‘பணம் மீது ஆசையில்லை… அண்ணனுக்கு கோபம் இதுதான்’ – அஜித் பட காப்பி ரைட்ஸ் குறித்து பேசிய கங்கை அமரன்
Gangai Amaran About Copy Rights: நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து வரும் குட் பேட் அக்லி படத்தில் தனது பாடல்கள் மூன்றை அனுமதியின்றி பயண்படுத்தியதாக படக்குழு மீது இசையமைப்பாளர் இளையராஜா நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக கங்கை அமரன் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

அஜித், கங்கை அமரன், இளையராஜா
நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) நடிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் வசூலில் படம் பாக்ஸ் ஆபிஸை தெரிக்கவிடுகிறது. இந்தப் படத்தில் நடிகர் அஜித்தின் மனைவியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்திருந்தார். முன்னதாக இவர்கள் இருவரும் இணைந்து நடித்த விடாமுயற்சி படம் பிப்ரவரி மாதம் 6-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. மேலும் இந்த குட் பேட் அக்லி படத்தில் அஜித் குமார் மற்றும் த்ரிஷாவுடன் இணைந்து நடிகர்கள் அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில், பிரபு, பிரியா பிரகாஷ் வாரியார் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
படத்தின் ரெட் டிராகன் என்ற பெரிய கேங்ஸ்டராக வலம் வரும் நடிகர் அஜித் குமார் இந்தியாவையை ஆட்டிப் படைத்து வருகிறார். அப்போது அவருக்கும் த்ரிஷாவிற்கு குழந்தை பிறக்கிறது. குழந்தையை பார்ப்பதற்காக ஹாஸ்பிடலுக்கு செல்லும் அஜித்தை த்ரிஷா தடுக்கிறார். முழுவதுமாக கேங்ஸ்டர் வாழ்க்கையை விட்டுவிட்டு தன்னையும் குழந்தையையும் வந்து பார்க்குமாறு கூறிவிடுகிறார்.
தனது மகனுக்காக அஜித் தனது கேங்ஸ்டர் வாழ்க்கையை விட்டுவிட்டு திருந்தி வாழ முடிவு செய்து ஜெயிலில் 18 வருஷம் இருக்கிறார். இந்த நிலையில் தனது மகனை 18 வருடங்களுக்கு பிறகு பார்க்க வரும் அஜித்திற்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அவரது மகன் போதைப் பொருள் வழக்கு மற்றும் கொலை வழக்கிற்காக ஜெயிலில் இருக்கிறார்.
அவரை திட்டமிட்டு ஜெயிலில் அடைத்துள்ளார்கள் என்பதை தெரிந்து அது யார் என்று தேடுகிறார் அஜித். அப்போது அர்ஜுன் தாஸ் தான் அதை செய்துள்ளார். அவர் ஏன் அதை செய்தார், தனது மகனை ஜெயிலில் இருந்து வெளியே கொண்டுவந்தாரா அஜித் என்பதே படத்தின் கதை. இந்த நிலையில் படத்தில் அர்ஜுன் தாஸின் அறிமுகக் காட்சி முதல் மூன்று இடங்களில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அனுமதி இன்றி படக்குழுவினர் குட் பேட் அக்லி படத்தில் தனது பாடல்களைப் பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையாராஜா ரூபாய் 5 கோடி நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்தார். இது முதல் முறை அல்ல இளையராஜா இதற்கு முன்பாக பல படங்களுக்கு இப்படி நோட்டிஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதுகுறித்து பல கருத்துகளும் தொடர்ந்து சினிமா வட்டாரங்கள் இடையேயும் சமூக வலைதளத்திலும் பரவி வருகின்றது. இந்த நிலையில் இந்த நஷ்ட ஈடு வழக்கு குறித்து இளையராஜாவின் தம்பி இசையமைப்பாளரும், இயக்குநரும், நடிகருமான கங்கை அமரன் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், அவர் பேசியதாவது, ”அஜித் படம் அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை. எங்கள் பாட்டு அவ்வளவுதான். உங்கள் படத்தின் இசையமைப்பாளரால் செய்ய முடியாத ஒன்றை எங்கள் பாடல்மூலம் நீங்கள் உங்கள் படத்தை வெற்றியடையச் செய்கிறீர்கள். அதற்கு அனுமதி கேட்டிருந்தால் நிச்சயமாக கொடுத்திருப்போம்.
பண ஆசை எல்லாம் ஒன்றும் இல்லை. எங்களிடம் செலவு செய்ய முடியாத அளவிற்கு பணம் உள்ளது. அனுமதி இல்லாமல் பாடல்களைப் பயன்படுத்துவதுதான் அண்ணனுக்கு (இளையராஜா) கோபம் என்று” அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.