கோலிவுட்டில் மே மாதம் ரிலீஸிற்கு காத்திருக்கும் படங்களின் லிஸ்ட் இதோ
5 movies releasing Kollywood in May Month 2025: மே 2025 தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு உற்சாகமாக இருக்கப் போகிறது. பல பெரிய படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. மே மாதம் வெளியாகும் படங்கள் அதிரடி, நாடகம் மற்றும் வேடிக்கை நிறைந்தவையாக உள்ளது. சூர்யா ரெட்ரோவுடன் பெரிய திரைகளில் வருவார், விஜய் சேதுபதி நடிப்பில் ஏஸ் படகும் வெளியாகிறது. அடுத்த மாதம் வெளியாகும் ஐந்து தமிழ் படங்களைப் பார்ப்போம்.

படங்கள்
டூரிஸ்ட் ஃபேமிலி: நடிகர் சசிக்குமார் (Actor Sasi Kumar) நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம் டூரிஸ்ட் ஃபேமிலி. படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் சசிக்குமாருக்கு நாயகியாக நடிகை சிம்ரன் (Actress Simran) நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர்கள் மிதுன் ஜெய் சங்கர், கமேலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் வருகின்ற மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வாழ்வதற்காக ஊரை விட்டு வரும் குடும்பத்தின் கதையை இந்தப் படம் காட்டுகிறது. படத்தினை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளது.
ரெட்ரோ: நடிகர்கள் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிக்கும் ரெட்ரோ ஒரு காதல் மற்றும் ஆக்ஷன் திரைப்படம் ஆகும். கதை 1980கள் மற்றும் 1990களுக்கு இடையில் நடக்கும் சம்பவத்தை விளக்குகிறது. நடிகர் சூர்யா ஒரு சிக்கலான கடந்த காலத்தைக் கொண்ட பாரிவேல் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படம் தனது இழந்த காதலைத் தேடும் அவரது பயணத்தைப் பின்தொடர்கிறது. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார. மேலும் இந்தப் படத்தில் நடிகை ஷ்ரியா சரண் சிறப்பு நடனம் ஆட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
மாமன்: நடிகர் சூரி மாமன் படத்தில் முற்றிலும் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் இருந்து விலகி, ஒரு ஃபேமிலி செண்டிமெண்ட் கதையில் நடிக்கிறார். இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ள இந்தப் படம், உணர்ச்சி மிகுந்த குடும்பப் பிணைப்புகள் நிறைந்த கதையைச் சொல்கிறது.
இந்தப் படத்தில் நடிகர் சூரி உடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண் மற்றும் ஸ்வாசிகா உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படம் மே மாதம் 16-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிடி நெக்ஸ்ட் லெவல்: ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் அடித்த ‘தில்லுக்கு துட்டு’ நகைச்சுவை-திகில் படத்தின் தொடரான நான்காவது படம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. நடிகர் சந்தானம் மீண்டும் நாயகனாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் பிரேம் ஆனந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து நடிகர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், கீதிகா திவாரி மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படம் இன்னும் காமெடிகள் மற்றும் திகில் நிறைந்த தருணங்களை திரைக்குக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் மே மாதம் 16-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஏஸ்: விஜய் சேதுபதியின் 51-வது படமான ஏஸ் திரைப்படம் அவரது வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்த காத்திருக்கின்றது. இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகை ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். பெரும்பாலும் மலேசியாவில் படமாக்கப்பட்ட இதில் நடிகர்கள் யோகி பாபு மற்றும் பப்லு பிரிதிவீராஜ் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். படம் மே மாதம் 23-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.