Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Love You Movie : AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாகியுள்ள முதல் திரைப்படம்.. எந்த மொழியில் தெரியுமா?

Love You AI Movie : கன்னட மொழியில், செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தி "லவ் யூ" என்ற திரைப்படம் வெறும் 10 லட்ச ரூபாயில் உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குநர்கள் நரசிம்ம மூர்த்தி மற்றும் நூதன் ஆகியோர் இணைந்து இரண்டு கதாபாத்திரங்களுடன் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர். பாடல்கள், இசை, நடிகர்கள் என அனைத்தும் AI மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் படம் தணிக்கை சான்றிதழ் பெற்று, விரைவில் வெளியாக உள்ளது.

Love You Movie : AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாகியுள்ள முதல் திரைப்படம்.. எந்த மொழியில் தெரியுமா?
AI லவ் யூ திரைப்படம் Image Source: Social media
barath-murugan
Barath Murugan | Published: 16 Apr 2025 21:34 PM

இந்திய சினிமாவை  (Indian cinema) பொறுத்தவரை அந்தந்த காலத்திற்கு ஏற்ப கதைகளும் சரி, படங்கள் உருவாவதும் சரி மாறிக்கொண்டேதான் இருக்கும். அந்த வகையில் தற்போது அனைவராலும் பயன்படுத்தப்படும் AI  (Artificial intelligence) தொழிநுட்படத்தை (Technology) பயன்படுத்து ஒரு திரைப்படமே உருவாகியுள்ளது என்று கூறினால் நம்ப முடியுமா. ஆமாம் கன்னட மொழியில் (Kannada) செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது. அந்த படத்திற்கு “லவ் யூ” (Love you) என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குநர்களும், , தயாரிப்பாளர்களுமான நரசிம்ம மூர்த்தி மற்றும் நூதன் (Narasimha Murthy and Nutan) என இருவரும் இணைந்து உருவாக்கியுள்ளனர். இந்த படமானது இரு கதாபாத்திரங்களை மட்டும் வைத்தது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் நடிகர்கள் முதல், டப்பிங், பாடல்கள், இசையமைப்பு மற்றும் பின்னணி காட்சிகள் என முழுவதும் AI தொழினுட்பத்தை வைத்து முழுமையாக தயாரித்துள்ளனர். இந்த லவ் யூ படத்தை உருவாக்குவதற்கு, பெரிய படங்களைப் போலக் கோடிக் கணக்கில் இல்லாமல், வெறும் ரூ. 10 லட்சத்தில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது இது குறித்த தகவல்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

AI லவ் யூ திரைப்படம் :

இந்த படத்தை உருவாக்கிய தயாரிப்பாளரும், இயக்குநருமான நரசிம்ம மூர்த்தி, பெங்களூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் பூசாரி ஆவார். இவர் ஏற்கனவே படங்களை இயக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வெறும் இரு கதாபாத்திரத்தை வைத்து ஒரு திரைப்படத்தையே உருவாக்கியுள்ளார்.

ஒரு சாதாரணமான நடிகர்களைப் படங்களில் நடிக்க அழைத்தாலும், ஒருவருக்கே சுமார் ரூ.10 லட்சம் வரை சம்பளம் கொடுக்கவேண்டியது இருக்கும். ஆனால் ஒரு முழு படத்தையே AI தொழிநுட்படத்தை பயன்படுத்து வெறும் ரூ. 10 லட்சத்தில் முடித்துவிட்டார்.

இருவர் உருவாக்கிய AI திரைப்படம் :

இந்த படத்தை உருவாக்க ஒரு குழுவாகச் செயல்படவில்லை, இந்த படத்தை இயக்குநரும், தயாரிப்பாளருமான நரசிம்ம மூர்த்தி மற்றும் நூதன் என இருவர் மட்டுமே உருவாக்கியுள்ளனர். இந்த AI படத்தின் பாடலிலிருந்து, ஒவ்வொரு காட்சிகளையும் இவர்கள் இருவரும் மட்டுமே உருவாக்கியுள்ளனர்.

AI படத்தின் தனிச் சிறப்புகள் :

இந்த படமானது சுமார் 95 நிமிடம் கால அளவு கொண்டுள்ளது. இந்த 95 நிமிடத்தில் 12 பாடல்கள் இந்த படத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்திற்குத் தணிக்கை குழுவும் யு/ஏ தரச் சான்றிதழை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 6 மாதத்தில் உருவான இந்த படமானது விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த AI படமானது சாதாரணப் படத்தைப் போலப் பல அங்கிள் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது.

'தாஜ்மஹால் எனக்கு சொந்தமானது' - உரிமை கோரிய நபரால் பரபரப்பு
'தாஜ்மஹால் எனக்கு சொந்தமானது' - உரிமை கோரிய நபரால் பரபரப்பு...
வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? - வாஸ்து சொல்லும் டிப்ஸ் இதுதான்
வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? - வாஸ்து சொல்லும் டிப்ஸ் இதுதான்...
ப்ரொபோஸ் செய்யும் போது நீர்வீழ்ச்சியில் விழுந்த மோதிரம் - வைரல்!
ப்ரொபோஸ் செய்யும் போது நீர்வீழ்ச்சியில் விழுந்த மோதிரம் - வைரல்!...
ரூ.2,000-க்கு மேல் செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கு GST?
ரூ.2,000-க்கு மேல் செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கு GST?...
மருதமலை முருகன் கோயிலுக்கு போறீங்களா? முக்கிய அறிவிப்பு இதோ!
மருதமலை முருகன் கோயிலுக்கு போறீங்களா? முக்கிய அறிவிப்பு இதோ!...
'ஹேராம்' பட அனுபவங்களை பகிர்ந்துகொண்ட ராணி முகர்ஜி
'ஹேராம்' பட அனுபவங்களை பகிர்ந்துகொண்ட ராணி முகர்ஜி...
கிளாம்பாக்கம் நடை மேம்பாலத்தின் மதிப்பு ரூ.350 கோடியா..!
கிளாம்பாக்கம் நடை மேம்பாலத்தின் மதிப்பு ரூ.350 கோடியா..!...
யுவன் இசையில் விஜய் பாடிய முதல் பாடல் எது தெரியுமா?
யுவன் இசையில் விஜய் பாடிய முதல் பாடல் எது தெரியுமா?...
இளையராஜாவுக்கு மிஸ்ஸான தேசிய விருது? தேவர் மகனில் நடந்த சம்பவம்!
இளையராஜாவுக்கு மிஸ்ஸான தேசிய விருது? தேவர் மகனில் நடந்த சம்பவம்!...
சிறந்த காதல் படங்களின் லிஸ்ட் - உங்க பேவரைட் எது?
சிறந்த காதல் படங்களின் லிஸ்ட் - உங்க பேவரைட் எது?...
கொரிய மொழியில் சரளமாக பேசிய ஆட்டோ ஓட்டுநர்கள் - ஷாக்கான ஜோடி!
கொரிய மொழியில் சரளமாக பேசிய ஆட்டோ ஓட்டுநர்கள் - ஷாக்கான ஜோடி!...