கோலிவுட் சினிமாவில் வரிசைக்கட்டும் படங்கள்… எந்தப் படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Kollywood Movies List: 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே கொலிவுட் சினிமாவில் படங்கள் வரிசைக் கட்டி வெளியாகி வருகின்றது. இதுவரை பல படங்கள் வெளியாகியுள்ள நிலையில் இனி வரும் நாட்களில் என்ன என்ன படங்கள் வெளியாக உள்ளது எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்

கோலிவுட் சினிமாவில் வரிசைக்கட்டும் படங்கள்... எந்தப் படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?

படங்கள்

Published: 

16 Apr 2025 08:42 AM

டென் ஹவர்ஸ்: நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் வட்டம். நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் கடந்த 2022-ம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு தற்போது நடிகர் சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் டென் ஹவர்ஸ்.  இந்தப் படத்தை இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் சிபிராஜ் உடன் இணைந்து கஜராஜ், திலீபன், ஜீவா ரவி, சரவன் சுப்பையா, ராஜ் ஐயப்பா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு ஜனவரி மாதம் 2025-ம் ஆண்டு வெளியிட்டது. இந்த நிலையில் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படம் ஏப்ரல் மாதம் 18-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கேங்கர்ஸ்: நடிகரும் இயக்குநருமான சுந்தர் சி தற்போது கேங்கர்ஸ் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இதில் இவருடன் இணைந்து நடிகர்கள் வடிவேலு, கேத்ரின் தெரசா, வாணி போஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சத்யா இசையமைத்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணி இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் படம் வருகின்ற ஏப்ரல் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ரெட்ரோ: நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் உடன் தனது 44-வது படத்திற்காக கூட்டணி வைத்தார். படத்தில் அறிவிப்பு வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதில் சூர்யா ரெட்ரோ ஸ்டைலில் இருப்பதைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் படத்தின் டைட்டில் டீசரைப் படகுழு தற்போது வெளியிட்டுள்ளது. கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த டீசர். படத்திற்கு ரெட்ரோ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. படம் வருகின்ற மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

டூரிஸ்ட் ஃபேமிலி: நடிகர் சசிக்குமார் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்துள்ளார். இவர்களுடன் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘ஆவேஷம்’ படத்தில் நடித்த நடிகர் மிதுன் ஜெய் சங்கர் மற்றும் ராட்சசி படத்தில் நடித்த கமேலேஷ் நடித்துள்ளனர்.

மேலும் இந்தப் படத்தில் யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந் இயக்கத்தில் உருவான இந்தப் படம் வருகின்ற மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தக் லைஃப்: உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள அதிரடி ஆக்‌ஷன் படம் தக் லைஃப். இந்தப் படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இதில் கமல் ஹாசனுடன் இணைந்து நடிகர்கள் சிலம்பரசன், திரிஷா, அசோக் செல்வன், அபிராமி என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படம் வருகின்ற ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.