கைவிடப்பட்ட மணிரத்னம் படம் – விஜய்யின் ‘துப்பாக்கி’ உருவானது எப்படி? சுவாரசியத் தகவல்

அந்த நேரத்தில் காவலன்(Kaavalan), வேலாயுதம், நண்பன் போன்ற படங்கள் ஓரளவுக்கு கை கொடுத்தாலும் துப்பாக்கி தான் ஒரு நடிகராக அனைவராலும் ஏற்றுக்கொள்வதற்கு காரணமாக இருந்தது. குறிப்பாக சொன்னால் விஜய்யை பிடிக்காதவர்களுக்கு கூட துப்பாக்கி படத்தை கொண்டாடினர். ராணுவ வீரராக தோற்றம், மேனரிசம் என எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு ஃபிட்டாக திரையில் தோன்றி ரசிகர்களைக் கவர்ந்தார்.

கைவிடப்பட்ட மணிரத்னம் படம் - விஜய்யின் துப்பாக்கி உருவானது எப்படி? சுவாரசியத் தகவல்

துப்பாக்கி படத்தில் விஜய் - காஜல் அகர்வால்

Published: 

29 Mar 2025 03:28 AM

நடிகர் விஜய்யின் (Vijay) திரையுலக வாழ்க்கையில் அவரை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்ற படம் என்றால் நிச்சயம் துப்பாக்கிக்கு ஒரு பெரும் பங்கு இருக்கும். துப்பாக்கி முன் தொடர் தோல்விகளால் விமர்சனங்களுக்கு ஆளானார். அந்த நேரத்தில் காவலன்(Kaavalan), வேலாயுதம், நண்பன் போன்ற படங்கள் ஓரளவுக்கு கை கொடுத்தாலும் துப்பாக்கி தான் ஒரு நடிகராக அவரை அனைவராலும் ஏற்றுக்கொள்வதற்கு காரணமாக இருந்தது. குறிப்பாக சொன்னால் விஜய்யை பிடிக்காதவர்களுக்கு கூட துப்பாக்கி படத்தை கொண்டாடினர். ராணுவ வீரராக தோற்றம், மேனரிசம் என எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு ஃபிட்டாக திரையில் தோன்றி ரசிகர்களைக் கவர்ந்தார். தமிழில் முதல் ரூ.100 கோடி படம் என துப்பாக்கியை சொல்வாார்கள்.

பொன்னியின் செல்வனில் விஜய்?

துப்பாக்கி படம் உருவான விதம் மிகவும் சுவாரசியமானது. நண்பனுக்கு பிறகு நடிகர் விஜய் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதாக இருந்தது. அந்தப் படத்துக்கு கால்ஷீட் கொடுத்து காத்திருந்தார். பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத் தேவனாக விஜய், ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருள்மொழி வர்மனாக மகேஷ்பாபு ஆகியோரை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார். அப்போது பட்ஜெட் காரணமாக அந்தப் படத்தை அவரால் எடுக்க முடியாமல் போனது. படம் கைவிடப்பட்ட நிலையில் அந்தப் படத்தின் கால்ஷீட்டில் விஜய் நடித்த படம் தான் துப்பாக்கி.

விஜய்யுடன் பணியாற்றிய அனுபவம்

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய ஏ.ஆர்.முருகதாஸ், இந்தப் படம் தொடங்குவதற்கு முக்கிய காரணம் எஸ்.ஏ.சந்திரசேகர் தான். அவர் தான் இந்தப் படத்தை முதலில் துவங்கினார். நான் உதவி இயக்குநராக இருந்த காலத்தில் இருந்தே நாங்கள் இருவரும் இணைந்து படம் செய்ய பேசிக்கொண்டிருந்தோம். ஆனால் சில காரணங்கள் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. விஜய்யை மிகவும் பிடிக்கும். மாஸ் ஹீரோ. சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்க கூடியவர். படத்தில் ஹிந்தியை மிகவும் துல்லியமாக பேசினார். மும்பையில் இருப்பவர்கள் கூட ஆச்சரியபட்டார்கள். விரைவில் அவரை வைத்து ஒரு ஹிந்தி படம் இயக்க வேண்டும். துப்பாக்கி படத்தில் அதிகபட்சமாக அவரது திறமையை வெளிக் கொண்டிருக்கிறேன். விஜய் ரசிகர்கள் 5 தடவை பார்த்தால் கூட போராடிக்காது என்றார்.

பெரிய ஹீரோயினை கேட்ட விஜய்

அதன் பிறகு பேசிய விஜய்யின் அப்பாவும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், ”இந்த படம் வெற்றிபெறும் சொன்னால் நான் ஏதோ ஜோக் சொல்வது போல இருக்கும். காரணம் இந்தப் படத்தின் இயக்குநர் அப்படி. வெற்றிகளையே தந்து பழக்கப்பட்டவர். 2, 3 வருடங்களுக்கு ஒரு முறை தான் நான் மகனிடம் கால்ஷீட் வாங்கி படம் பண்ணுவேன். அப்படி ஒரு படம் எனக்கு குடு என கேட்டபோது எனக்கு பெரிய டைரக்டர் தாங்க, பெரிய காம்பினேஷன் தாங்க. நான் கால்ஷீட் தரேன் என்றார். நான் பெரிய டைரக்டரை தேடியபோது என் கண்ணில் பட்டவர் ஏ.ஆர்.முருகதாஸ். அவரிடம் கேட்டபோது அவர் மிகப்பெரும் தொகையைக் கேட்டார். சம்மதித்தேன். அவருக்கு முதலில் அட்வான்ஸ் கொடுக்க சொன்னார் விஜய். அவர் சொன்னபடி அவருக்கு அட்வான்ஸ் கொடுத்தேன். பின்னர் எனக்கு பெரிய ஒளிப்பதிவாளர் வேணும், பெரிய கதாநாயகி வேணும் கேட்டார். ஆனால் இந்தப் படம் தவிர்க்க முடியாத காரணங்கள் தாணு தயாரித்தார். அவர் எல்லோரையும் அனுசரித்து போக கூடியவர். ஹாரிஸ் ஜெயராஜ் படம் பார்த்துவிட்டு பத்து காக்க காக்க” என்றார்.