பாதியில் நின்ற ரஜினி படம் – பணம் கொடுத்து உதவிய கமல் – இப்படி ஒரு சம்பவமா?
தங்கப்பதக்கம், ஆடு புலி ஆட்டம் படங்களுக்கு வசனம் எழுதியதன் மூலம் பிரபலமாக இருந்து மகேந்திரன் உமா சந்திரன் எழுதிய முள்ளும் மலரும் நாவலை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை எழுதினார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக Rajinikanth: பாலுமகேந்திராவை மகேந்திரனுக்கு கமல் அறிமுகப்படுத்தியிருக்கிறார். பாசமலர் அண்ணன் - தங்கை பாசம் எப்படி ரசிகர்கள் தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதே போல கிராமத்து பின்னணியில் வெளியான முள்ளும் மலரும் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது

இயக்குநர்கள் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற கலைவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் (Rajinikanth), அவரை அறிமுகப்படுத்திய கே.பாலசந்தரின் (K.Balachander) கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது உனக்கு பிடித்த இயக்குநர் யார் என கே.பாலசந்தர் கேட்க, யாரு எதிர்பாராத விதமாக மகேந்திரன் பெயரை சொன்னார். மகேந்திரன் – ரஜினிகாந்த் இணைந்து முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை என மூன்று படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள். இதில் கை கொடுக்கும் கை படம் கன்னடத்தில் வந்த கதா சங்கமா என்ற படத்தை அடிப்படையாக கொண்டு உருவானது. இதில் ஹைலைட் என்னவென்றால் கன்னட பதிப்பில் வில்லனாக நடித்த ரஜினி, தமிழில் ஹீரோவாக நடித்திருந்தார்.
மகேந்திரனிடம் பாலு மகேந்திராவை அறிமுகப்படுத்திய கமல்
தங்கப்பதக்கம், ஆடு புலி ஆட்டம் படங்களுக்கு வசனம் எழுதியதன் மூலம் பிரபலமாக இருந்து மகேந்திரன் உமா சந்திரன் எழுதிய முள்ளும் மலரும் நாவலை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை எழுதினார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக பாலுமகேந்திராவை மகேந்திரனுக்கு கமல் அறிமுகப்படுத்தியிருக்கிறார். பாசமலர் அண்ணன் – தங்கை பாசம் எப்படி ரசிகர்கள் தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதே போல கிராமத்து பின்னணியில் வெளியான முள்ளும் மலரும் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இளையராஜாவின் இசையில் ராமன் ஆண்டாளும், நித்தம் நித்தம் நெல்லு சோறு, செந்தாழம் பூவில், அடி பெண்ணே போன்ற பாடல்கள் இன்றளவும் கிளாசிக். கண்ணதாசன், பஞ்சு அருணாச்சலம், கங்கை அமரன் ஆகியோர் இந்தப் படத்தின் பாடல்களை எழுதினர். குறிப்பாக செந்தாழம் பூவில் பாடலில் பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன் என்ற வரிகள் கண்ணதாசனின் ஸ்பெஷல்.
ரஜினி – சரத் பாபு ஈகோ கிளாஷ்
படத்தில் அண்ணன் – தங்கை பாசம் ஒருபுறம் என்றால் உயர் அதிகாரியான சரத் பாபுவுக்கும் – ரஜினிகாந்த் ஈகோ மற்றொருபுறம் என உணர்வுகளில் விளையாடியிருப்பார் மகேந்திரன். மலை இறங்க சிரமப்படும் ஊர்காரர்களுக்கு உதவுவதற்காக டிராமை பயன்படுத்துவார் ரஜினிகாந்த். அது தெரிய வர அவர்களுக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டால் யார் பதில் சொல்வது என அவரை திட்டுவார் உயர் அதிகாரியான சரத் பாபு. இதுதான் இருவரும் சந்தித்துக்கொள்ளும் முதல் காட்சி. இருவர் பக்கமே நியாயம் இருக்கும். அடுத்தடுத்த காட்சிகள் சந்தர்ப்ப வசத்தால் இருவரும் மோதிக்கொள்வதாகவே இருக்கும். இந்த நிலையில் விபத்தில் ரஜினிக்கு கை போக, அதன் காரணமாக வேலை பறிபோய்விடும். இதனை தயங்கி தயங்கி சரத்பாபு ரஜினியிடம் சொல்வார். அதற்கு தன் மீதுள்ள வன்மத்தால் தான் அவர் தன்னை வேலையை விட்டு நீக்கி விட்டதாக நினைக்கும் ரஜினி, உங்க இடத்துல நான இருந்தாலும் அத தான் சார் பண்ணிருப்பேன். கேவலம் நாம மனுஷங்க தான என்பார். இப்படி படத்தில் குறைவான வசனங்களே இருந்தாலும் ஒவ்வொன்றும் நறுக்கென இருக்கும்.
தயாரிப்பாளரின் அதிருப்தி
வசனகர்த்தாவாக தங்கப் பதக்கம் படத்தில் சிவாஜி பேசிய ஆக்ரோஷ வசனங்களுக்கு சொந்தக்காரர். ஆனால் இந்தப் படத்தில் பெரும்பாலான காட்சிகளில் வசனம் குறைவாக வைத்து, காட்சி மொழியாலும் இசையாலும் கதை சொல்லி தமிழர்களுக்கு புதிய பாணியை அறிமுகப்படுத்தினார் மகேந்திரன். சொல்லப்போனால் இந்த விஷயத்தில் மணிரத்னத்தின் முன்னோடி மகேந்திரன் என சொல்லலாம். இந்தப் படம் படமாக்கிக்கொண்டிருக்கும்போது படத்தைப் பார்த்த தயாரிப்பாளர், இயக்குநரை அழைத்து என்னப்பா படத்தில் வசனமே இல்ல என கோபப்பட்டிருக்கிறார். அவர் உணர்வுப்பூர்வமான காட்சிகள், வசனங்கள் கொண்ட ஒரு படத்தை எதிர்பார்த்திருக்கிறார். அதன் பிறகு போனது போகட்டும் இனி ஒரு பைசா செலவு செய்ய மாட்டேன் என சொல்லியிருக்கிறார். செந்தாழம் பூவில் பாடலுக்கு அடிப்படையாக ஒரு காட்சியும் வேறு சில காட்சிகளும் படமாக்க வேண்டியிருந்திருக்கிறது.
கமலின் உதவி
செய்வதறியாது கமலை சந்தித்திருக்கிறார் மகேந்திரன். விஷயத்தை கேள்விப்பட்ட கமல், தயாரிப்பாளர் வேணு செட்டியாரை சந்தித்து எவ்வளவோ எடுத்து சொல்லியிருக்கிறார். ஆனால் தயாரிப்பாளர் கேட்பதாக இல்லை. பிறகு நான் பணம் கொடுத்து மீதமுள்ள காட்சிகளை படமாக்கிக்கொண்டால் உங்களுக்கு சம்மதமா என கேட்க, அவரும் சம்மதித்திருக்கிறார். பின்னர் கமல்ஹாசன் மீதமுள்ள காட்சிகள் படமாக்குவதற்கு தேவையான படத்தையும் தன் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களையும் அனுப்பி வைத்திருக்கிறார். அதன் பிறகே அந்தப் படம் மகேந்திரன் நினைத்த படி படமாக்கப்பட்டிருக்கிறது. படம் வெளியாகி ரசிகர்களால் வெகுவாக கொண்டடாடப்பட்டது. இன்றளவும் கிளாசிக் படங்களின் வரிசையில் இடம்பெற்றிருக்கிறது.