Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Cinema Rewind : என் கல்யாணத்தில் கார்த்திக் அழுதார் – நடிகை குஷ்பு சொன்ன விஷயம்!

Actress Khushbu Sundar : தமிழில் பிரபல நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருபவர் குஷ்பு. இந்தி சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர், தற்போதுவரை பிரபல நடிகையாக இருந்து வருகிறார். இவர் முன்னதாக தனது திருமணத்தில், நடிகர் கார்த்திக் அழுததைப் பற்றிக் கூறிய விஷயத்தைப் பற்றி முழுமையாகப் பார்க்கலாம்.

Cinema Rewind : என் கல்யாணத்தில் கார்த்திக் அழுதார் – நடிகை குஷ்பு சொன்ன விஷயம்!
கார்த்திக் மற்றும் குஷ்புImage Source: X
barath-murugan
Barath Murugan | Updated On: 26 Apr 2025 17:58 PM

நடிகை குஷ்பு (Khushbu) தமிழ் சினிமாவில் நீங்காத புகழைப் பெற்றவர். இவர் தமிழில் நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இவரின் தயாரிப்பில் வெளியான படங்களும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இவர் இறுதியாக அறிமுக நடிகர் ஆகாஷ் முரளியின் நடிப்பில் வெளியான நேசிப்பாயா (Nesippaya) என்ற படத்தில் முக்கியமான தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தைத் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரமாக அடுத்தடுத்த படங்களிலும் கமிட்டாகி வருகிறார். நடிகை குஷ்பு சுந்தர் மகாராஷ்டிராவை சேர்ந்த சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இவர் கடந்த 1980ம் ஆண்டு வெளியான தி பர்னிங் ட்ரெயின் (The Burning Train) என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார். தனது முதல் அறிமுகமே அவருக்கு இந்தி மொழியில் அமைந்திருந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து, அவர் நடித்து வந்த தமிழ்த் திரைப்படம் தர்மத்தின் தலைவன் (Dharmathin Thalaivan).

கடந்த 1988ம் ஆண்டு வெளியான இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்துதான் இவருக்குத் தமிழிலில், அடுத்தடுத்த படங்கள் அமைந்தது. மேலும் ரஜினிகாந்த் முதல் பிரபு வரை பல பிரபலங்களுடன் ஜோடியாகப் படங்களில் நடித்துள்ளார்.

80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி கதாநாயகியாக வலம்வந்த இவர், தற்போது படங்களில் சிறப்புக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் முன்னதாக வீடியோ ஒன்றில், தனது திருமணத்தில் கலந்துகொண்ட கார்த்திக் அழுததைப் பற்றிப் பேசியிருந்தார். அது குறித்து முழுமையாகப் பார்க்கலாம்.

நடிகர் கார்த்திக் பற்றி நடிகை குஷ்பு சுந்தர் சொன்ன விஷயம் :

இது தொடர்பாக நடிகை குஷ்பு சுந்தர் “என்னுடைய திருமணத்தில் நடிகர் கார்த்திக் தேம்பித் தேம்பி அழுதார். ஏனென்றால் கார்த்திக் சாருக்குதான் முதலில், நானும் சுந்தர் சியும் திருமணம் செய்யவிருக்கிறோம் என்று தெரியும். சுந்தர் சியும் முதலில் , என்னைத் திருமணம் செய்யப்போகிறேன் என்று கார்த்திக் சாரிடம்தான் கூறினார். எங்களின் காதலுக்கு கார்த்திக்தான் சாட்சி, நாங்கள் திருமணம் செய்யவிருக்கிறோம் என்று தெரிந்தவுடன் எனக்கு போன் செய்து பேசினார். அவர் போனில் பேசும்போதே அழுதார்.

எனது கல்யாணத்திற்கு கார்த்திக் வந்திருந்தார், திருமணம் முடிந்ததைக் கையேடு அவரிடம் ஆசீர்வாதம் வாங்கக் காலில் விழுந்தோம். எனது தம்பியும், தம்பி மனைவியும் என்னிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டார்கள் என, போன் செய்து அழுதார். என்னுடனும், சுந்தர் சாருடனும் மாத்தி மாத்தி போனில் பேசிக்கொடுத்தான் இருந்தார். ஏனென்றால் நானும், சுந்தர் சாரும் காதலிக்கும்போது பாதி நேரம் சண்டை போட்டு பிரேக் அப் செய்வோம். பின் மீண்டும் சேருவோம். அதனால் கார்த்திக் சாருக்கு பயம் வந்துவிட்டது. இவர்கள் இருவரும் திருமணம் செய்வார்களா என்று, பின் திருமணம் முடிந்த நிலையில் நாங்கள் இருவரும் சேர்ந்துவிட்டோம் என்றுதான் அவர் அப்படி  அழுதார் என நடிகை குஷ்பு சுந்தர் பேசியுள்ளார்.

இளநீர் டீ குடிச்சிருக்கீங்களா ? வைரலாகும் வீடியோ !
இளநீர் டீ குடிச்சிருக்கீங்களா ? வைரலாகும் வீடியோ !...
அமெரிக்க மாணவர்களுக்கு Gemini Advanced இலவசம்!
அமெரிக்க மாணவர்களுக்கு Gemini Advanced இலவசம்!...
166 பயணிகள்.. சென்னை விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு!
166 பயணிகள்.. சென்னை விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு!...
பிஎஃப் பணத்தை எத்தனை முறை எடுக்கலாம் - விதிகள் கூறுவது என்ன?
பிஎஃப் பணத்தை எத்தனை முறை எடுக்கலாம் - விதிகள் கூறுவது என்ன?...
செவ்வாய் மற்றும் சந்திரன் ராசி மாற்றம்.. பணமழை கொட்டும் ராசிகள்!
செவ்வாய் மற்றும் சந்திரன் ராசி மாற்றம்.. பணமழை கொட்டும் ராசிகள்!...
வயதான தலைவர்களால் இளைஞர் சலிப்படைந்துள்ளனர் - ஆதவ் அர்ஜுனா!
வயதான தலைவர்களால் இளைஞர் சலிப்படைந்துள்ளனர் - ஆதவ் அர்ஜுனா!...
கை, கால்கள் சுண்டி இழுக்கும்.. கால்சியம் குறைபாடு பிரச்னைகள்!
கை, கால்கள் சுண்டி இழுக்கும்.. கால்சியம் குறைபாடு பிரச்னைகள்!...
பயணத்தின் போது வெப்ப அலை தாக்கத்திலிருந்து பாதுகாக்க எளிய வழிகள்!
பயணத்தின் போது வெப்ப அலை தாக்கத்திலிருந்து பாதுகாக்க எளிய வழிகள்!...
இந்தியாதான் டாப்.. 6 விஷயங்களில் பின்தங்கும் பாகிஸ்தான்!
இந்தியாதான் டாப்.. 6 விஷயங்களில் பின்தங்கும் பாகிஸ்தான்!...
அனிருத்தின் குரலில்.. நானியின் ஹிட் 3 படத்தின் அடுத்த பாடல்!
அனிருத்தின் குரலில்.. நானியின் ஹிட் 3 படத்தின் அடுத்த பாடல்!...
பிருத்விராஜின் இந்த மலையாள க்ரைம் திரில்லர் படத்தை பாருங்கள்!
பிருத்விராஜின் இந்த மலையாள க்ரைம் திரில்லர் படத்தை பாருங்கள்!...