தக் லைஃப் படத்திலிருந்து வெளியானது ‘ஜிங்குச்சா’ லிரிக்கள் வீடியோ!
Jinguchaa - Lyrical | நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன் டிஆர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் தக் லைஃப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு 18-ம் தேதி ஏப்ரல் மாதம் 2025-ம் ஆண்டு நடைப்பெற்றது. இதில் படத்தில் இருந்து ஜிங்குச்சா என்ற பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியாகியுள்ளது.
உலக நாயகன் நடிகர் கமல் ஹாசன் (Kamal Haasan) நடிப்பில் உருவாகி உள்ள படம் தக் லைஃப் (Thug Life). இந்தப் படத்தை இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்கியுள்ளார். இதில் நடிகர் கமல் ஹாசனுடன் சிலம்பரசன் டிஆர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, அசோக் செல்வன், அபிராமி, ஜோஜு ஜார்ஜ் மற்றும் நாசர் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படம் ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று முன்னதாக படக்குழு அறிவித்திருந்தது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்தப் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தற்போது படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது. அதில் படத்தில் இருந்து ‘ஜிங்குச்சா’ என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
Video Credits: Saregama Tamil.