அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்க வேண்டிய தமிழ் திகில் படங்கள் லிஸ்ட் இதோ!

Watch To Watch: தமிழ் சினிமாவில் இதுவரை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற திகில் படங்களை அமேசான் ப்ரைம் வீடியோவில் தற்போது பார்க்கலாம். அதன்படி தியேட்டரில் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்கள் திகில் பட ரசிகர்களுக்கு பிடித்தவற்றை தற்போது பார்க்கலாம்.

அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்க வேண்டிய தமிழ் திகில் படங்கள் லிஸ்ட் இதோ!

திகில் படங்கள்

Updated On: 

29 Apr 2025 19:36 PM

அரண்மனை 4: இயக்குநர் சுந்தர் சி (Sundar C) இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளியான படம் அரண்மனை (Aranmanai). இந்தப் படத்தில் அவர் நாயகனாகவும் நடித்திருந்தார். தொடர்ந்து திகில் மற்றும் காமெடியை மையமாக வைத்து உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம், நான்காம் பாகம் என வெளியான அனைத்து பாகங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படத்தின் நான்காம் பாகம் 2024-ம் ஆண்டு மே மாதம் 3-ம் தேதி கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் சுந்தர் சி உடன் இணைந்து நடிகர்கள் தமன்னா பாட்டியா, ராஷி கண்ணா, சந்தோஷ் பிரதாப், ராமச்சந்திர ராஜு, கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் டெல்லி கணேஷ் என பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது போல ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்த காமெடி திகில் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கின்றது.

தந்திரம்: இயக்குநர் முத்தையாலா மெஹர் தீபக் இயக்கத்தில் அக்டோபர் மாதம் 13-ம் தேதி 2023-ம் ஆண்டு வெளியான படம் தந்திரம். இந்தப் படத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் குர்ராம், பிரியங்கா ஷர்மா, அவினாஷ் எலந்தூர், ஸ்ரீனிவாச மூர்த்தி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கின்றது.

கருங்காபியம்: இயக்குநர் டீக்கே இயக்கத்தில் கடந்த மே மாதம் 19-ம் தேதி 2023-ம் ஆண்டு வெளியான படம் கருங்காபியம். இந்தப் படத்தில் நடிகை காஜல் அகர்வால் நாயகியாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் ரெஜினா கசாண்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கின்றது.

நிஷப்தம்: இயக்குநர் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் 2-ம் தேதி 2020-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் நிஷப்தம். இந்தப் படத்தில் மாதவன் நாயகனாக நடிக்க நடிகை அனுஷ்கா ஷெட்டி நாயகியாக நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் மைக்கேல் மேட்சன், ஷாலினி பாண்டே, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கின்றது.