தசாவதாரம் படத்தில் இப்படி ஒரு சுவாரஸ்ய சம்பவமா? நடிகர் கமல் ஹாசன் சொன்ன விசயம்
Dasavathaaram Movie: தமிழ் சினிமாவை உலக சினிமா அளவிற்கு உயர்த்த எப்போதும் பாடுபடுபவர் நடிகர் கமல் ஹாசன். அப்படி அவர் உழைப்பில் உருவான படம் தான் தசாவதாரம். இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதியவர் கமல் ஹாசன் தான். 10 கதாப்பாத்திரங்களிலும் கமல் ஹாசன் தான் நடித்திருந்தார்.

தசாவதாரம்
நடிகர் கமல் ஹாசன் (Kamal Haasan) கடந்த 2018-ம் ஆண்டு வெளியான தசாவதாரம் (Dasavathaaram) படத்தில் 10 கதாப்பாத்திரங்களில் நடித்து கலக்கியிருப்பார். அதில் ஒரு கதாப்பாத்திதிரத்திற்கு திமுகவின் முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி சொன்ன கருவை மையமாக வைத்து கதை எழுதியதாக நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் பெரிய எக்ஸ்பிரிமெண்டாக அமைந்த படம் தசாவதாரம். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து
அசின், நாகேஷ், ஜெயப்பிரதா, மல்லிகா ஷெராவத், கே.ஆர்.விஜயா உட்பட நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. படம் ரசிகர்கைடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை பெற்றது. பல உலக தரம் வாய்ந்த டெக்னிக்கை இந்தப் படத்தில் பயன்படுத்தி இருந்தனர்.
இந்தப் படத்தில் மொத்தம் 10 வேடங்களில் கமல் ஹாசன் நடித்து நம் அனைவரையும் அசர வைத்திருந்தார். அதற்காக கமல் மேற்கொண்ட சிரமங்கள் அதிகம். அதற்கு ஆதாரமாக வீடியோவை கூட படக்குழு வெளியிட்டு இருந்தனர். ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் ஒரு பின்கதையை வைத்து அவர்கள் அனைவரும் இணையும் ஒரு இடம் உருவாகும்.
படம் பற்றி எதுவும் தெரியாமல் படத்தை பார்ப்பவர்களுக்கு கமல் தானா இது என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு கமலின் கதாப்பாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருந்தது. சைண்டிஸ்ட் முதல் ஜார்ஜ் புஸ் வரை வெளி நாட்டவர், ஜாப்பனீஸ், வயதான பாட்டி, வளர்ந்த மனிதர், போலீஸ் அதிகாரி, போராளி, பாடகர், ஃப்ளாஸ்பேக்கில் வரும் பார்ப்பனர் என 10 வேடங்களிலும் கலக்கியிருப்பார் நடிகர் கமல் ஹாசன். இந்தப் படத்தை பிரபலங்கள் பலரும் ஆச்சரியத்தில் பார்த்தனர்.
படத்தைப் பார்த்த ரசிகர்கள் படம் முடிந்து வெளியே வந்தது எந்த எந்த கேரக்டர் எல்லாம் கமல் ஹாசன் நடித்திருந்தார் என்று கண்டுபிடிப்பதே ஒரு போட்டியாக வைத்துள்ளனர். இந்த நிலையில் இந்தப் படம் குறித்து கலைஞர் கருணாநிதியிடம் பேசியபோது அவர் என்ன கூறினார் என்பது குறித்து கமல் ஒரு விழாவில் பேசியுள்ளார்.
அதில் அவர் இந்தப் படத்தில் பூவராகன் என்ற கதாப்பாத்திரம் அழிந்துவரும் மாங்குரூஸ் குறித்து போராடும் நபராக இருப்பார் என்று கலைஞரிடம் கூறியதாகவும் அதற்கு கலைஞர் இது ரசிகர்களுக்கு புரியாது மணல் கொள்ளை பத்தி எடுப்பா என்று சொன்னதாகவும் அதன் பிறகே மணல் கொள்ளைக்கு எதிராக போராடும் நபராக அந்த கதாப்பத்திரத்தை எழுதியதாக கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
தற்போது கமல் ஹாசன் நடிப்பில் தக் லைஃப் படம் தயாராகி வருகின்றது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படம் ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிட்டுள்ளார்.