பெருசு முதல் ஸ்வீட் ஹார்ட் வரை… இன்று ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ
What To Watch OTT Movies This Week: ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் படங்கள் வெளியாவதைப் போல ஓடிடியிலும் வாரம் வாரம் படங்களின் வரவு அதிகரித்து வருகின்றது. சில படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியிலும் வெளியாகிறது. இந்த நிலையில் இன்று ஓடிடியில் வெளியான படங்களின் அப்டேட் இதோ.

பெருசு, ஸ்வீட் ஹார்ட்
ஸ்வீட் ஹார்ட்: சின்னத்திரையில் பிரபல ஆங்கராக தனது வாழ்க்கையை தொடங்கிய ரியோ ராஜ் (Rio Raj) அதனை தொடர்ந்து சீரியல்களில் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். சன் டிவியில் விஜேவாக இருந்தபோதே ரியோவிற்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம். அதனை தொடர்ந்து விஜய் டிவியில் சூப்பர் ஹிட் அடித்த சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் தமிழகத்தில் உள்ள பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனார். அதனை தொடர்ந்து நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் 2019-ம் ஆண்டு வெளியான வெள்ளித்திரையில் நாயகனாக அறிமுகம் ஆனார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. அதனை தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான பிளான் பண்ணி பண்ணனும், ஜோ படங்களும் சுமாரான வரவேற்பையே பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் ஸ்வீட் ஹார்ட் (Sweet Heart) படம் வெளியானது.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ்.சுகுமார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் ரியோவுடன் இணைந்து நடிகர்கள் கோபிகா ரமேஷ், ரெடின் கிங்ஸ்லி, அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி ஆகியோர் நடித்துள்ளனர்.
படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்ற நிலையில் இன்று ஏப்ரல் மாதம் 11-ம் தேதி 2025-ம் ஆண்டு முதல் ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
சாவா: இயக்குநர் லக்ஸ்மன் உடேகர் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான படம் சாவா. இதில் நடிகர் விக்கி கௌஷல் நாயகனாக நடித்துள்ளார். சாவா என்ற இந்த இந்திப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். மகாராஜா சத்ரபதி சிவாஜி மற்றும் சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
இதில் சாம்பாஜி மகாராஜாவாக நடிகர் விக்கி கௌஷலும் அவரது மனைவி ராணி ஏசுபாயாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை தொடர்ந்து படம் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி 2025-ம் ஆண்டு முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
பெருசு: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கும் படம் பெருசு. நடிகர் வைபவ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் நிஹாரிகா, சுனில் ரெட்டி, கருணாகரன், பால சரவணன், ரெடின் கிங்க்லி என பலர் நடித்துள்ளனர். படத்தை இயக்குநர் இளங்கோ ராம் இயக்கியுள்ளார்.
அடல்ட் காமெடி படமான இந்தப் படத்தின் ட்ரெய்லர் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் இன்று ஏப்ரல் மாதம் 11-ம் தேதி 2025-ம் ஆண்டு முதல் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.