Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இயக்குநர் விக்ரமன் – ரஹ்மான் இணைந்த ஒரே படம் எது தெரியுமா?

AR Rahman: சின்ன பட்ஜெட் படங்களை இயக்கி வந்த விக்ரமன், பெரும்புள்ளி, நான் பேச நினைப்பதெல்லாம், கோகுலம் என சிறிய முதலீட்டில் உள்ள படங்களை இயக்கிவந்தார் விக்ரமன். இந்த நிலையில் விஜய்யுடன் இணைந்த பூவே உனக்காக படம் இருவரது திரையுலக வாழ்க்கையிலும் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த ஒரு படம் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நடிகர் விஜய்யை கொண்டு சேர்த்தது.

இயக்குநர் விக்ரமன் – ரஹ்மான் இணைந்த ஒரே படம் எது தெரியுமா?
ஏ.ஆர்.ரஹ்மான் - விக்ரமன்
karthikeyan-s
Karthikeyan S | Published: 22 Mar 2025 05:55 AM

இயக்குநர் விக்ரமன் (Vikraman) தமிழ் சினிமாவில் மென்மையான உணர்வுகளை பேசி வெற்றி கண்டவர். பெரும்பாலும் இவரது படங்களில் வில்லன்கள் என யாரும் இருக்கமாட்டார்கள்.அனைத்து கதாப்பாத்திரங்களும் நல்லவர்களாகவே இருப்பார்கள். சூழ்நிலைகளே வில்லன்களாக இருக்கும். இயக்குநர் மணிவண்ணன் (Manivannan), பார்த்திபன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர் ஆர்.பி.சௌத்ரி (RB Choudary) தயாரித்த புது வசந்தம் படத்தின் மூலம் இயக்குநாக அறிமுகமானார். முதல் படமே சூழ்நிலை காரணமாக நான்கு இளைஞர்களுடன் ஒரு இளம்பெண் அவர்களுடனேயே தங்கி நட்புடன் பழகுவதும் அதனை சமுதாயம் எதிர்கொள்ளும் விதமும் என சிக்கலான கதையை கையிலெடுத்திருப்பார். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

விஜய்க்கு திருப்புமுனையை ஏற்படுத்திய பூவே உனக்காக

தொடர்ந்து சின்ன பட்ஜெட் படங்களை இயக்கி வந்த விக்ரமன், பெரும்புள்ளி, நான் பேச நினைப்பதெல்லாம், கோகுலம் என சிறிய முதலீட்டில் உள்ள படங்களை இயக்கிவந்தார் விக்ரமன். இந்த நிலையில் விஜய்யுடன் இணைந்த பூவே உனக்காக படம் இருவரது திரையுலக வாழ்க்கையிலும் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த ஒரு படம் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நடிகர் விஜய்யை கொண்டு சேர்த்தது. காதல், சென்டிமென்ட், காமெடி என முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் விஜய். இந்தப் படம் மூலம் தமிழ் நாட்டின் பல பகுதிகளில் ரசிகர் மன்றங்கள் துவங்கப்பட்டன. அனைத்து சென்டர்களிலும் இந்தப் படம் பெரும் வெற்றிபெற்று 270 நாட்கள் ஓடியது.

அடுத்ததாக அவர் சரத்குமாருடன் இணைந்த சூர்ய வம்சம் மாபெரும் வெற்றி படமாக அமைந்து 90ஸ்களின் பேவரைட் படங்களில் ஒன்றாக இருந்துவருகிறது. இன்றும் டிவியில் ஒளிபரப்பப்பட்டால் டிஆர்பியில் அந்தப் படம் தான் முன்னிலையில் இருக்கிறது. காதல் கோட்டை படத்துக்கு பிறகு சூர்ய வம்சம் படத்தில் தேவயானியை நடிக்க வைக்க, தேவயானியை விக்ரமன் கேட்டிருக்கிறார். அப்போது தேவயானி தங்கியிருந்த ஹோட்டலுக்கு பக்கத்தில் பூவே உனக்காக படம் ஓடிக்கொண்டிருந்த தியேட்டரை காட்டி அந்தப் படத்தின் இயக்குநர் தான் இவர் என சொல்லியிருக்கிறார்கள். உடனடியாக சம்மதம் தெரிவித்திருக்கிறார். காரணம் பூவே உனக்காக படத்துக்கு கிடைத்த வரவேற்பை நேரடியாகவே பார்த்திருக்கிறார் என்பதுதான்.

விக்ரமன் படத்தில் நடிக்க யோசித்த கார்த்திக்

அதன் பிறகு கார்த்திக்குடன் இவர் இணைந்த உன்னிடத்தில் என்னை கொடுத்தேன். இந்தப் படத்தில் நடிக்க கார்த்திக் தயங்கியிருக்கிறார். காரணம் இந்தப் படத்தின் கதை. ஆதரவற்று நிற்கும் தனக்கு பிடித்த பெண்ணை அவர் விருப்பப்படி பாடகராக்கி பார்ப்பது என்ற அதே போன்ற கதையம்சம் கொண்ட நந்தவனத் தேரு படத்தில் அவர் நடித்திருந்த நிலையியல் அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பதுதான். ஆனால் விக்ரமன் தன் ஸ்டைலில் திரைக்கதை அமைத்து படத்தை வெற்றிப்படமாக்கினார்.

இதே விக்ரமன் தன் வழக்கமான பாணியிலிருந்து விலகி மாணவர்கள் அரசியலை பேசிய படம் புதிய மன்னர்கள். விக்ரம் இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். பொதுவாக அவர் சிற்பி, எஸ்.ஏ.ராஜ்குமார் ஆகியோரிடம் மட்டுமே பணியாற்றி வந்த விக்ரமன் முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்த படம் புதிய மன்னர்கள். படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் இந்தப் படத்தின் பாடல்களும் தீவிர ரஹ்மான் ரசிகர்கள் தவிர மற்றவர்களுக்கு தெரியாமலயே இருந்துவிட்டன. எடுடா அந்த சூரிய மேளம், வானில் ஏணி போட்டு, நீ கட்டும் சேலை போன்ற பாடல்கள் இன்றளவும் ரஹ்மான் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. ல

சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!
சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!...
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி...
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்...
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!...
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!...
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?...
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?...
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!...
பணக்காரர்களின் கடன் வாங்கும் யுக்தி - வரியைத் தவிர்க்க செம பிளான்
பணக்காரர்களின் கடன் வாங்கும் யுக்தி - வரியைத் தவிர்க்க செம பிளான்...
தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதம்! வேலை காட்டும் வெயில்..!
தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதம்! வேலை காட்டும் வெயில்..!...
பட்ஜெட் விலையில் பவர் ஹவுஸ்: ரெட்மி டர்போ 4 ப்ரோவின் சிறப்பம்சம்!
பட்ஜெட் விலையில் பவர் ஹவுஸ்: ரெட்மி டர்போ 4 ப்ரோவின் சிறப்பம்சம்!...