ரெட்ரோ படத்தின் கதை அந்த பிரபல நடிகருக்காக எழுதியது – இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சொன்ன விசயம்
ரெட்ரோ படத்தில் நடிகர்கள் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே உடன் இணைந்து நடிகர்கள் ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், நாசர், கருணாகரன், பிரகாஷ் ராஜ், சுஜித் ஷங்கர் என பலர் நடித்துள்ளனர். படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என தமிழ் சினிமாவில் வலம் வருபவர் கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj). இவர் 2012-ம் ஆண்டு நடிகர்கள் விஜய் சேதுபதி (Vijay Sethupathy) மற்றும் ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியான பீட்சா படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். மிகவும் வித்யாசமான கதைக்களத்தை கொண்ட இந்தப் படம் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் 2014-ம் ஆண்டு நடிகர்கள் சித்தார்த், பபி சிம்ஹா, லக்ஷ்மி மேனன் ஆகியோரை வைத்து ஜிகர்தண்டா படத்தை இயக்கினார். படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் 2016-ம் ஆண்டு வெளியானது இறைவி படம். நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். படத்தில் வந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே இன்றளவும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒரு குடும்பத்தில் பெண்களின் இருப்பு எவ்வளவு முக்கியமானது என்றும் அவர்களின் சிறப்பையும் வெளிபடுத்தும் விதமாக இந்தப் படம் உருவாகி இருந்தது.
இந்தப் படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான மெர்குரி, பேட்ட, புத்தம் புது காலை, ஜகமே தந்திரம், நவரசா, மகான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஆகிய படங்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் ரஜினியிடன் இணைந்து பணியாற்றிய பேட்ட படம் ஃபேன் பாய் மொமண்டாக தி ரியல் ஃபேன் பாய் என்றே கூறவேண்டும்.
ஒரு தீவிர ரசிகர் அந்த நடிகருக்காக உருவாக்கும் படம் எப்படி மாஸாக இருக்கும் என்பதற்கு பேட்ட படம் ஒரு பெரிய எடுத்துக்காட்டாக இருந்தது. படம் ரசிகர்களிடையே குறிப்பாக ரஜினி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்பராஜ் அவரது பணியை சிறப்பாக செய்திருப்பார்.
இந்த நிலையில் தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் நடிகர் சூர்யாவின் 44 -வது படத்தை இயக்கியுள்ளார். ரெட்ரோ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படம் மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் நாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
இந்த நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இந்தப் படத்தின் கதையை பிரபல நடிகருக்காக எழுதியது என்று வெளிப்படையாக பேசியுள்ளார். அதன்படி இந்த கதையை நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்காக எழுதியதாக அவர் தெரிவித்துள்ளது சினிமா வட்டாரங்கள் மற்றும் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.