Vignesh Shivan : பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி… நியூ அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன்!
Love Insurance Kompany Movie Update : நடிகை நயன்தாராவின் கணவரும், பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் விக்னேஷ் சிவன். இவரின் முன்னணி இயக்கத்தில், பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. பிரதீப் ரங்கநாதனின் முன்னணி நடிப்பில் உருவாகிவரும் இந்த படமானது பண்டிகை தேதியில் வெளியாகவுள்ளது என விக்னேஷ் சிவன் புதிய அப்டேட் கொடுத்துள்ளார்.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம்
பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் இருந்து வருபவர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan). இவரின் முன்னணி நடிப்பில் 3வதாக உருவாகிவரும் படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany). இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவில் கோமாளி (Comali) திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தினை தொடர்ந்து, அவரின் இயக்கத்தில் வெளியான லவ் டுடே (love Today) படத்தின் மூலமாகவே கதாநாயகனாகவும் அறிமுகமானார். இயக்கத்தில் மட்டுமில்லாமல், நடிப்பினால் மக்களை கவர்ந்த இவருக்கு, அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாக நடிப்பதற்கும் வாய்ப்புகள் கிடைத்து. இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக டிராகன் திரைப்படம் வெளியானது. இந்த படமானது எதிர்பார்த்ததை விட, அதிகம் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.
இந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே, இயக்குநர் விக்னேஷ் சிவனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வந்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக டோலிவுட் நாயகி கிருத்தி ஷெட்டி நடித்து வந்தார். இப்படத்தின் ஷூட்டிங்கும் சமீபத்தில் முழுமையாக முடிவடைந்துள்ளது. இந்நிலையில், இந்த படமானது எப்போது ரிலீசாகும் என்பதை குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் அப்டேட் கொடுத்துள்ளார்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட பதிவு :
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். அந்த பதிவில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ஷூட்டிங் புகைப்படங்களை பகிர்ந்து நெகிழ்ச்சியான அனுபவத்தை குறித்து அவர் எழுதியுள்ளார். அதில் ” முற்றிலும் பொழுதுபோக்கு தொடர்பான கதைக்களத்துடன் இந்த படம் உருவாக்கி வருகிறது. தற்போது ஷூட்டிங் நிறைவை தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் பணியில் இருந்து வருகிறது.
அனைவரின் ஆதரவுடன் இந்த படம் நிச்சயம் வெற்றி பெரும் என்று நினைக்கிறேன். மேலும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சிறப்பாக கொண்டாடும் வகையில் பண்டிகை தேதியில் இந்த லவ் இன்சரண்ஸ் கம்பெனி படத்தை உங்களுக்காக வெளியிடுவோம் என்று கூறியுள்ளார்.
இந்த திரைப்படமானது தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷ்ன் பணியில் இருந்து வரும் நிலையில், வரும் 2025ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான், மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்து உள்ளனர். டிராகன் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதை போல, இந்த படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.