தன் நடித்தார்.

களவானி

தமிழில் சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் வெளியான களவானி படம் கிரடகா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தப் படத்தில் விமல் வேடத்தில் யஷ் நடிக்க, ஓவியா ஹீரோயிாக நடித்தார்.

ஓ மை கடவுளே!

தமிழில் அஸ்வத் இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படம் கன்னடத்தில் லக்கி மேன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் விஜய் சேதுபதி வேடத்தில் கன்னடத்தில் புனித் ராஜ்குமார் நடித்தார்.