ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளதை உறுதி செய்த சிவராஜ்குமார்

Shivarajkumar about Jailer: தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் மாஸாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் சிவராஜ்குமார். இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷின் அண்ணனாக நடித்தார். இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளதை உறுதி செய்த சிவராஜ்குமார்

ரஜினிகாந்த், சிவராஜ்குமார்

Published: 

16 Apr 2025 13:53 PM

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் (Rajinikanth) நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 (Jailer 2) படத்தில் தான் நடிக்க உள்ளதாக நடிகர் சிவராஜ்குமார் (Shivarajkumar) உறுதிப்படுத்தியுள்ளார். கன்னட திரையுல ரசிகர்கள் சிவண்ணா என்று அன்புடன் அழைக்கப்படுபவர் தான் நடிகர் சிவராஜ்குமார். இந்த நிலையில் சமீபத்தில் புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சைப் பெற்றார். இந்த சிகிச்சை தொடந்து நடிகர் சிவராஜ்குமார் தான் குணமாகிவிட்டதாக தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். மேலும் தனது நோய் குணமடைய வேண்டிக்கொண்ட அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்திருந்தார். கடந்த 2023-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் என்ற படத்தை இயக்கினார் நெல்சன். இதில் ரம்யா கிருஷ்ணன் ரஜினியின் மனைவியாகவும், வசந்த் ரவி மகனாகவும், மிர்ணா மேனன் மருமகளாகவும் நடித்திருந்தார்.

படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலராக இருக்கும் ரஜினி ஒரு பிரச்னையில் போலீசாக இருக்கும் தனது மகன் இறந்துவிட்ட நிலையில் அதற்கு காரணமானவர்களை பழிவாங்கும் செயலில் இறங்குவார். இந்த பழிவாங்கும் படலத்திற்காக பான் இந்திய நடிகர்களான மோகன் லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷராஃப் ஆகியோர் உதவி செய்ய வரும் கதாப்பாத்திரத்திற்காக கேமியோ ரோலில் நடித்திருந்தனர்.

படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் அடுத்த பாகத்திற்கான நாட் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வீடியோ முன்னதாக வெளியாகியுள்ள நிலையில் படம் பான் இந்திய மொழிகளில் மட்டும் இன்றி ஆங்கிலத்திலும் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. வெளிநாடுகளில் பல திரைகளில் இப்படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் பாகத்தில் நடித்த பான் இந்திய நடிகரக்ளான மோகன் லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷராஃப் ஆகியோர் மீண்டும் இந்த பாகத்தில் நடிப்பார்களா என்ற கேள்வி இருந்து வந்தது. முனனதாக பேட்டி ஒன்றில் மோகன்லாலிடம் இது குறித்து கேட்டபோது இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை என்று தெரிவித்திருந்தார்.

மேலும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க இயக்குநர் நெல்சன் திலீப் குமார் அழைப்பு விடுத்தால் நிச்சயமாக நடிப்பேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மற்ற நடிகர்களான ஜாக்கி ஷராஃப் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்கிறார்களா என்பது குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிவராஜ்குமாரின் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நடிகர் சிவராஜ்குமார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இரண்டாம் பாகத்தில் தான் நடிப்பதாக உறுதி செய்ததை அவர் தெரிவித்துள்ளார்.