சரத்குமார் படத்தில் விருப்பமே இல்லாமல் நடித்த வடிவேலு – இயக்குநர் ஓபன் டாக்

Director Suresh About Actor Vadivelu: 1990-ல் நடிப்பு பயணத்தை தொடங்கிய வடிவேலு ரஜினி, கமல், விஜயகாந்த், அஜித், விஜய், விக்ரம், பிரபுதேவா, சரத்குமார் என பலருடன் இணைந்து நடித்துள்ளார். சுமார் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். காமெடி உலகில் தான்தான் அரசன் என்பது போல ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கினார் வடிவேலு.

சரத்குமார் படத்தில் விருப்பமே இல்லாமல் நடித்த வடிவேலு - இயக்குநர் ஓபன் டாக்

வடிவேலு

Published: 

16 Apr 2025 17:24 PM

நடிகர் வடிவேலு (Vadivelu)  சரத்குமாரின் (Sarathkumar) படத்தில் விருப்பமே இல்லாமல் நடிச்சாரு என்று இயக்குநர் சுரேஷ் வெளிப்படையாக பேசியது இணையத்தில் கவனம் பெற்றுவ் வருகின்றது. கடந்த 1991-ம் ஆண்டு இயக்குநர் கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில் நடிகர் ராஜ்கிரண் தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்த படம் என் ராசாவின் மனசிலே. இந்த திரைப்படத்தில் முதன் முதலாக ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார் நடிகர் வடிவேலு. அதனை தொடர்ந்தும் இயக்குநர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் நடிகர் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான ஆத்தா உன் கோயிலிலே படத்தில் நடித்தார். பின்பு நடிகர் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1992-ம் ஆண்டு இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் வெளியான சின்னகவுண்டர் படத்தில் விஜயகாந்திடம் வேலை செய்யும் நபராக வடிவேலு நடித்திருப்பார். அந்தப் படத்தில் பெரிதாக காமெடி எதுவும் அமையவில்லை.

பின்பு மெல்ல மெல்ல கவுண்டமனி மற்றும் செந்தில் உடன் இணைந்து காமெடியனாக உருவெடுத்தார் நடிகர் வடிவேலு. கமல் ஹாசனின் நடிப்பில் வெளியான சிங்கார வேலன் மற்றும் தேவர் மகன் ஆகிய இரண்டு படங்களிலும் வடிவேலு நன்கு அறியப்படுக் கதாப்பத்திரத்தில் நடித்தார்.

தொடர்ந்து காமெடியனாக நடித்து வந்த வடிவேலு  2006-ம் ஆண்டு இயக்குநர் சங்கரின் தயாரிப்பில் இயக்குநர் சிம்புதேவனின் இயக்கத்தில் வெளிவந்தஉருவான‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி திரைப்படத்தில் முதன் முதலாக இரட்டை வேடங்களில் கதாநாயகனாக நடித்தார்.

அதனைத் தொடர்ந்து 2008-ம் ஆண்டு நடிகர் தம்பி ராமையா இயக்கத்தில் உருவான இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்ற படத்தின் மூலம் மீண்டும் நாயகனாக நடித்தார். தொடர்ந்து காமெடி மற்றும் கதையின் நாயகன் என்று நடித்து வந்தார் வடிவேலு.

2017-ம் ஆண்டு நடிகர் விஜயின் நடிப்பில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவான மெர்சல் படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து சுமார் 5 ஆண்டுகள் அவர் எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை. பின்பு இயக்குநர் சூரஜ் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் வந்தாலும் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

அதனை தொடர்ந்து கடந்த 2023-ம் ஆண்டு இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி நடிப்பில் வெளியான மாமன்னன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார் வடிவேலு. முற்றிலும் வேறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்த வடிவேலுவின் நடிப்பு ரசிகரக்ளிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் இயக்குநர் சுரேஷ் நடிகர் வடிவேலு குறித்து பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில், இயக்குநர் சுரேஷ் இயக்கத்தில் நடிகர் சரத்குமார் நாயகனாக நடித்த அரசு படத்தில் வடிவேலு வேண்டா வெறுப்பாக நடித்ததாக தெரிவித்துள்ளார். அதில் முதலில் விவேக்கிடம் நடிக்க கேட்டதாகவும் அவர் சம்மதிக்காததால் வடிவேலுவை நடிக்க வைத்ததாகவும் தெரிவித்தார்.

அந்தப் படத்தில் நடிகர் வடிவேலுவின் காமெடி இல்லாமல் இயக்குநர் சுரேஷ் எழுதிய காமெடியில் நடிக்க வேண்டும் என்று கூறியது வடிவேலுக்கு விருப்பமே இல்லை என்றும் வேண்டா வெறுப்பாக அந்தப் படத்தில் நடித்து முடித்தார் என்று இயக்குநர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.