Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ajith Kumar : குட் பேட் அக்லி சம்பவம்.. 5 நாட்களில் ரூ.100 கோடி வசூல்!

Good Bad Ugly Box Office Collection : நடிகர் அஜித் குமாரின் முன்னணி நடிப்பில் வெளியாகி, திரையரங்குகளில் சம்பவம் செய்துவரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த படத்தில் அஜித்திருக்கு ஜோடியாக த்ரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார். இவர்களின் முன்னணி நடிப்பில் வெளியான இப்படமானது 5 நாட்களில் சுமார் ரூ.100 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Ajith Kumar : குட் பேட் அக்லி சம்பவம்.. 5 நாட்களில் ரூ.100 கோடி வசூல்!
குட் பேட் அக்லி வசூல் விவரம்Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 15 Apr 2025 19:41 PM

கோலிவுட் முன்னணி கதாநாயகன் அஜித் குமாரின் (Ajith Kumar)  முன்னணி நடிப்பில் வெளியாகிய படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly) . இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு முன் இவரின்  இயக்கத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெறி பெற்ற படம் மார்க் ஆண்டனி. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்துதான் அஜித்தின், குட் பேட் அக்லி படத்தை இயக்கியுள்ளார். அஜித்தின் 63வது படமான, இதில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்திருந்தார். இவர்கள் இருவரின் ஜோடி தொடர்ந்து விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். இந்த படமானது அஜித்தின் ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பிற்குத் தீனியாக இருக்கும். அஜித்தின் ஹிட் படங்களில் இருக்கும் மாஸ் காட்சிகளும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்த படமானது கடந்த 2025, ஏப்ரல் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. தற்போது திருடன் 5 நாட்களைக் கடந்த நிலையில், குட் பேட் அக்லி படமானது தமிழகத்தில் மட்டும் மொத்தமாக ரூ.100 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த அறிவிப்பை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு :

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் முன்னணி இயக்கத்தில் வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றவரும் படம் குட் பேட் அக்லி. அஜித்தின் அசாதாரமான நடிப்பில் வெளியான இந்த படமானது வெளியான முதல் நாளிலே சுமார் ரூ.33 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இதைத் தொடர்ந்து தற்போது இப்படமானது 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ.100 கோடிகளை வசூல் செய்துள்ளதாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.

அஜித் குமாரின் இந்த படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் கதைக்களமானது ஒரு கேங்ஸ்டர் தனது குடும்பத்திற்காக, அந்த வேலையை விட்டுவிட்டுத் திருந்தும் ஹீரோ போன்ற கதைக்களம் இருக்கிறது. மேலும் இப்படத்தில் அப்பா மற்றும் மகனின் எமோஷன் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

மேலும் பல ஆண்டுகளுக்குப் பின் நடிகை சிம்ரன் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து இந்த படத்தின் வெற்றியின் முக்கிய பங்காக அர்ஜுன் தாஸ் மற்றும் நடிகை பிரியா பிரகாஷ் வாரியரின் நடனம் என்று கூறலாம். “தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானா” என்ற பாடலுக்கு இவர்கள் இணைந்து நடனமாடியிருந்தது மக்களிடையே பாரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் குட் பேட் அக்லி படமானது சில ஆண்டுகளுக்குப் பின் அஜித் மீண்டும் பார்மிற்கு வந்த படமாகவும் கருதப்படுகிறது.

கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா
கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா...
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!...
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!...
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?...
தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில்!
தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில்!...
நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை...
நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை......
சென்னையில் கனமழை தொடரும்.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
சென்னையில் கனமழை தொடரும்.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்!...
சம்மர் விடுமுறையை டெல்லியை சுற்றியும் கொண்டாடலாம் வாங்க..!
சம்மர் விடுமுறையை டெல்லியை சுற்றியும் கொண்டாடலாம் வாங்க..!...
நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!...
ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளதை உறுதி செய்த சிவராஜ்குமார்
ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளதை உறுதி செய்த சிவராஜ்குமார்...
SC: விசாரணைக்கு வரும் வக்ஃப் சட்ட திருத்தத்துக்கு எதிரான மனுக்கள்
SC: விசாரணைக்கு வரும் வக்ஃப் சட்ட திருத்தத்துக்கு எதிரான மனுக்கள்...