Karthik Subbaraj : கேம் சேஞ்சர் படத்தின் ஒன் லைன் தான் நான் சொன்னேன்.. ஆனால் அவர்தான்.. இயக்குநர் கார்த்தி சுப்புராஜ்!

Karthik Subbaraj Talks About Game Changer Story : கோலிவுட் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் கேம் சேஞ்சர். இந்த திரைப்படத்தின் மூலம் அவர் தெலுங்கு சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகினார். நடிகர் ராம் சரண் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படமானது, எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாமல் தோல்வியடைந்தது. இந்த இடத்தின் கதையை எழுதியதை குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பேசியுள்ளார்.

Karthik Subbaraj : கேம் சேஞ்சர் படத்தின் ஒன் லைன் தான் நான் சொன்னேன்.. ஆனால் அவர்தான்.. இயக்குநர் கார்த்தி சுப்புராஜ்!

கார்த்தி சுப்பராஜ்

Published: 

24 Apr 2025 16:35 PM

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்  (Karthik Subbaraj) பிரபல இயக்குநராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் சினிமாவில் பணியாற்றி வருகிறார். இவரின் இயக்கத்தில் தற்போது மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ரெட்ரோ (Retro) . இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா (Suriya) முன்னணி கதாநாயகனாகக் கலக்கி வருகிறார். இந்த படமானது மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. மேலும் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde)  கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படமானது வரும் 2025, மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் ரிலீஸை முன்னிட்டு ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நேர்காணல் எனப் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய கார்த்திக் சுப்புராஜ், ராம் சரணின் (Ram Charan)  கேம் சேஞ்சர் (Game changer) படத்தில் கதை எழுதியது குறித்துப் பேசியுள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசியதாவது, “நான் கேம் சேஞ்சர் படத்தின் ஒரு வரி கதையை மட்டுமே இயக்குநர் சங்கர் சாரிடம் கூறினேன். நான் எழுதிய கதை அடிமட்டத்திலிருந்து ஒரு IAS ஆபிசர் எவ்வாறு வருகிறார் என்பதை வைத்து எழுதியிருந்தேன். ஆனால் சங்கர் சாரிடம் அந்த கதை சென்றவுடன் அவர் மிகவும் பிரமாண்டமாகவும் வேறு உலகமாக அந்த படத்தின் கதையை பெரியதாக்கியுள்ளார். மேலும் பல கதாபாத்திரங்களையும் அவர் இணைந்துள்ளார் என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஓபனாக பேசியுள்ளார்.

கேம் சேஞ்சர் திரைப்படம் ஹிட்டா ? ஃபிளாப்பா ?

இயக்குநர் சங்கர் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் கேம் சேஞ்சர். இந்த படத்தில் பிரபல தெலுங்கு முன்னணி நடிகர் ராம் சரண் நடித்திருந்தார். இந்த படமானது இயக்குநர் ஷங்கரின் பிரம்மாண்டமாக மேக்கிங்கில் வெளியாகியது. இதில் ராம் சரணுக்கு ஜோடியாக நடிகை கியாரா அத்வானி நடித்திருந்தார். தமிழில் கலக்கி வந்த இயக்குநர் ஷங்கர் தெலுங்கில் இயக்குநராக அறிமுகமான படமும் இதுதான். இந்த படமானது சுமார் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ராம் சரணின் இந்த படமானது கடந்த 2025, ஜனவரி மாதம் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியானது.

இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் வெளியானது. ராம் சரணின் நடிப்பில் பிரம்மாண்ட எதிர்பார்ப்பில் வெளியான இந்த படமானது எதிர்மறை விமர்சனங்களையும், ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருந்தது. அதன் காரணமாக இந்த படமானது தோல்வியடைந்தது. ரூ. 300 கோடிகளுக்கு மேல் பட்ஜெட்டில் உருவான இந்த படமானது, வெறும் ரூ. 178 கோடிகளை மட்டுமே வசூல் செய்திருந்தது. இந்த படமானது எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாமல் பெரும் தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.