Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Sundar C: ஷூட்டிங்கில் நடந்ததே வேற.. சுந்தர்.சியை கடுப்பேற்றிய பிரபல நடிகர்!

Director Sundar C : தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், இயக்குநராகவும் பணியாற்றி வருபவர் சுந்தர் சி. இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கேங்கர்ஸ். இதில் சுந்தர் சி மற்றும் வடிவேலு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ள நிலையில், அதை தொடர்ந்து நேர்காணல் ஒன்றில் பேசிய சுந்தர் சி தனது இயக்கத்தில் நடித்து ஹிட்டாகி பின், தன்னையே மதிக்காத நடிகர் குறித்து ஓபனாக பேசியுள்ளார்.

Sundar C: ஷூட்டிங்கில் நடந்ததே வேற.. சுந்தர்.சியை கடுப்பேற்றிய பிரபல நடிகர்!
சுந்தர் சி
barath-murugan
Barath Murugan | Updated On: 21 Apr 2025 16:49 PM

தமிழ் சினிமாவில் இயக்குநர் சுந்தர் சியின்  (Sundar C) படங்கள் என்றால் நமது நினைவிற்கு வருவது நகைச்சுவை மற்றும் ஹாரர் படம்தான். அந்த அளவிற்கு இவரின் படங்களுக்குத் தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இவரின் இயக்கத்தில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் கேங்கர்ஸ் (Gangers). இந்த திரைப்படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் வடிவேலு (Vadivelu) முக்கிய ரோலில் நடித்துள்ளார். நடிகர் வடிவேலு மற்றும் சுந்தர் சியின் காமினேஷனில் பல ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.  முற்றிலும் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படமானது வரும் 2025, ஏப்ரல் 24ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ஹிட்டாகி வருகிறது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் சிறப்பாக நடந்து வருகிறது.

மேலும் சமீபத்தில் இயக்குநர் சுந்தர் சி மற்றும் வடிவேலு மற்றும் கேத்ரின் தெரசா (Catherine Teresa)  என கேங்கர்ஸ் படத்தின் நடிகர்கள் நேர்காணலில் கலந்துகொண்டு வருகின்றனர். இதில் இயக்குநர் சுந்தர் சி சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். அதில் அவர் நடிப்பதற்குக் காரணமாக இருந்தவர் குறித்தும், தனது படத்தில் நடித்து ஹிட்டான நடிகர் பின், தனது படத்தில் நடிப்பதற்குப் பல கேள்விகள் கேட்டது குறித்தும் அவர் பேசியுள்ளார்.

நேர்காணலில் சுந்தர் சி சொன்ன விஷயம் :

இயக்குநர் சுந்தர் சி பேசிய விஷயம் , “அப்போது ஒரு நடிகருக்குச் சுத்தமாக மார்க்கெட்டே இல்லை, அவரை எனது படத்தில் நடிக்கவைத்தேன். அந்த திரைப்படமானது எதிர்பார்த்ததைவிட ஹிட்டாகி வெற்றி பெற்றது. அந்த படத்தைத் தொடர்ந்து அந்த நடிகரும் மிகவும் பிரபலமானார், தற்போதுவரை மிகவும் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். பின் அந்த நடிகருடன் மீண்டும் திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்து. அந்த படத்தில் நடிக்கும்போது, ஒரு ஒரு காட்சிக்கும் 100 கேள்வி கேட்டார். மேலும் என்னிடம் ஆட்டிடியூட் காட்டினார். அவர் அவ்வாறு செய்த போது எனக்குப் படத்தை இயக்குவதற்கு மனசே இல்லாமல் போச்சு.

அதைத் தொடர்ந்துதான் எனது தயாரிப்பில், இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகி வந்தது. அந்த படத்தில் முதலில் வேறு நடிகர்தான் ஒருவர் நடிக்கவிருந்தார். நான் நடிக்கவேண்டும் என்பதற்காக அந்த படத்தில் நடிக்கவில்லை. அந்த படத்தின் முடிவில் மேக்கப் மேனிடம் கூறினேன், இதுதான் எனது கடைசி மேக்கப்பாக இருக்கும் என்று, ஆனால் நான் இதுவரை சுமார் 20 வருடங்களுக்கும் மேலாகப் படங்களில் நடித்து வருகிறேன் என இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி கூறியுள்ளார்.

திருச்சி: கட்டிலில் படுத்திருந்த மகனை எரித்துக்கொன்ற தாய்..
திருச்சி: கட்டிலில் படுத்திருந்த மகனை எரித்துக்கொன்ற தாய்.....
சரியான தர்பூசணியை தேர்ந்தெடுப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!
சரியான தர்பூசணியை தேர்ந்தெடுப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!...
ஒரே நாளில் மோதும் சுந்தர் சி மற்றும் மிர்ச்சி சிவாவின் படங்கள்...
ஒரே நாளில் மோதும் சுந்தர் சி மற்றும் மிர்ச்சி சிவாவின் படங்கள்......
பல கோடிகளுக்கு ஜன நாயகன் பட தமிழக உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்?
பல கோடிகளுக்கு ஜன நாயகன் பட தமிழக உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்?...
அட்சய திரிதியை நாளில் கல் உப்பு வாங்க மறக்காதீங்க!
அட்சய திரிதியை நாளில் கல் உப்பு வாங்க மறக்காதீங்க!...
சம்மரில் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் - எப்படி தவிர்ப்பது?
சம்மரில் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் - எப்படி தவிர்ப்பது?...
10ம் வகுப்பு தேர்வில் குழப்பம்! அட்டெண்ட் செய்திருந்தால் மார்க்!
10ம் வகுப்பு தேர்வில் குழப்பம்! அட்டெண்ட் செய்திருந்தால் மார்க்!...
அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்?
அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்?...
வாரத்தின் 7 நாட்கள்.. எந்த நாளில் எந்த கடவுளை வணங்கினால் சிறப்பு?
வாரத்தின் 7 நாட்கள்.. எந்த நாளில் எந்த கடவுளை வணங்கினால் சிறப்பு?...
பிளே ஆஃப் இல்லையா? அடுத்த ஆண்டு இதுதான் திட்டம் - எம்.எஸ் தோனி
பிளே ஆஃப் இல்லையா? அடுத்த ஆண்டு இதுதான் திட்டம் - எம்.எஸ் தோனி...
ரவி மோகனின் இளமையின் ரகசியம் இதுதானா? அவரே கொடுத்த டிப்ஸ்!
ரவி மோகனின் இளமையின் ரகசியம் இதுதானா? அவரே கொடுத்த டிப்ஸ்!...