தமிழ் சினிமாவில் வரிசைக் கட்டும் மாஸ் ஹீரோக்களின் படங்கள்… எந்தப் படம் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Top Heros Movies List: தமிழ் சினிமாவில் 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே முன்னணி நடிகர்களின் படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அதன்படி நடிகர்கள் கமல் ஹாசன் முதல் ரஜினிகாந்த் வரை இந்த ஆண்டு வெளியாகவுள்ள முன்னணி நடிகர்களின் படங்களின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

ரெட்ரோ: நடிகர் சூர்யா (Suriya) நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ரெட்ரோ (Retro). சூர்யாவின் 44-வது படமான இந்தப் படத்திற்காக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் உடன் கூட்டணி வைத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியானது. ரெட்ரோ ஸ்டைலில் நடிகர் சூர்யா இருப்பதைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். சூர்யாவிற்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். முன்னதாக படத்தின் டைட்டில் டீசரைப் படக்குழு வெளியிட்டது. கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியானது அந்த டீசர். படத்திற்கு ரெட்ரோ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. படம் வருகின்ற மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தில் நடிகர்கள் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டேவுடன் இணைந்து நடிகர்கள் ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன், நாசர், பிரகாஷ் ராஜ் என படல் நடித்துள்ளனர். படத்தின் ட்ரெய்லர் 18-ம் தேதி ஏப்ரல் மாதம் 2025-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
தக் லைஃப்: உலக நாயகன் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள அதிரடி ஆக்ஷன் படம் தக் லைஃப். இயக்குநர் மணிரத்னம் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசனுடன் இணைந்து நடிகர்கள் சிலம்பரசன், திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜூ ஜார்ஜ் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் சமீபத்தில் படத்தின் ப்ரஸ் மீட் நடந்தது. அதில் கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன் உள்ளிட்ட நடிகர்கள் படம் குறித்து பேசியது ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தப் படம் ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இட்லி கடை, குபேரா: நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது இட்லி கடை, மற்றும் குபேரா என இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. அதன்படி இட்லி கடை படத்தை நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வருகிறார். இதில் அவருடன் இணைந்து நடிகர்கள் நித்யா மேனன், அருண் விஜய், ராஜ் கிரண்ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
படம் முன்னதாக ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்பு அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குபேரா படம் இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜூனா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் முற்றிலும் வேறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னதாக படத்தில் அறிமுக வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து படம் ஜூன் மாதம் 20-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கூலி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கூலி. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் நாகார்ஜூனா, உபேந்திரா, சௌபின் ஷாகிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் உட்பட பலர் நடித்துள்ளனர். படம் ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மதராஸி: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மதராஸி. அமரன் படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் இவருடன் இணைந்து பிஜு மேனன், வித்யுத் ஜம்வால், ருக்மணி வசந்த், விக்ராந்த், ஷபீர் கல்லாரக்கல், பிரேம் குமார், சஞ்சய் மற்றும் சாச்சனா நமிதாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். படம் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.