ஒரு காமெடி சீன் கூட இல்லாமல் சுந்தர்.சி இயக்கிய படம் – அப்படி என்ன படம் தெரியுமா?
Sundar.C: காமெடிக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்துவரும் சுந்தர்.சி காமெடியே இல்லாமல் ஒரு படம் இயக்கினார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அவ்வளவு சீரியஸான கதையம்சம் கொண்ட கமலின் அன்பே சிவம் படத்தில் கூட கமல் - மாதவன் இடையேயான அறிமுக காட்சிகள் நகைச்சுவையாக படமாக்கப்பட்டிருக்கும்.

சுந்தர்.சி
இயக்குநர் சுந்தர்.சி (Sundar.c) காமெடி படங்களுக்கு பெயர் பெற்றவர். கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான ‘முறை மாமன்’ படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அந்தப் படத்தை முதலில் சரத் குமாரை வைத்து ஆக்சன் படமாக எடுக்க திட்டமிருந்ததாகவும் ஆனால் அவரது கால்ஷீட் கிடைக்காததால், அந்த கதையை சற்று மாற்றி ஜெயராமை வைத்து காமெடி படமாக எடுத்ததாகவும் ஒரு பேட்டியில் சுந்தர்.சி தெரிவித்திருக்கிறார். இந்தப் படத்தில் ஜெயராம், கவுண்டமணி, (Goundamani) செந்தில் ( senthil) ஆகியோர் போட்டி போட்டு காமெடியில் அதகளம் செய்திருப்பார்கள். குறிப்பாக அண்ணன் முத்து அண்ணன் என மாஸ்க் அணிந்த கவுண்டமனி தன்னை அடையாளம் தெரியாமல் இருக்கும் வளர்ப்பு நாயிடம் கதறுவதெல்லாம் வேற லெவல் காமெடி.
ரிலீஸின்போது அதிகம் கவனம் பெறாத உள்ளத்தை அள்ளித்தா
அதனைத் தொடர்ந்து கார்த்திக் ஹீரோவாக நடித்த உள்ளத்தை அள்ளித்தா படத்தை இயக்கினார் சுந்தர்.சி. இந்தப் படம் வெளியான போது துவக்கத்தில் அதிகம் கவனம் பெறாமல் போனதாம். ஒரு வாரத்துக்கு பிறகே மெல்ல மெல்ல கூட்டம் வந்து படம் பெரிய வெற்றிபெற்றது. கார்த்திக் மட்டுமல்லாமல் கவுண்டமணி, மணிவண்ணன், செந்தில் செய்த காமெடி கலாட்டாக்கள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. குறிப்பாக மணிவண்ணன் இரட்டை வேடங்களில் இரண்டு வித டயலாக் மாடுலேஷனில் கலக்கியிருப்பார். இந்தப் படத்தைத் தொடர்ந்து கார்த்திக்குடன் மீண்டும் இணைந்த மேட்டுக்குடி படத்தின் காமெடி காட்சிகள் பெரிதளவில் ரசிகர்களைக் கவர்ந்தன.
ரஜினியுடன் அருணாச்சலம்!
இதனையடுத்து ஹாட்ரிக் வெற்றியால் 4 வது படமே ரஜினிகாந்த்தை வைத்து அருணாச்சலம் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்து. அவ்வளவு பெரிய மாஸ் ஹீரோவை வைத்து முதல் பாதி முழுக்க தனது திரைக்கதையில் காமெடியை அள்ளி தெளித்திருப்பார். தில்லு முல்லு, தம்பிக்கு எந்த ஊரு படங்களுக்கு ரஜினியின் காமெடி பக்கத்தை அதிகம் வெளி கொண்ட படமாக அமைந்தது. கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு, சந்தானம், சூரி, யோகி பாபு என ஒவ்வொருவரது திரையுலக வாழ்விலும் அவர்களது சிறந்த பங்களிப்பை வழங்கிய படமாக இயக்குநர் சுந்தர்.சியின் படங்களே அமைந்திருக்கின்றன.
காமெடியே இல்லாத சுந்தர்.சி படம்
காமெடிக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்துவரும் சுந்தர்.சி காமெடியே இல்லாமல் ஒரு படம் இயக்கினார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அவ்வளவு சீரியஸான கதையம்சம் கொண்ட கமலின் அன்பே சிவம் படத்தில் கூட கமல் – மாதவன் இடையேயான அறிமுக காட்சிகள் நகைச்சுவையாக படமாக்கப்பட்டிருக்கும். இப்படி இருக்க முழுக்க சீரியஸான திரில்லர் வகை படம் ஒன்றை இயக்கினார் சுந்தர்.சி. கிரி படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சுந்தர். சி – அர்ஜுன் கைகோர்த்த படம் சின்னா. கிரி படத்தின் வடிவேலுவின் காமெடி எந்த அளவுக்கு படத்தின் வெற்றிக்கு உதவியது என அனைவரும் அறிந்ததே. ஆனால் முழுக்க காமெடி நடிகர்களே இல்லாமல் சின்னா படத்தை சுந்தர்.சி இயக்கினார். ஆனால் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. பொதுவாக சுந்தர்.சியின் ஓடாத படங்கள் கூட அந்தப் படத்தின் காமெடி காட்சிகளால் மக்களால் நினைவுகூறப்படும். ஆனால் இந்தப் படத்தில் காமெடி இல்லாததால் இப்படி ஒரு படம் இருப்பதையே பலரும் மறந்திருப்பர்.