ஒரே கதையில் வில்லனாகவும் ஹீரோவாகவும் நடித்த ரஜினி – விஜயகுமார் தயாரித்த அந்தப் படம் எது தெரியுமா?
1970களில் எம்ஜிஆருடன் இன்று போல் என்றும் வாழ்க, சிவாஜியுடன் தீபம், கமலுடன் உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில் விஜயகுமார் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். முள்ளும் மலரும், ஜானி படங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் , இயக்குநர் மகேந்திரன் ஆகியோர் 3வது முறையாக இணைந்த படம் கை கொடுக்கும் கை.

ரஜினிகாந்த் - விஜயகுமார்
ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் முத்திரை பதித்தவர் நடிகர் விஜயகுமார் (Vijayakumar). 90களுக்கு பிறகு கம்பீரமான ஊர் தலைவர், குடும்பத் தலைவர் வேடம் என்றால் இயக்குநர்களுக்கு சட்டென நினைவுக்கு வருவது விஜயகுமாரின் பெயராகத் தான் இருக்கும். எஜமான், கிழக்கு சீமையிலே (Kizhakku Cheemayile) நாட்டாமை, நட்புக்காக, முதல்வன், பாரதிகண்ணம்மா போன்ற ஏராளமான படங்களில் கம்பீரமான வேடங்களில் அசத்தியிருப்பார். அவரது குரலும் அவருக்கு பெரும் பலம். தமிழ், தெலுங்கு , மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் விஜயகுமார் நடித்திருக்கிறார். தங்கம், வசம்சம், நந்தினி, ராசாத்தி போன்ற சில டிவி சீரியல்களிலும் முக்கிய வேடங்களில் அவர் நடித்திருக்கிறார்.
1970களில் எம்ஜிஆருடன் இன்று போல் என்றும் வாழ்க, சிவாஜியுடன் தீபம், கமலுடன் உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில் விஜயகுமார் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். முள்ளும் மலரும், ஜானி படங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் , இயக்குநர் மகேந்திரன் ஆகியோர் 3வது முறையாக இணைந்த படம் கை கொடுக்கும் கை.
ஒரே கதையில் வில்லனாகவும் ஹீரோவாகவும் நடித்த ரஜினி
கடந்த 1984 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் ரஜினியுடன் ரேவதி, சௌகார் ஜானகி, ஒய்ஜி மகேந்திரன், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ரஜினிகாந்த்தை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்க விஜயகுமார் திட்டமிட்டிருக்கிறார். இதுதொடர்பாக ரஜினிகாந்த்திடம் கேட்டபோது உடனடியாக சம்மதித்த அவர், மகேந்திரனை இயக்குநராக சொல்லியிருக்கிறார். இந்தப் படம் கன்னடத்தில் வெளியான கதா சங்கமம் என்ற படத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு தமிழுக்கு ஏற்றபடி திரைக்கதை அமைத்தார் இயக்குநர் மகேந்திரன். இதில் ஹைலைட் என்னவென்றால் இந்தப் படத்தின் கன்னட வெர்ஷனில் ரஜினிகாந்த் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கன்னடத்தில் ரஜினிகாந்த் நடித்த வேடத்தில் தமிழில் சின்னி ஜெயந்த் நடித்தார்.
கிளைமேக்ஸால் வந்த பிரச்னை
இந்தப் படத்தை பார்த்த விஜயகுமாருக்கு அந்தப் படத்தின் கிளைமேக்ஸ் மீது உடன்பாடு இல்லை. இதனை மகேந்திரனிடம் சொன்ன போது அதனை அவர் மாற்றிக்கொள்ள மறுத்திருக்கிறார். இதுதொடர்பாக ஒரு பேட்டியில் மகேந்திரன் இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் தயாரிப்பாளர்களால் மாற்ற சொல்லி அழுத்தம் கொடுக்கப்பட்டது. மேலும் ரஜினிக்கும் ரேவதிக்கும் இடையில் டூயட்டும் வைக்க சொன்னார்கள் என்று பேசியிருந்தார். ரஜினிகாந்த் – மகேந்திரன் இருவரது முந்தைய படங்களான முள்ளும் மலரும் ஜானி போல இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்தப் படத்தில் இளையராஜாவின் இசையில் இடம் பெற்ற தாழம் பூவே பாடல் இன்றளவும் பலரது விருப்ப பாடலாக இருந்து வருகிறது.
பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனது மகன் அருண் விஜய் ஹீரோவாக நடித்த சினம் படத்தை விஜயகுமார் தயாரித்திருந்தார். இந்தப் படத்தை பழம்பெரும் இயக்குநர் ஜி.என்.ரங்கநாதனின் மகன் ஜி.என்.ஆர் குமாரவேலன் இயக்கினார். குமாரவேலன் ஏற்கனவே நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ், வாகா போன்ற படங்களை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. சினம் படத்தில் அருண் விஜய்யுடன் பல்லக் லால்வானி ஹீரோயினாக நடிக்க, காளி வெங்கட் ஆர்.என்.ஆர் மனோகர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். சபீர் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார்.