Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கேரள திரைப்பட விமர்சகர்கள் விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார் டொவினோ தாமஸ்!

Kerala Film Critics Awards: 48-வது கேரள திரைப்பட விமர்சகர்கள் விருதுகளில் நடிகர் டொவினோ தாமஸ் சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். அவரது படங்கள் கோல்டன் ஹார்ஸ் ஃபென்டாஸ்டிக் திரைப்பட விழாவில் ஒளிபரப்பப்பட்டது. சமீபத்தில் இவரது நடிப்பில் L2: எம்புரான் படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

கேரள திரைப்பட விமர்சகர்கள் விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார் டொவினோ தாமஸ்!
டொவினோ தாமஸ்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Apr 2025 15:53 PM

மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் டொவினோ தாமஸ் (Tovino Thomas). இவர் தமிழிலும் நடித்துள்ளார். மலையாளத்தில் 2012-ம் ஆண்டு வெளியான பிரபுவிண்டே மக்கள் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான ஏபிசிடி, என்னு நிண்ட மொய்தின், மாயநதி, தீவண்டி, எண்ட உம்மாண்ட பேரு, லூசிஃபர், உயரே, வைரஸ், லூக்கா, கல்கி, ஃபாரன்சிக், கிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர், கள, மின்னல் முரளி, நாரதன், தள்ளுமாளா, 2018, ஆகிய படங்கள் இவரை மலையாளத்தில் முன்னணி நடிகராக மாற்றியது. இதனை தொடர்ந்து கடந்த 2024-ம் ஆண்டு வெளியான அன்வேஷிப்பின் கண்டெத்தும், நடிகர், அஜயந்தே ரண்டம் மோஷனம் (ARM) ஆகிய 3 படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

அஜயந்தே ரண்டம் மோஷனம் படத்தில் தனது அற்புதமான நடிப்பிற்காக 48-வது கேரள திரைப்பட விமர்சகர்கள் விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார் நடிகர் டொவினோ தாமஸ். பல திறமைகளுக்குப் பெயர் போன நடிகர் டொவினோ தாமஸ் இந்தப் படத்தில் தனது நடிப்பால் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றார்.

டொவினோ தாமஸ் தொடர்ந்து தற்போது வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறார், குறிப்பாக அவரது இரண்டு படங்களான ’அஜயந்தே ரண்டம் மோஷனம்’ மற்றும் 2018 ஆகிய படங்கள் தைவானில் நடந்த மதிப்புமிக்க கோல்டன் ஹார்ஸ் ஃபென்டாஸ்டிக் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கிய L2: எம்பூரான் படத்தில் அரசியல்வாதி ஜதின் ராம்தாஸ் வேடத்தில் மீண்டும் நடித்தார் டொவினோ தாமஸ். படத்தின் சுவாரஸ்யமான கதையில் அவரது கதாபாத்திரம் ஒரு முக்கிய பங்கு வகித்தது. மேலும் அந்தப் படத்தில் நடித்ததற்காக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது, இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் மிகப்பெரிய வசூலை ஈட்டியது. எம்பூரான் ஏப்ரல் மாதம் 24-ம் தேதி 2025-ம் ஆண்டு அன்று OTT வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. மேலும் திரையரங்குகளில் படத்தைப் பார்க்க தவறவிட்ட ரசிகர்கள் தற்போது வீட்டிலேயே காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து நடிகர் டொவினோ தாமஸ் தற்போது நரிவேட்ட, பள்ளி சட்டம்பி ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். மேலும் நடிகர் டொவினோ தாமஸ் தமிழில் 2018-ம் ஆண்டு வெளியான மாரி 2 படத்தில் தனுஷிற்கு வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்சய திரிதியையில் விளக்கேற்ற சிறந்த திசை எது?
அட்சய திரிதியையில் விளக்கேற்ற சிறந்த திசை எது?...
போப் பிரான்சிஸ் மறைவு - அடுத்த போப் யார்?
போப் பிரான்சிஸ் மறைவு - அடுத்த போப் யார்?...
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதத்தில் மாற்றமா?
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதத்தில் மாற்றமா?...
பிரம்ம முகூர்த்த வழிபாடு.. நடிகை ப்ரீத்தியின் ஆன்மிக அனுபவங்கள்!
பிரம்ம முகூர்த்த வழிபாடு.. நடிகை ப்ரீத்தியின் ஆன்மிக அனுபவங்கள்!...
8ல் 6 தோல்விகள்! சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு இருக்கா..?
8ல் 6 தோல்விகள்! சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு இருக்கா..?...
திருச்சி: கட்டிலில் படுத்திருந்த மகனை எரித்துக்கொன்ற தாய்..
திருச்சி: கட்டிலில் படுத்திருந்த மகனை எரித்துக்கொன்ற தாய்.....
சரியான தர்பூசணியை தேர்ந்தெடுப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!
சரியான தர்பூசணியை தேர்ந்தெடுப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!...
ஒரே நாளில் மோதும் சுந்தர் சி மற்றும் மிர்ச்சி சிவாவின் படங்கள்...
ஒரே நாளில் மோதும் சுந்தர் சி மற்றும் மிர்ச்சி சிவாவின் படங்கள்......
பல கோடிகளுக்கு ஜன நாயகன் பட தமிழக உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்?
பல கோடிகளுக்கு ஜன நாயகன் பட தமிழக உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்?...
அட்சய திரிதியை நாளில் கல் உப்பு வாங்க மறக்காதீங்க!
அட்சய திரிதியை நாளில் கல் உப்பு வாங்க மறக்காதீங்க!...
சம்மரில் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் - எப்படி தவிர்ப்பது?
சம்மரில் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் - எப்படி தவிர்ப்பது?...