Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நடிகர் ஸ்ரீயா இது? அவருக்கு என்ன ஆச்சு? வெளியான புகைப்படங்களால் ரசிகர்கள் அதிர்ச்சி

வழக்கு எண் 18/9, மாநகரம் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகர் ஸ்ரீ, கடைசியாக இருகப்பற்று என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த 2 வருடங்களாக அவரது நடிப்பில் எந்தப் படங்களும் வெளியாகாத நிலையில் ஒல்லியாக மிகவும் பரிதாபத்துக்குரிய தோற்றத்தில் இருக்கும் அவரது புகைப்படங்கள் வெளியாகி ரசகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

நடிகர் ஸ்ரீயா இது? அவருக்கு என்ன ஆச்சு? வெளியான புகைப்படங்களால் ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகர் ஸ்ரீ
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 12 Apr 2025 18:39 PM

விஜய் டிவியில் (Vijay TV) கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் பிரபலமானவர் ஸ்ரீ(Sri). இதனைத் தொடர்ந்து இயக்குநர் பாலாஜி சக்திவேலின் (Balaji Sakthivel) வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படம் நடிகர் ஸ்ரீக்கு அடையாளமாகவும் அமைந்தது. அந்த வேடத்துக்காக நடிகர் சிவகார்த்திகேயனும் ஆடிஷனில் கலந்துகொண்டதாக பாலாஜி சக்திவேல் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். இந்தப் படமும் அவருக்கு நல்ல பெயரைத் பெற்றுத் தந்தது. இயக்குநர் லோகேஷ் கனகராஜின் முதல் படமான மாநகரம் படம் வெற்றிப் படமாக அமைந்ததோடு ஸ்ரீயின் கதாப்பாத்திரமும் பேசப்பட்டது. ஸ்ரீயின் பல படங்கள் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றவை. அவரும் யதார்த்தமாக நடிக்க கூடியவர் என ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இருப்பினும் அவருக்கான வாய்ப்புகள் கிடைக்காமலேயே இருந்தன.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஸ்ரீ நடிப்பில் இறுகப்பற்று என்ற படம் வெளியாகியிருந்தது. யுவராஜ் தயாளன் இயக்கியிருந்த இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார். ஸ்ரீயுடன் விக்ரம் பிரபு, சானியா ஐயப்பன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், அபர்நிதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்தப் படமும் விமர்சன ரீதியாக அவருக்கு பாராட்டுகள் கிடைத்தன. படமும் வெற்றிப்படமாக அமைந்தது. ஆனால் படம் வெளியாகி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகியும் அவருக்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

பிக்பாஸ் வாய்ப்பை வீணாக்கிய ஸ்ரீ

அவ்வப்போது நடிகர் ஸ்ரீ சிறந்த நடிகர், அவருக்கு என்ன ஆச்சு, அவருக்கு ஏன் சரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி கேள்வி எழுப்புவது வழக்கம்.  கடந்த 2017 ஆம் ஆண்டு பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார். ஆனால் ஒரே நாளில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அந்த நிகழ்ச்சியிலும் தனக்கு மன ரீதியாக சில பிரச்னைகள் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். ஒருவேளை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தால் அந்த சீசனில் ஆரவ், ஓவியாவுக்கு வாய்ப்புகள் கிடைத்தது போல அவருக்கும் வாய்ப்புகள் கிடைத்திருக்கும என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

நடிகர் ஸ்ரீக்கு என்ன ஆச்சு?

 

 

View this post on Instagram

 

A post shared by Shriram Natarajan (@shri_blueticked)

இந்த நிலையில் மிகுந்த பரிதாபமான நிலையில் நடிகர் ஸ்ரீயின் புகைப்படங்கள் சமூக வலைதலங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் ஸ்ரீயின் பெயரிலான இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மிகவும் ஒல்லியான தோற்றத்தில் சட்டை இல்லாமல் மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டிருக்கிறார்.  உண்மையில் இது அவரது கணக்கா அல்லது வேறு யாரும் அவரது பெயரில் புகைப்படங்களை பதிவேற்றுகிறார்களா என்பது குறித்து தெரியவில்லை. மேலும் அதில் இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் அவருக்கு மன ரீதியான பிரச்னைகள் இருப்பது போல் தெரிவதாகவும், அவருக்கு லோகேஷ் கனகராஜ் போன்றவர்கள் அவருக்கு உதவ வேண்டும் எனவும் ரசிகர்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

சம்பவம் செய்த சுப்மன், சுதர்சன்! கொல்கத்தாவை கடைந்தெடுத்த குஜராத்
சம்பவம் செய்த சுப்மன், சுதர்சன்! கொல்கத்தாவை கடைந்தெடுத்த குஜராத்...
சுவிட்சுக்கு பதிலாக சிரிஞ்ச் மூலம் பல்பை ஆன் செய்யும் இளைஞர்!
சுவிட்சுக்கு பதிலாக சிரிஞ்ச் மூலம் பல்பை ஆன் செய்யும் இளைஞர்!...
பனிக்கட்டியா? வைரமா? வைரலாகும் ஐஸ்லாந்தின் டைமண்ட் பீச் வீடியோ!
பனிக்கட்டியா? வைரமா? வைரலாகும் ஐஸ்லாந்தின் டைமண்ட் பீச் வீடியோ!...
திருமண பரிசாக நீல நிற டிரம்... மணமக்களுக்குக் காத்திருந்த ஷாக்!
திருமண பரிசாக நீல நிற டிரம்... மணமக்களுக்குக் காத்திருந்த ஷாக்!...
சுந்தர் சி-யின் கேங்கர்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!
சுந்தர் சி-யின் கேங்கர்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!...
பிரச்சனையை கொண்டுவரனும் என்றே கமல் செய்வார்- கே.எஸ்.ரவிக்குமார்!
பிரச்சனையை கொண்டுவரனும் என்றே கமல் செய்வார்- கே.எஸ்.ரவிக்குமார்!...
ஒரிஜினலைப் போலவே போலி ரூ.500 நோட்டுக்கள் - எப்படி கண்டுபிடிப்பது?
ஒரிஜினலைப் போலவே போலி ரூ.500 நோட்டுக்கள் - எப்படி கண்டுபிடிப்பது?...
ஜே.டி.வான்ஸை இந்திய முறைப்படி வரவேற்ற பிரதமர் மோடி..!
ஜே.டி.வான்ஸை இந்திய முறைப்படி வரவேற்ற பிரதமர் மோடி..!...
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.32,000 வரை விலை குறைத்த ஹீரோ!
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.32,000 வரை விலை குறைத்த ஹீரோ!...
தேர்தலில் நாம் தமிழர் கட்சி பாஜகவுடன் கூட்டணியா? சீமான் விளக்கம்!
தேர்தலில் நாம் தமிழர் கட்சி பாஜகவுடன் கூட்டணியா? சீமான் விளக்கம்!...
கம்மி செலவில் அதிக பலன்கள்.. திராட்சை நீரில் பல பலன்கள்!
கம்மி செலவில் அதிக பலன்கள்.. திராட்சை நீரில் பல பலன்கள்!...