மங்காத்தா 2 வருகிறதா? இயக்குநர் வெங்கட் பிரபு ஓபன் டாக்!
Venkat Prabhu about Ajith Kumar Movie: இறுதியாக நடிகர் விஜயை வைத்து விஜயின் 68-வது படத்தை இயக்கினார் வெங்கட் பிரபு. தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று பெயர் வைக்கப்பட்ட அந்தப் படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். டீஏஜிங் மூலம் மகன் விஜயை குறைந்த வயதில் காட்டும் டெக்னிக்கை பயன்படுத்தியிருந்தார் வெங்கட் பிரபு.

அஜித், வெங்கட் பிரபு
பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு (Venkat Prabhu) அஜித் குமார் (Ajith Kumar) படத்தை இயக்குவது குறித்து ஒரு விருது விழாவில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாடகர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மூத்த மகன் தான் வெங்கட் பிரபு. இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு தம்பி மகன் வெங்கட் பிரபு. 1975-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி சென்னையில் பிறந்தார். சினிமாவில் நடிகர், பாடகர், இயக்குநர் என்ற பன்முகத் தன்மையோடு இருக்கிறார் வெங்கட் பிரபு. முதலில் நடிகராக குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த வெங்கட் பிரபு சென்னை 28 படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். 2007-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் இளைஞர்கள் மட்டும் இன்றி குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப்படமாக மாறியது.
சென்னை 28 படத்திற்காக விஜய் விருதும், மாநில அரசின் விருதும் வென்றனர். அதனை தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான சரோஜா மற்றும் கோவா ஆகிய இரண்டு படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. வெங்கட் பிரபு படம் என்றாலே ஜாலியாக இருக்கும் என்ற ட்ரெண்ட் செட்டை உருவாக்கினார் வெங்கட் பிரபு.
தனது 4-வது படத்திலேயே தல அஜித் குமார் உடன் கூட்டணி வைத்தார் வெங்கட் பிரபு. அஜித்தின் 50-வது படம் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக அஜித் குமார் அதுவரை இல்லாத ஒரு கதாப்பாத்திரத்தில் கலக்கியிருப்பார் என்றே கூறலாம்.
அஜித்தின் மங்காத்தா படத்தை இயக்கியதற்காக ITFA சிறந்த இயக்குனர் விருது
எடிசன் விருதுகள் – ஆண்டின் சிறந்த இயக்குனர் ஆகிய விருதுகளை வென்றார் இயக்குநர் வெங்கட் பிரபு. அதனை தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான மாசு என்கின்ற மாசிலாமணி, சென்னை 28 II ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
பின்பு கடந்த 2021-ம் ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் மாநாடு என்ற படத்தை இயக்கிநார் வெங்கட் பிரபு. இந்தப் படம் சிம்பு மற்றும் வெங்கட் பிரபு இருவருக்கும் கம்பேக் என்றே கூறலாம். டைம் லூப் என்ற கான்செப்டை மையமாக வைத்து உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு நடிகர் விஜயின் நடிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் வெளியாகி விமர்சன ரீதியாக கலவையான விமர்சனத்தைப் பெற்றது. ஆனால் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடந்து அடுத்து எந்த ஹீரோவை இயக்க உள்ளார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் நடிகர் அஜித் குமார் படத்தை இயக்குவது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில், மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவேனா என்று தெரியவில்லை. ஆனால், வாய்ப்பு கிடைத்தால் அஜித்தின் படத்தை இயக்குவேன் என்று தெரிவித்துள்ளார்.